Wednesday, 27 April 2022

கதை சொல்லும் குரான் கதை 26 பெண்ணியம் j 5 சுராஹ் 4 அந்நிஸா பெண்கள் ) வசனம் 24---147

 கதை சொல்லும் குரான்

கதை 26
பெண்ணியம்
j 5 சுராஹ் 4 அந்நிஸா பெண்கள் )
வசனம் 24---147
பெண்களுக்க் சொத்துரிமை20 ஆம் நூற்றாண்டின் புரட்சிக் கருத்தாகவும் புதுமைக் கருத்தாகவும் உதித்த ஓன்று
ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே சொத்தில் பெண்கள் பங்குக்கு வழி வகுத்து அதற்கு சட்ட வடிவும் கொடுத்து விட்டது குரான்
இது மட்டுமல்ல
துணைவனை இழந்த பெண்கள் தங்கள் விருப்பம்போல் மறுமணம் செய்து கொள்ளும் உரிமை
தீண்டாமை ஒழிப்பு
என பல புதுமைகள் கொண்டது இஸ்லாம்
இறைவன் உங்களுக்கு எல்லாவற்றையும் தெளிவாக எடுத்துச் சொல்லி உங்கள முன்னோர்களில் நல்வழிபடுத்தப்பட்டோர் போல் உங்களையும் நல்வழிப்படுத்தவே விரும்புகிறான்
எல்லாம் அறிந்த பேரறிவாளனானஇறைவன் உங்களுக்கு கருணை காட்டவே விரும்புகிறான் . ஆனால் தங்கள் மனம்போன போக்கில் போவோர் உங்களையும் வழி கெடுத்து விடுவர் (4:26,27)
(இங்கு வழி கெடுப்போர் எனப்படுவோர் பழமையிலும் மூட நம்பிக்கைகளிலும் ஊறிப் போயிருந்த அரபியர்கள்
அவர்களின் பழமைக்கு முற்றிலும் எதிராக இஸ்லாம் கொண்டுவந்த சீர்திருத்தங்களை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை
எடுத்துக்காடாக சில சீர் திருத்தங்கள்
பெண் மக்களுக்கு சொத்தில் பங்கு
துணைவனை இழந்த பெண்கள் காத்திருப்புக் காலம் முடிந்த பின் தங்கள் விருப்பம் போல் திருமணம் செய்து கொள்ள அனுமதி
(சுருக்கமாக விதவைத் திருமணம் )
ஒரே நேரத்தில் சகோதரிகள் இருவரை மணமுடிக்கத் தடை
------அதாவது துணைவியின் உடன்பிறந்த சகோதரியை மணமுடிக்கத் தடை --
தங்கள் மூட நம்பிக்கைகளுக்கு குரான் சட்ட பூர்வ அங்கீகாரம் கொடுக்கும் என்று எதிர்பார்த்திருந்த அவர்களுக்கு இந்த புரட்சிக் கருத்துக்களை . வெளிப்படைத் தன்மையை ஒப்புக்கொள்ள முடியவில்லை
எடுத்துக்காட்டாக
சுத்தமில்லாத பெண்களை தீண்டத் தகாதவர் போல் ஒதுக்கி வைப்பது யூதர்கள் வழக்கம்
ஆனல் இஸ்லாம் அந்த நேரத்தில் குடும்ப உறவை மட்டுமே தடை செய்கிறது
சுராஹ் 4அந்நிஸா
176 வசனங்கள் கொண்ட ,குரானின் பெரிய சூராகளில் ஒன்றான பெண்கள் என்ற பெயர் கொண்ட சூராவின் ஒரு பகுதி பற்றி இன்று பார்க்கிறோம் (வசனம் 24 –147) ஜூஸு5
மதினாவில் இறக்கப்பட்டஇந்த சூராவில் இஸ்லாமிய சட்டங்கள், பெண்கள் போன்ற பல்வேறு செய்திகள் சொல்லப்படுகின்ற்றன்
அவற்றில் ஒரு சில பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்
குரானின் மையக் கருத்துகளில் ஓன்று மக்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வது
ஆனால் அந்த அச்சமூட்டும் எச்சரிக்கைகளின் நோக்கம் எல்லையற்ற கருணை கொண்ட இறைவன் மக்களை நல்வழிப் படுத்தி மறுமையில் கண்ணியம் மிக்க சுவனபதிக்குள் நுழைய வைப்பதே என்பதை முதலில் சொன்ன வசனங்களில் பார்த்தோம்
தொடர்ந்து இறைவன் சொல்கிறான்
மனிதன் வலிமை குன்றியவனாகவே படைக்கப் பட்டிருக்கிறான்
எனவே இறைவன் உங்கள் சுமையை எளிதாக்கவே விரும்புகிறான் (4:28)
நீங்கள் பெரும்பாவங்களைத் தவிர்த்து விட்டால் உங்கள் சிறிய பாவங்களை நாம் மன்னித்து உங்களை நல்ல இருப்பிடத்தில் நுழைவிப்போம் (4:31)
(பெரிய பாவங்கள் ஒரு சிறிய விளக்கம்
1. உரிமை மீறல் – இறைவனின் உரிமை. பெற்றோரின் உரிமை
மற்ற மனிதர்கள் ,தன் உரிமை இவற்றை மீறுவது
2. இறையச்சம் இன்மை இறைவனை அலட்சியப் படுத்துதல்
3. .அமைதியும் சமாதானமும் நிறைந்த வாழ்க்கைக்கு அடிப்படையான தளைகள் உறவுகளை அறுத்து எறிதல் –இங்கும் இறைவன் மனிதனுக்கு இடையிலான உறவு,
மனிதர்களுக்கு இடையிலான உறவு
இந்த மூன்றும் பெரும்பாவங்கள் என்பது அறிஞர்கள் விளக்கம்
இறைவன் பிறருக்கு அள்ளிக் கொடுத்திருக்கும் செல்வங்களைப்பார்த்து அதன் மேல் ஆசை கொள்ளாதீர்கள்
அவரவருக்கு உரிய செல்வத் தை இறைவன் குறைவில்லாமல் கொடுத்து விடுவான்
ஊங்கள் தேவைகளுக்கு எல்லாம் அறிந்த இறைவனிடம் கேளுங்கள் (4:32)
பெற்றோர் , நெருங்கிய உறவினைர்கள் விட்டுச் சென்ற சொத்துக்களுக்கு வாரிசுகளை நாமே நிர்ணயித்துள்ளோம்
வேறு யாரிடமாவது உடன் படிக்கை செய்திருந்தால் அதை நிறைவேற்றுங்கள்
இறைவன் எல்லாவற்றையும் கவனிக்கிறான் (4:33)
விளக்கம்
பண்டைய அரபு நாட்டு வழக்கப்படி கூட்டாளிகளும் நண்பர்களும் ,தத்தெடுக்கபட்ட ஆண்பிள்ளைக்ளும் சொத்துக்கு வாரிசானார்கள்
இவற்றை எல்லாம் இஸ்லாம் ஒழித்துக் கட்டியது
இறைவன் நிர்ணயித்த முறையிலேயே சொத்து பங்கீடு செய்ய வேண்டும்
வேறு யாருக்காவது பங்கு கொடுப்பதாய் வாக்குக் கொடுத்திருந்தால்
அதன் படி
தன வாழ்நாளில் கொடுக்க .
உரிமை சொத்தின் உடமையாளருக்கு உண்டு
.
இறைவனை மட்டுமே வணங்குங்கள் .
யாரோடும் அவனை சேர்க்காதீர்கள்
உங்கள் பெற்றோருக்கு . உற்றார் உறவினருக்கு .
ஆதரவற்ற அனாதைகளுக்கு
தேவை உள்ளவர்களுக்கு
உங்களை அடுத்து உள்ளவருக்கு – அவர் உறவினராக இருந்தாலும் இல்லாவிட்டாலும்
அருகில் இருக்கும் நண்பர்கள்
வழிப்போக்கர்கள்
உங்கள் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள்
என அனைவருகும் நல்லதே செய்யுங்கள்
செருக்கு ,பெருமை கொண்டோரை இறைவன் நேசிப்பதில்லை (4:36)
அருகில் இருக்கும் நண்பர்கள்
என்பதற்கு அறிஞர்கள் சொல்லும் விளக்கம்
“ உங்களுடன் நீடித்த நட்பில் உள்ளவர்கள் மட்டுமல்லாது
முன் பின் தெரியாத அறிமுகமல்லாத
உங்கள் உடன் பயணிப்போர்
தெருவில் நடந்து செல்லும்போது உங்கள் முன் ,பின் ,அருகில் நடப்போர்
ஒரு பொது இடத்தில் உங்கள் அருகில் அமர்ந்திருப்போர்
எனப் பலரையும் குறிக்கிறது
எல்லோருக்கும் நல்லவராய் இருக்க முய்ற்சியுங்கள் என்பதே இதன் சுருக்கம்
கஞ்சத் தனம் செய்து பிறரையும் கஞ்சனக்க முயன்று இறைவன் அருளிய செல்வத்தை மறைத்து வைப்போருக்கு ஒரு கடும் தண்டனை காத்திருக்கிறது (4:37)
இறைவனில் , மறுமை நாளில் நம்பிக்கை கொள்ளாமல்
பிறர் பார்த்து மெச்ச வேண்டும் என்பதற்காக வீண் ஆடம்பர செலவு செய்வோரை இறைவன் நேசிப்பதில்லை ------(4:38)
நீங்கள் எங்கிருந்தாலும்
வலிமை மிக்க உயரமான பாதுகாப்பான இடங்களில்இருந்தாலும்
மரணம் உங்களை வென்றே தீரும்
உங்களுக்கு யாராவது வாழ்த்து சலாம் சொன்னால்
அதை விட நல்ல முறையில்
அல்லது அவர்கள் சொன்னது போலாவது
மறுமொழி சொல்லுங்கள் (4:86)
வசனம் 101-104 பயணத்தில் தொழுகையை சுருக்குதல் பற்றிச் சொல்கிறது
s
நம்பிக்கை கொண்டவர்களே , நீதியை நிலை நிறுத்துங்கள் (
இறைவனின் பொருட்டு உண்மைக்கே சான்று சொல்லுங்கள் –
அது உங்களுக்கோ, உங்கள் பெற்றோருக்கோ ,உங்கள் உறவினருக்கோ செல்வந்தற்கோ ,வரியவற்கோ
யாருக்கு எதிராக இருந்தாலும் சரியே
உங்களை விட அவர்கள் நலனில் இறைவன் அதிக அக்கறை உள்ளவனாக இருக்கிறான்
உங்கள் மனம்போன போக்கில் நீங்கள் உண்மையை விட்டு விலகினால் உங்கள் செயல்கள் அனைத்தையும் இறைவன் அறிவான் என்பதை நினைவில் நிறுத்துங்கள் (4:135)
இறைவன் நாடினால் நாளை கதை சொல்லும் குர்ஆனில் சிந்திப்போம்
26ரமலான் 1443
28042022வியாழன்
சர்புதீன் பீ
No photo description available.
Like
Comment
Share

No comments:

Post a Comment