கதை சொல்லும் குரான்
கதை 16
குகை மனிதர்கள்
சுராஹ் 18 அல் கஹ்ப் (குகை) j 15
---------------நீங்கள் அவர்களை சற்று எட்டிப்பார்த்திருநதால் திகிலில் அச்,சத்தில் விரண்டு ஒடியிருப்பீர்கள் (18:18)
திருமறை சுராஹ் அல் கஹ்புவசனம் (18:18) டின் பிற்பகுதி இது
திகில் ! அச்சம் !! எதனால், எப்படி ?
முதலில் வசனத்தை முழுதாகப் பார்ப்போம்
உண்மையில் தூங்கிக் கொண்டிருக்கும் அவர்களை நீங்கள் பார்த்தால் அவர்கள்கண் விழித்திருக்கிறார்கள் என்றே நினைப்பீர்கள்
நாம் அவர்களை வலது புறமும் இடது புறமுமாகப் புரட்டிக்கொண்டே இருந்தோம்
அவர்களுடைய நாய் குகை வாசலில் தன் முன்னங்கால்களை விரித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தது
---------------நீங்கள் அவர்களை சற்று எட்டிப்பார்த்திருநதால் திகிலில் அச்,சத்தில் விரண்டு ஒடியிருப்பீர்கள் (18:18)
குகை என்ற பொருள் கொண்ட இந்த சுராவில் குகை மனிதர்கள் பற்றிச சொல்லி திகிலையும் இறையச்சதையும் நம் நெஞ்சில் விதைக்கிறான் இறைவன்
இதன் பின்னணியில் உள்ள கதை, வரலாறு தெரிந்தால்தான் இந்த சூராவை, குகை மனிதர்கள் கதையை ஓரளவு புரிந்து கொள்ள முடியும்
ஏக இறை நம்பிக்கை என்பது முழவதும் மறந்து, மறைந்து போய் அனாசசாரங்கள் மூட நம்பிக்கைகள் மலிந்திருந்த காலம்
மூட நம்பிக்கையை விட்டு விலகுவதே தவறு, தண்டனைக்குரிய குற்றம் என்ற எண்ணம் வேரூன்றிஇருந்தது
ஏக இறை நம்பிக்கை உள்ள வெகு சிலர் – சில இளைஞர்கள் இதை வெறுத்து , இங்கிருந்தால் நாமும் இப்படி மாறினாலும் மாறிவிடுவோம் என்று அஞ்சியும் , கொடிய தண்டனையிலிருந்து தப்பிக்கவும் ஊரை விட்டு வெளியேற முடிவு செய்கிறார்கள்
ஒருவொருக்கொருவர் அறிமுகம் கிடையாது ; ஆனால் எல்லோரும் வசதியான , பெரிய இடத்துப் பிள்ளைகள் .
அவர்களின் உண்மைக் கதையை நாம் உங்களுக்கு எடுத்துச் சொல்கிறோம் (நபியே)
நிச்சயமாக அவர்கள் தம் இறைவன் மீது நம்பிக்கை கொண்டிருந்த இளைஞர்கள் . நாம் அவர்களை நேர்வழியில் மேலும் முன்னேற செய்தோம் 1.(18 :13)
ப்ப்ப்ப்
ஊரில் ஒரு திருவிழா .அதை , அங்கு கடைப்பிடிக்கப்பட்ட மூடப் பழக்கங்களை வெறுத்த இளைஞர் ஒருவர் ஊரை விட்டு வெளியேறி ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருந்தார் . அதன் பின் இன்னொருவர் – இப்படி அனைவாரும் வெளியேறி அங்கே ஓன்று கூடினர்
முன்பு பார்த்கிராவிட்டாலும் ஒத்த நோக்கம் , கொள்கை கொண்ட அவர்கள் அனைவரும் இறைவனருளால் ஒருவரை ஒருவர் அறிந்து புரிந்து கொண்டனர்
அவர்கள் எழுந்து
“வானங்களுக்கும் பூமிக்கும் அதிபதியான ஏக இறைவனே எங்கள் இறைவன்
அவனை விடுத்து வேறெந்தக் கடவுளையும் நாங்கள் அழைக்கமாட்டோம்“
என்று துணிந்து அறிவித்தஅவர்களின் உள்ளங்களை நாம் திடப்படுத்தினோம் “(18-14, 15)
ஊரை விட்டு வெகு தொலைவு போக்பயணிகிறார்கள் . அவர்களுடன் வந்த நாய் ஒன்றும் திருமறையில் சொல்லப்படும் சிறப்பைப் பெறுகிறது .
களைப்பு ,,தூக்கம் மேலிட ஒரு குகைக்குள் நுழைகிறார்கள் .இறைவனின் கருணையையும் பாதுகாப்பையும் வேண்டுகிறார்கள்
இளைஞர்கள் சிலர் குகையில் தஞ்சம் புகுந்தபோது
“எங்கள் இறைவனே உன்னுடைய கருணையையு வழங்கி எங்கள் செயல்களை ஒழுங்கு படுத்தித் தருவாயாக (18:10)
தன்னிடம் தஞ்சம் புகுந்தவர்களுக்கு இறைவன் ஒரு அற்புதமான தூக்கத்தையும் பாதுகாப்பையும் வழங்குகிறான்
நாள் கணக்கு, மாதக்கணக்கு , ஆண்டுக்கனக்கெல்லாம் மனிதர்களுக்குத்தான்
இறைவன் வழங்கியது பல நூற்றாண்டுகள் நீடித்த தூக்கம்
(இளைஞகர்கள் ஏழு பேர்
அவர்கள் தூங்கியது 309 ஆண்டுகள் –ஆம் 3 நூற்றாண்டுக்கு மேல் –
என்று சொல்லப்பட்டாலும் இவை இரண்டும் இறைவனால் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை
அது அவனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் )
நபியே கூறுங்கள் “அவர்களுடைய சரியான எண்ணிக்கை இறைவனுக்கு மட்டுமே தெரியும் எனவே அது பற்றி யாரிடமும் தர்க்கம் செய்யவேண்டாம் விசாரிக்க வேண்டாம் “ என எச்சரிக்கிறான் இறைவன் (18:22).
தூக்கத்தை மட்டுமல்லாது , தகுந்த பாதுகாப்பையும் இறைவன் வழங்குகிறான்
வடக்கு நோக்கி வாசல் இருந்த அந்தக் குகையில் வெய்யில் படும் இடத்திற்கேற்ப அவர்களைப் புரண்டு புரண்டு இடம் மாறிப் படுக்க வைக்கிறான்
யாராவது எட்டிப்ப்பார்த்தால் அவர்கள் தூங்குகிறார்களா என்ற ஐயமும் அச்சமும் உண்டாகும்
போதாக்குறைக்கு வாசலில் நாய் வேறு
வெருண்டு ஓடி விடுவார்கள் எட்டிப்பார்பவர்கள்
அவர்களைப் பல ஆண்டுகள் குகையில் தூங்க வைத்தோம்(18:11)
சூரியன் உதிக்கும்போது அவர்கள் குகயை விட்டு விலகி வலது பக்கமாய் உயர்வதையும் , அது மறையும்பொது அவர்களை விட்டு விலகி இடது பக்கமாய் தாழ்வதையும் காண்பீர்
இது இறைவனின் சான்றுகளில் ஒன்றாகும் (18:17)
குகை வடக்கு நோக்கி இருந்ததால் சூரிய ஒளி நேராக உள்ளே புக் முடியாது எனவே எட்டிப்பார்ப்பவர்களுக்கு உள்ளே மனிதர்கள் இருப்பது தெளிவாகத் தெரியாது என்பது இதன் விளக்கம்
அதே போல அற்புதமான முறையில் அவர்களை தூக்கத்தில் இருந்து எழுப்பினோம்
எழுந்து ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டனர்
“எவ்வளவு காலம் இந்த தூக்க நிலையில் இருந்தோம் ?”
ஒரு நாள் அல்லது அதன் பகுதியைக இருக்கலாம் “ இதுஇன்னொருவர்
“ இறைவனே அதை நன்கறிவான்
இப்போது நம்மில் ஒருவர் அருகில் உள்ள நகருக்குப் போய் நம்மிடம் இருக்கும் பணத்தில் நல்ல உணவும் தேவையான மற்ற பொருட்களும் வாங்கி வரட்டும்
நம் இருப்பிடம் யாருக்கும் தெரியாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் (18:19)
.
இப்படியாக அவ்ர்களைபற்றி நகர் மக்கள் அறியும்படி செய்தோம்
இந்த நிகழ்வின் மூலம் மக்களுக்கு நாம் சொல்வது
இறைவனின் வாக்குறுதி என்றும் உண்மையானது
மறுமை நாள் வந்தே தீரும் என்பது
ஆனால் மக்களோ அது பற்றிய சிந்தனை இல்லாமல் இங்கு சுவர் எழுப்புவோமா.ஆலயம் அமைப்போமா என்று சிந்திக்கிறார்கள் (18:21)
விளக்கம்
உணவு வாங்கப்போனவர் ஒரு கடையில் பபோய் விசாரிக்க வ்ந்தவரின் உடை, மொழி , அவர் கொடுத்த காசு எல்லாமே மிகவும் மறுபட்டிருந்ததை உணர்ந்து அருகில் உள்ளவர்கள் துணையோடு அரசரிடம் அழைத்துச் சென்றார்
300 ஆண்டுகளுக்கு முன் தங்கள் இறை நம்பிக்கையை தக்க வைத்துக்கொள்வதற்காக ஊரை விட்டு ஓடியவர்களில் ஒருவர்தான் இவர் என்பதை அரசர் புரிந்து கொண்டார்
இந்த 300 ஆண்டு இடைவெளியில் அந்த நாட்டில் கிறித்தவ மதம் நம் நன்கு பரவிவிட்டது
எனவே குகை மனித்ர்களைபார்க்க பெரும் கூட்டம் கூடி விடுகிறது
தங்கள் கிறித்தவ சகோதரர்களுக்கு வாழ்த்தும் முகமனும் சொல்லி விட்டு
படுக்கிறார்கள்
உடனே குகை மனிதர்களின் உயிர் பிரிந்து விடுகிறது
சுராஹ் 18அல் கஹ்ப் (குகை --- வசனம் 9ல் வரும் சொல்))110 வசனங்கள்
இதில் வரும் மற்ற சில் செய்திகள்
மூசா நபி, -கிசர் (Khizer) கதை
துல் கர்னைன்( Zul-Qarnain) கதை
“இறைவன் நாடினால்” என்று சொல்லாமல்
“ நான் நாளை இதை செய்து விடுவேன் “
என்று சொல்வது தவறு என்பது வலியுறுத்திச் சொல்லப்படுகிறது
நபி பெருமானும் ஒரு சாதாரண மனிதரே என்பது நிறைவுக் கருத்தாய் வருகிறது
இறைவன் நாடினால் நாளை குரான் சொல்லும் கதையில் சிந்திப்போம்
16ரமலான் 1443
18022022திங்கள்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment