கதை சொல்லும் குரான்
கதை 24
அறிந்து கொண்டால் அவன்தான் ---
j7
நீங்கள் சொல்லுவது உண்மை என்றால் உங்களுக்கு ஏன் அற்புதங்கள்
இறக்கிவைக்கப்படவில்லை ?
என்ன சான்றுகால் இருக்கின்றன நீங்கள் சொல்வதை நாங்கள் நம்புவதற்கு?
நபி பெருமாநைப்பார்த்து ஏக இறை மறுப்பாளர்கள் கேலியாகத் தொடுக்கும் வினாக்கள்
இது போன்ற வினைக்களுக்கு இறைவனே திருமறையில் பல இடங்களில் விடை சொல்கிறான்
அறிவுடையவருக்கு, , அறிவைக்கொண்டு சிந்திப்பவருக்கு உலகெங்கும் சான்றுகள் பரவிக்கிடக்கின்றன அவற்றைப் பார்க்காதது , பார்த்து உணர மறுப்பது அவர்கள் தவறு
கட்டாந்தரையாகக் காய்ந்து கிடக்கும் இடம் ஒரு மழை பெய்தவுடன் பச்சைபசேல் என மாறுவது
வானத்தில் சிறகை விரித்தும் மடக்கியும் உயரப் பறக்கும் பறவைகள்
விலங்குகள் கொடுக்கும் பால்
தேனீக்கள் கொடுக்கும் தேன்
இடைவெளியிள்ளாமல் ஒழுங்காகப் படைக்கப்பட்ட வானம்
இது போன்ற எண்ணற்ற சான்றுகளை இறைவன் திருமறையில் பல இடங்களில் சுட்டிக் காட்டுகிறான்
இப்படிப் பரவிக்கிடக்கும் எண்ணற்ற சான்றுகளில் சிலவற்றின் தொகுப்பு சுராஹ் 6 அல் அன் ஆமில் வருகிறது
உண்மையாக தானியங்களையும் பழத்தில்உள்ள பருப்பையும் வெடிக்கச செய்பவன் இறைவனே
உயிர் அற்றவற்றில் இருந்து உயிர்உள்ளவற்றை உண்டாக்குபவனும்
உயிர் உள்ளவை யிளிருந்து உயிரர்வற்றைப் படைப்பவனும் அவனே
இப்படிப்பட்ட இறைவனை நம்பாமல் தீய வழியில் உங்களைக் கொண்டு செல்வது எது >6:95)
(களி மண்ணிலிருந்து மனிதனைப் படைத்தது போல உயிரற்ற பொருள்களில் இருந்து உயிரைப்படைக்கிறான் இறைவன்
அது போல் உயிர் உள்ளவற்றில் இருந்து இறந்து போன உயிர் அணுக்கள் (dead cells) போன்றவை வெளியேறுகின்றன )
அமைதியான ஓய்வுக்காக இரவைப் படைத்தவன் அவனே
இரவின் இருளை கிழித்து அகற்றி விடி வெள்ளி முளைக்கச் செய்தவனும் அவனே
நேரத்தைக் கணக்கிட சூரியனையும் நிலவையும் படைத்தவன் அவனே
பேரறிவாளனும் வல்லமை மிக்கவனுமாகிய இறைவன் நிர்ணயம் செய்தவை இவை (6:96)
இரவின் இருளில் கடலிலும் பூமியிலும் சரியான வழி அறிய விண்மீன்களைப் படைத்தவனும் அவனே அறிவுடைய சமுதாயம் அறிந்து கொள்ள நாம் சான்றுகளை விளக்குகிறோம்
(6:97)
.
)ஒரே ஒரு உயிரிலிருந்து உங்கள் அனைவரயும் படைத்தவன் அவனே
ஒவ்வொரு சமுதாயத்துக்கும் காலவரை நிர்ணயம் செய்து தங்கி ஓய்வெடுக்க ஒரு இடம் அமைத்தவனும் அவனே
புரிந்து கொள்பவர்கள் அறிந்து கொள்வதற்காக நாம் சான்றுகளை விளக்குகிறோம் (6:98 )
(மனித இனத்தின் படைப்பு ,ஆண் பெண் பிரிவு, தாய் வயிற்றில் உண்டாகும் கரு பல நிலைகலைக் கடந்து குழந்தயாக வெளியே வருவது பல பருவங்களைக் கடந்து மரணம் நேருவது
இப்படி ஒவ்வொரு நிகழ்விலும் இறைவன் பற்றிய சான்றுகள கொட்டிக் கிடக்கின்றன
இவற்றையெல்லாம் கண்டு, இறைவனின் மாட்சிமையைப் புரிந்து கொள்ள அறிவும் சிந்திக்கும் திறனும் தேவை )
و
வானங்களில் இருந்து மழை நீரை அனுப்புபவனும் அவனே
அந்த நீரின் மூலம் எல்லா வகையான தாவரங்களையும் உண்டாக்கினோம்
பசுமையான பயிர்களை உண்டாக்கி நிறைய மணிகள் கொண்ட சோளக் கதிர்களைமுளைக்கச் செய்தோம்
மரத்தின் பாளையிலிருந்து கொத்துக் கொத்தான பேரீச்சம் பழக் குலைகள் தொங்கும் படி செய்தோம்
திராட்சைத்தோட்டங்கள் , ஆலிவ் மரங்கள், மாதுளை
எல்லாம் ஒரே மாதிரியாகத் தோன்றினாலும் வேறு வேறானவை
அவற்றில் பழம் பழுத்து கனிவதைப் பாருங்கள்
நம்பிக்கை கொண்டோருக்கு இவற்றில் எல்லாம் சான்றுகள் இருக்கின்றன 6:99)
ஜூஸு7
இதுவும் இரண்டு சூராகளின் பகுதிகளைக் கொண்டது
சுராஹ் 5அல் மாயிதா (உணவுத் தட்டு table spread)
சுராஹ் 6 அல் அன் ஆம் (கால்நடைகள் )
மிகப்பல செய்திகள் சொல்லும் இந்தப் பகுதியில் இருந்து இன்னும் ஒன்றிரண்டைப் பார்ப்போம்
ஈசா நபியின் சீடர்கள் அவரிடம் “ உங்கள் இறைவன் எங்களுக்கு பல்சுவை விருந்து ஒன்றை வானத்திலிருந்து இறக்கி வைக்க முடியுமா ?” எனக்கேட்டதை நினைவு கூறுங்கள்
அதற்கு ஈசா நபியவர்கள் “ நீங்கள் உண்மையில் இறைவன் மேல் நம்பிக்கை கொண்டிருந்தால் அவனுக்கு அஞ்சுங்கள் “என்று சொன்னர்கள் (5:112)
(குறிப்பு : ஈசா நபி பற்றிக்குறிப்பிடும்போதெல்லாம்
மரியமின் மகன் ஈசா
என்றே இறைவன் குறிப்புடுகிறான் )
மேலும் சீடர்கள் சொன்னார்கள் “எங்கள் உள்ளம் சாந்தி அடைய நாங்கள் அந்த உணவுகளை சுவைக்க விரும்புகிறோம்
நீங்கள் உண்மையே பேசுகிறீர்கள் என்பதை நாங்கள் அறிவோம் அதற்கு நாங்கள் சான்று பகர்வோம் (5:113)
ٓ
ஈசா நபியவர்கள் இறைவனிடம் வேண்டினார்கள்:
இறைவா –எங்களுக்கு ஒரு உணவுத்தட்டை அனுப்பி வைப்பாயாக
அது எங்களுக்கும், எங்கள் காலத்தில் வாழ்பவர்களுக்கும் இனி வரக்கூடியவர்களுக்கும் ஒரு மகிழ்ச்சியை உண்டாகும்
மேலும் உங்களிடமிருந்து வந்த ஒரு சான்றாகவும் அது விளங்கும்
எங்களுக்கு உணவு வழங்குவதில் மிகச் சிறந்தவன் நீயே (5:114)
இறைவன் சொன்னான் “ நிச்சயமாக நான் அனுப்பி வைக்கிறேன்
உங்களில் யார் இறை மறுப்பாளர்களோ அவர்களை நான் கடுமையாக –இது வரை உலகில் யாரையும் தண்டித்ததை விடக் கடுமையாக—தண்டிப்பேன் “(5:115)
(விருந்து உணவுத் தட்டு இறங்கியதா என்பது பற்றி குர்ஆனில் எந்தத் தகவலும் இல்லை .
கடுமையான எச்சரிக்கைக்கு அஞ்சி , சீடர்களே விருந்து வேண்டாம் என சொல்லியிருக்கலாம் )
வசனம் 5:113இல் வரும் அல் மாயிதா (உணவுத் தட்டு ) என்ற சொல் இந்த சூராவின் பெயராக அமைந்துள்ளது
இறைவன் நாடினால் நாளை கதை சொல்லும் குர்ஆனில் சிந்திப்போம்
24ரமலான் 1443
26042022செவ்வாய்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment