Wednesday, 6 April 2022

கதை சொல்லும் குரான் கதை 5 பகைவனுக்கும் கருணை சுராஹ் 46அல் அஹ்காப்

 கதை சொல்லும் குரான்

கதை 5
பகைவனுக்கும் கருணை j26
“----------(நபியே) நீங்களும் பொறுமையைக் கடைப்பிடியுங்கள் –மன உறுதி மிக்க இறைத் தூதர்கள் கடைப்பிடித்தது போன்று “
வழக்கமாக நபிக்கு இறைவன் சொல்லும் ஆறுதல்தான் இது
ஆனால் இப்போது அது ஒரு சிறப்பான ஆறுதல் மொழியாய் அமைகிறது
ஆம் நபி பெருமான் வாயால் இது துக்க ஆண்டு சென்று சொல்லும் அளவுக்கு அடுத்தடுத்து துன்பங்கள், துயரங்கள் ,இழப்புகள்
நபி பெருமான் நபித்துவம் பெற்ற பத்தாவது ஆண்டில் மக்கமா நகரில் அவருக்கு எதிர்ப்பு உச்ச கட்டத்தில் இருக்கிறது
அதன் விளைவாக அவரும், அவரது குடும்பதினரும் , குலத்தவரும் ஊரை விட்டு விலக்கப்ப்டுகிறார்கள் ;ஊருக்கு வெளியே குடி ஏறுகிறார்கள்.
அந்த இடத்துக்குச் செல்லும் எல்லா வழிகளையும் அடைத்து உணவு, தண்ணீர் எதுவும் கிடைக்காமல் செய்து விடுகிறார்கள் எதிரிகள்
ஒரு நாளல்ல , சில மாதங்கள் அல்ல , மூன்று ஆண்டுகள் இந்தக் கொடுமை நீடித்தது
இலை, புல்பூண்டை எல்லாம் சாப்பிடும் நிலை
ஒரு வழியாக இந்த ஊர் விலக்கு முடிந்தது
அதே ஆண்டில் நபி பெருமானுக்கு உற்ற பாதுகாவலராய் இருந்த அவரது பெரியப்பா அபு தாலிப்
அதற்கடுத்து நபியின் அருமைத் துணைவியார் அன்னை கதீஜா
இருவரும் மறைவு
தளர்ந்து போகிறது நபியின் மனம் .
பாதுகாப்பு வளையங்கள் இல்லை என்ற துணிவில் எதிரிகளின் தாக்குதல் இன்னும் குரூரமாகிறது
வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை நபி அவர்களுக்கு
மக்காவை விட்டுத் தாயிப் நகர் சென்று விடுவோம்.அங்குள்ள மக்கள் ஏக இறைக்கொள்கையை ஏற்றுக்கொள்ளலாம் .; இல்லாவிட்டாலும் கொஞ்சம் நிமம்தியாக வாழ இடம் கிடைக்கும் என மனதில் தோன்ற அங்கு புறப்பட்டுப் போகிறார்கள்
நபிகள் எண்ணத்துக்கு முற்றிலும் மாறாக இருந்தது தாயிப் நகரம் . நபி பெருமானின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ள மறுத்தனர் . “எங்கள்இளைஞர்கள் நெஞ்சில் நச்சை விதைத்து விடாதீர்கள் . உடனே ஊரை விட்டு வெளியேறுங்கள் என்று கட்டளை இட்டனர ஊர்த் தலைவர்கள்
வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சியது போல்நபி தாயிப் நகரிலிருந்து திரும்பி வரும் வழி நெடுக போக்கிலிகளை ஏவி விட்டு கல்லாலும் கடுஞ் சொல்லலும் அடிக்கச் செய்தனர் அவ்வூர் மக்கள்
உடல் , மனம் இரண்டிலும்ம் காயம் , வலி.
காலணி முழுக்க குருதிச் சிவப்பு
நொந்து போன நபியவர்கள் கிடைத்த ஒரு நிழலில் உட்கார அங்கு இறைவன் கட்டளைப்படி வானவர் தலைவன் ஜிப்ரில் தோன்றி
“நபியே ஒரு சொல் சொல்லுங்கள் . உங்களை துன்புறுத்திய அந்த ஊரையும் மக்களையும் அழித்து விட ஏற்பாடு செய்கிறேன், இது இறைவன் கட்டளை “ என்கிறார்
இரக்கமே உருவான நபி சொல்கிறார்
“ வேண்டாம் , இன்றில்லாவிட்டாலும் நாளை அடுத்த வழித் தோன்றலில் சிலராவது ஏக இறைக் கொள்கைக்கு மாறக்கூடும் “ என்கிறார்
மக்காவுக்குத் திரும்பும் வழியில் நக்சா என்ற இடத்தில் நபி அவர்கள் இரவுத் தொழுகை தொழுகும்போது அந்த வழியே வந்த ஜின் கூட்டம் நபிகள் குரான் ஓதுவதைக் காது கொடுத்துக் கேட்பதோடு தம் கூட்டத்தாரிடம் போய் நபிகளைப் பற்றியும் இஸ்லாம் பற்றியும் எடுத்துச் சொல்லி இஸ்லாத்தில் இணையச் சொல்கிறார்கள
ஜின்- இறைவன் படைப்பில் ஒருவகை . இவ்ர்களுக்கு மனிதர்களைப்போல் சிந்திக்கும் சக்தி உண்டு . நல்ல ஜின்கள் , கெட்ட ஜின்கள் உண்டு
இவர்கள் நம் கண்ணுக்குப் புலப்பட மாட்டார்கள் . அவர்கள் நம்மைப் பார்க்க முடியும்
எனவே ஜின் கூட்டம் குரான் ஓதுவதைக் கேட்டது , பின் மற்றவர்களிடம் இஸ்;லாம் பற்றி எடுத்துச் சொன்னது இதெல்லாம் நபி அவர்களுக்குத் தெரியாது
நபிக்கு ஆறுதல் சொல்லும் முகமாக இந்த நிகழ்ச்சியை இறைவன் நபிக்கு அறிவிக்கிறான்
சூராஹ் 46 அல் அஹ்காப் 35 வசனங்கள்
(அஹ்காப் என்பது மணல் குன்றுகளைக் குறிக்கும் . இங்கு அது ஒரு இடத்தின் பெயராக வருகிறது )
இந்த சூராவில் சொல்லப்படும் வேறு சில செய்திகள்
பெற்றோரை அன்பாக நடத்துபவர்களுக்கு அதற்குரிய நற்கூலி கிடைக்கும் . அப்படி நடத்தாதவர்களுக்கு தண்டனை உண்டு
இறை வழியை ஏற்க மறுத்த ஆத் சமுதாயம் அழிக்கபட்டது
சில வசனங்கள் :
“------நாம் ஒரு ஜின் கூட்டத்தை உம்பக்கம் கொண்டு வந்தோம் - ;அவை குரானைச் செவியுற வேண்டும் என்பதற்காக . அந்த இடத்திற்கு அவை வந்து சேர்ந்தபோது தங்களுக்குள் “ அமைதியாக இருங்கள் “என்று சொல்லிகொண்டன . பின்னர் அது ஓதி முடிக்கப்பட்டபோது அந்த ஜின்கள் தம் கூட்டத்தாரிடம் எச்சரிக்கை செய்யக் கூடியவர்களாய்த் திரும்பிச் சென்றனர் “ (54:29)
“ எனாவே நபியே நீரும் பொறுமையைக் கடைப் பிடிப்பீராக ! மன உறுதி மிக்க இறைத் தூதர்கள் கடைப்பிடித்த பொறுமையைப் போன்று ----“(54:35)
இறைவன் நாடினால் நாளை கதை சொல்லும் குரானில் சிந்திப்போம்
பிறை 5 ரமலான் 1443
07042022 வியாழன்
சர்புதீன் பீ
May be an image of sky
1 share
Like
Comment
Share

No comments:

Post a Comment