Sunday, 10 April 2022

கதை சொல்லும் குரான் கதை 9 காற்றும், மலையும் சுராஹ் 34 சபா

 கதை சொல்லும் குரான்

கதை 9 j22
காற்றும், மலையும்
‘வானளாவிய மாளிகைகள் சிற்பங்கள் ,நீர்நிலைகள் போன்ற பெருங் கொப்பரைகள் அசைக்க முடியாத பெரும் பாத்திரங்கள் என அவர் விரும்பியபடி அனைத்தையும் செய்து கொடுத்தன “
யார் யாருக்காக செய்தார்கள் ?
தொடர்ந்து பார்ப்போம்
‘வானளாவிய மாளிகைகள் சிற்பங்கள் ,நீர்நிலைகள் போன்ற பெருங் கொப்பரைகள் அசைக்க முடியாத பெரும் பாத்திரங்கள் என அவர் விரும்பியபடி அனைத்தயும் செய்து கொடுத்தன
தாவூதின் வழித் தோன்றல்களே நன்றி செலுத்துங்கள்.
என் அடியார்களில் மிகச்சிலரே உண்மையில் நன்றி செலுத்துகிறார்கள் (34:13)
( இந்த வசனத்தில் வரும் சிற்பங்கள் என்ற சொல் மிகப் பெரும் சர்ச்சை , விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது .
சுலைமான் நபி மிகச் சிறந்த இறைவன் அடியார் . அதனால்தான் அவருக்கு இறைவன் பலவற்றை அள்ளிக் கொடுத்திருக்கிறான்
கொப்பரைகள் , பாத்திரங்கள் அவரது விருந்தோம்பலுக்கு ஓர் எடுத்துக்காட்டு என்பர் அறிஞர்கள் .
பெரும் அளவில் சமையல் நடந்தாலும் நபி அவர்கள் பெரும்பாலும் நோன்பில்தான் இருப்பார்களாம்
மேலும் இறைவனே தன் திருமறையில் சொன்ன சொல் நிச்சயமாகத் தவறான சொல்லாக இருக்காது )
மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக இருக்கும் பழங்காலத்து மாளிகைகள் ,வழிபாட்டுத் தலங்கள் போன்றவற்றை பார்க்கும்போது நமக்குள் ஒரு வியப்பு ஏற்படுவது இயல்பு : எந்த பொறியர்திட்டமிட்டார், எந்தக் கலைஞர் வடிவமைத்தார் , என்ன எந்திரங்கள் பயன் படுத்தப்பட்டன , எத்தனை லட்சம் தொழிலாளிகள் பணியில் அமர்த்தப்பட்டனர் என்றெல்லாம் எண்ணற்ற வினாக்கள் மனதில் எழும்
இந்த வினாக்கள் எல்லாவற்றிற்கும் ஓரளவு விடை விடை கிடைக்கிறது
இந்த திருமறை வசனத்தில்
நபி சுலைமான் அவர்களுக்கும்.அவரது தந்தை தை தாவூத் நபிக்கும் எண்ணற்ற அருட்கொடைகளை அள்ளிக் கொடுத்திருந்தான்
நபி சுலைமானுக்கு இறைவன் கட்டளைப்படி வசப்பட்ட ஜின்கள் அவை நபிக்கு செய்யும் பணிகள் பற்றி இங்கு குறிப்பிடப்படுகிறது
“தாவுதுக்கு நாம் அருளை வழங்கினோம் .
மலைகளையும் பறவைகளையும் அவரோடு சேர்ந்து இறைவனின் புகழ் பாடுமாறு பணித்தோம் .
அவருக்கு இரும்பை மிருதுவாக்கிக் கொடுத்து
“வலுவான போர்க்கவசங்கள் செய்வீராக .அவற்றின் கண்ணிகளை சரியான அளவில் ஒழுங்காக அமைப்பீராக
நேர்வழியில் நடப்பீராக
உங்கள் செயல்களை நாம் கவனித்துகொண்டிருக்கிறோம்” என்று சொன்னோம் (34:10,:11.)
சுலைமானுக்கு காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம்
காற்றின் காலை மாலைப் பயணங்கள் ஒரு மாத கால தூரமாக இருந்தன
அவருக்காக செம்பை ஊற்றுப்போல் உருகி ஓடச் செய்தோம்
இறைவன் கட்ட்டளைப்படி ஜின்கள் அவருக்குப் பணிவிடை செய்தன
நம் கட்டளையை மீறும் ஜின்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டன (34:12)
தாவுத் நபி, சுலைமான் நபி இருவர் பற்றியும் நான் ஏற்கனவே பல விரிவான பதிவுகள் போட்டிருக்கிறேன்
எனவே இங்கு இந்த சூராவில் அவர்கள் பற்றி வரும் வசனங்கள் , விளக்கம் மட்டும் எழுதுகிறேன்
தாவுத் நபியின் மகன் சுலைமான் நபி – இதை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும்
சுலைமான் நபிக்கு நாம் மரணத்தை விதித்தபோது
அவர் உயிர் பிரிந்தது எந்த ஜின்னுக்கும் தெரியவில்லை
அவருடைய கைத்தடியை கரையான் அரித் து அவர் உடல் கீழே சாய்ந்தபோதுதான் அவர மரணம் பற்றி ஜின்கள் அறிந்தன
மறைவான செய்திகளை அறியும் சக்தி இருந்திருந்தால் இழிவு தரும் கடின உழைப்பை விட்டு விலகிஇருக்கலாமே என ஜின்கள் விளங்கிக்கொண்டன (34:14)
ஜின்களுக்கு மறைவான செய்திகளை அறியும் ஆற்றல் உண்டு ஈன மக்களிடையே ஒரு கருத்து, மூட நம்பிக்கை இருந்தது
அப்படி எதுவம் ஜின்களுக்கு கிடையாது என்பதை இறைவன் தெளிவு படுத்துகிறான்
ஜின்கள் இறைவனின் உதவியாளர்கள் , இறைவனின் குழந்தைகள் என்ற மூட நம்பிக்கையின் அடிப்படையில் ஜின்களிடம் ஆறுதல் தேடும் வழக்கம் அரபியரிடம் நிலவி வந்தது
இவை எல்லாம் தவறானநம்பிக்கைகள் . ஜின்கள்இறைவனின் படைப்புகளில் ஓன்று என்பதை திருமறை பல இடங்களில் சுட்டிக்காட்டுகிறது :
சுராஹ் அல் அனாம் (8:100) அஸ்சப்ப்பாத் (37:158)அல் ஜின்னு 72:6)
சபா என்னும் நாட்டுக்கு இறைவன் மிகச் சிறந்த நீர் வளங்களைக் கொடுத்து மிகச் செழிப்பான நாடாக்கியிருந்தான்
இறை நம்பிக்கையை விட்டு அந்த நாட்டினர் விலகிப் போனதால் எப்படி அந்த செழிப்பான நாடு சீர்குலைந்து போனது –இது வசனம் 15 முதல் 31 வரை விளக்கப்பட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறது
இதில் 15 ஆம் வசனத்தில் வரும் சபா என்ற சொல்லே இந்த சுராவின் பெயராக அமைந்துள்ளது
சூராஹ் 34 சபா வசனங்கள் 54
இறைவன் நாடினால் நாளை கதை சொல்லும் குர்ஆனில் சிந்திப்போம்
9 ரமலான் 1443
11042022 திங்கள்
சர்புதீன் பீ
May be an image of mountain, sky and nature
Like
Comment
Share

No comments:

Post a Comment