கதை சொல்லும் குரான்
கதை 6 j25
புகையும் வானம்
“----------- நீங்கள் பழைய நிலைக்குத் திரும்பி விடுவீர்கள் நாம் சற்று வேதனையை விலக்கிக் கொள்ளும்போது
என்ன வேதனை ,? யாருக்கு ? ஏன் ?
தொடர்ந்து பார்ப்போம் –
நேற்றைய பதிவில நபி அவர்கள் அனுபவித்த இன்னல், துயரங்களைப் பார்த்தோம் .
இன்னும் ஒரு விடிவு காலத்தை இறைவன் கொடுக்கவில்லை
பொறுமையின் இருப்பிடமான நபியே ஒரு நிலையில் பொறுமை இழந்து
“இறைவா உன்னை மறந்து திரியும் இவர்கள் இரும்பு இதயங்கள் இளகி உன்னை நினைக்கும்படி ஒரு பஞ்சத்தை உண்டாக்கு “ என வேண்டுகிறார்கள்
பஞ்சம் வருகிறது ,பசியும் பட்டினியும் தலை விரித்தாடுகின்றன
இறை எதிர்ப்புக் கூட்டத்தின் முக்கிய தலைவன் ஆன அபு சுபியான் நபியை அணுகி பஞ்சத்திலிருந்து நாட்டை விடுவிக்குமாறு ஏக இறைவனிடம் பிரார்த்திக்கக் கேட்டுக் கொள்கிறான்
அந்த நேரத்தில்தான் இறைவன் இந்த சூராவை அருளினான்
சூராஹ் 44 அதுக்கான் (புகை ) வசனங்கள் 59
குறிப்பாக வசனம் 15 அபு சுபியானின் வேண்டுகோளுக்கு மறுமொழி போல் வருகிறது
“ நாம் வேதனையை சற்று அகற்றி விடுவோம், நீங்கள் பழைய நிலைக்குத் திரும்பி விடுவீர்கள். முன்னர் செய்தைத்தான் திரும்பச் செய்வீர்கள் ---(44:15)
(வேதனையில் இறைவனை நினைக்கின்றீர்கள்
அது விலகியதும் இறைவனை மறந்து விடுவீர்கள் )
இன்னும் சில வசனங்கள் சில விளக்கங்கள்
“மகத்துவம் மிக்க ஓர் இரவில் இது (குரான் ) அருளப்பட்டது ---(44:3) --“
இங்கு குறிப்பிடப்பட்டது லைலதுல் கதர் எனப்படும் இரவாகும் ,இது ரமலான்மாதத்தில் வருகிறது . லைலதுல் கதர் என்றால் வலிமை மிக்க இரவு என்று பொருள்
அந்த இரவு ஆயிரம் மாதங்களை விட சிறந்தது (97:3)
“அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவனே வாழ்வையும் மரணத்தையும் கொடுக்கிறான் . உங்களுக்கும் உங்கள் முன்னோருக்கும் இறைவன் அவனே (44:8)
எனினும் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொள்ளாமல் ஐயத்தில் விளயாட்டுத் தனமாக இருக்கிறார்கள் (44:9)
எனவே வானத்தில் இருந்து அடர்த்தியான புகை இறங்கும்அந்த நாளை எதிர் நோக்குங்கள் (44:10)
(இந்த வசனத்தில் வரும் புகை என்ற சொல்லே இந்த சூராவின் பெயராக அத்துகான் என்று வருகிறது )
அது மக்கள் மீது மூடிக்கொள்ளும் ; மிகக்கடுமையான வேதனையாக இருக்கும் (44:11)
வானத்தில் இருந்து புகை இறங்குவது மறுமை நாளின் அடையாளமாகச் சொல்லப்படுகிறது
வானங்களையும் பூமியையும் அவற்றிற்கு இடையில் இருக்கும் அனைத்தையும் நாம் வேடிக்கை விளையாடாகப் படைக்கவில்லை (44:38)
அவற்றை சத்தியத்தின் அடிப்படையில் அவற்றைப் படைத்தோம் . பெரும்பாலாருக்கு இது தெரிவதில்லை (44:39)
இன்னும் நபி மூசா ,கொடுங்கோல் அரசன் பிர் அவுன் வரலாறு , அதில் இறைவன் சொல்லும் பாடங்கள்
துப்பா எனும் இனம் அளிக்கப்பட்டது
சுவனத்தின் இனிமை , நரகத்தின் கடுமை
இவை எல்லாம் இந்த சூராவில் வருகின்றன
இறைவன் நாடினால் நாளை கதை சொல்லும் குர்ஆனில் சிந்திப்போம்
பிறை 6 ரமலான் 1443
08042022 வெள்ளி
சர்புதீன் பீ
.
ۡ
No comments:
Post a Comment