Tuesday, 5 April 2022

கதை சொல்லும் குரான் கதை 4 நிலவு . சூராஹ் 54 அல் கமர்

 கதை சொல்லும் குரான்

கதை 4
நிலவு
.
நிலவு
என்று சொன்னாலே மனதுக்குள் ஒரு இதம் , குளிர்ச்சி , சிலிர்ப்பு
குழந்தைப் பருவத்தில் தாய் ஊட்டிய நிலாச்சோறு
அடுத்து நிலவில் பாட்டி வடை சுடும் கதை
நிலா முற்றத்தில் விளையாட்டு
குடும்பத்தோடு நிலவொளியில் விருந்து
தேன் நிலவு மான் நிலவு
என நிலா பற்றிய நினைவுகள் அனைத்தும் இனிமை , இளமை
இந்த இனிமை நினைவோடு இன்னொரு காட்சிக்குப் போவோம் –
நியாயத் தீர்ப்பு நாள், இறுதித் தீர்ப்பு நாள் , உலகம் அழியும் நாள் , உயிர்த் தெழுப்பப்படும் நாள், மறுமை நாள் என பல பெயர்களில் [பல இடங்களில் திருமறையில் எச்சரிக்கப்படும் நாள்
அந்த நாளில்
வானம் ஒரு பெரிய தீப்பந்து போல் செக்கச சிவந்திருக்கும்
பூமி தலை கீழாக புரட்டப்பட்டிருக்ககும்
தாய் மகனைக் கண்டு கொள்ள மாட்டார் . மகன் தந்தையைக் கண்டு கொள்ளமாட்டார்
அண்ணன் தம்பி, அக்கா தங்கை ,கணவன் மனைவி என யாரையும் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்
இப்படிப்பட்ட சோதனை மிக்க நாளுக்கு முன்னோடியாக, அடையாளமாக
விளங்குவது இந்த அழகிய நிலாதான்
அதுவும் இரண்டாகப் பிளந்த நிலா
சரி அது எப்போது தோன்றும் /நிகழும் ?
ஏற்கனவே நிகழ்ந்து விட்டது . எப்பொது :?
இன்று நேற்றல்ல ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே நிகழ்ந்து விட்டது(ஹிஜத்துக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு )
பின் ஏன் இன்னும் உலகம் அழியவில்லை ?
எப்போது அழியும் ?
பல சமுதாயங்கள் பல நபிகளிடம் கேட்ட கேள்வி , கிண்டலாகக் கேட்ட கேள்வி
எல்லா நபிகளும் சொன்ன விடை ஒன்றுதான் . அந்த ரகசியம் இறைவனுக்கு மட்டுமே தெரியும் , வேறு யாருக்கும் தெரியாது
எதற்காக நிலவு பிளக்கப்பட்டது ? அதன் பின்னணி, காரணம் என்ன ?
சுருக்கமாகப் பார்ப்போம்
நபி பெருமானின் சத்திய வழி அழைப்புக்கு மக்கா வாசிகள் தொடரந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
அந்த எதிர்ப்புக்கு ஒரு கடும் எச்சரிக்கையாக இறைவன் இந்த நிலவு பிளக்கும் அற்புதத்தை செயல் படுத்திக் காட்டுகிறான்
இந்த உலகின் அமைப்பு நிரந்தரமானது அல்ல . வானம், பூமி ,நிலவு ,சூரியன் எல்லாமே அழியக் கூடியவே என்பதற்கு சான்றாக நிலவு பிளக்கப்பட்டது
ஆனால் எதிர்ப்பாளர்கள் இதை ஒரு சூனியம், மந்திர தந்திரம் என்றே கருதி அலட்சியப் படுத்தி வந்தனர் அவர்களைக் கடுமையாக எச்சரித்த இறைவன் இவர்கள் உண்மையாக மறுமை நாள் வரும்போதுதான் நம்புவார்கள் என்கிறான்
மேலும் “உங்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என இறுமாப்பு வேண்டாம் . உங்கள் கூட்டத்தின் தோல்வியை நீங்கள் விரைவில் பார்ப்பீர்கள் என்கிறான் “இறைவன்
“ மறுமை நாளைக் கொண்டுவர இறைவனுக்குப் பெரிய முன்னேற்பாடு எதுவம் தேவை இல்லை . அவன் மனதால் நினைத்து கட்டளை பிறப்பித்த அடுத்த நொடியே மறுமை வந்து விடும் “ என்று சொல்கிறான்.
நிறைவாக இறை நம்பிக்கை கொண்டோர் பெறும் மகிழ்ச்சியான மறுமை பற்றிச் சொல்கிறான்
இதற்கிடையில் நம்பிக்கை கொள்ளாத பல சமுதாயங்கள் அளிக்கப்பட்டது பற்ற்யும் வருகிறது
சூரா 54 அல் கமர் நிலவு – 55 வசனங்கள் கொண்டது
மறுமைக்கான நேரம் நெருங்கி விட்டது
நிலவு பிளந்து விட்டது (54:1)
“கண்ணால் பார்த்ததையும் நம்ப மறுத்து இது வெறும் சூனியமே என்கிறார்கள் (54:2)
இந்த நிகழ்வு பொய் என்று சொல்லி தங்கள் மனம்போன போக்கில் போகிறார்கள் (54:3)
நாங்கள் மிக்க பலம் மிக்க குழுவினர் .எங்களை நாங்களே காத்துக் கொள்வோம் என்கிறார்களா ? விரைவில் இவர்கள் தோல்வியுற்று ஒடுவார்கள் (54:44,45)
ஒரே ஒரு சொல்லாக வரும் எமது ஆணை கண்ணிமைக்கும் நேரத்துக்குள் நிறைவேற்றப்பட்டு விடும் (54:50)
இந்தப்புனித மாதத்தின் மாண்பை, மேன்மை முழுமையாகக் கைப்பற்றி இம்மை மறுமை இரண்டிலும் மேன்மையான நல வாழ்வு பெற இறைவனிடம் இறைஞ்சுவோம்
படிக்கும் பெருமக்கள் நிறை குறைகளை எடுத்துச் சொன்னால் பிழையின்றி எழுத , தொடர்ந்து எழுத ஒரு உற்சாகம் பிறக்கும்
இறைவன் நாடினால் நாளை கதை சொல்லும் குர்ஆனில் சிந்திப்போம்
பிறை 4ரமலான் 1443
06042022 புதன்
சர்புதீன் பீ
May be an image of body of water, sky and text
1 share
Like
Comment
Share

No comments:

Post a Comment