Monday, 18 April 2022

கதை சொல்லும் குரான் கதை 17 தேனீக்கும் வஹி சூராஹ் 16 அந்நஹ்ல்(தேனீ j14

 கதை சொல்லும் குரான்

கதை 17
தேனீக்கும் வஹி
சூராஹ் 16 அந்நஹ்ல்(தேனீ
j14
வஹி அறிவிக்கிறான் இறைவன்
நபிகளுக்கு இல்லை
தேனீக்களுக்கு
மலைகளிலும் மரங்களிலும் வீட்டு முகடுகளிலும் கூடு கட்டுங்கள்
என தேனீக்களுக்கு இறைவன் வஹி அறிவித்தான் (16:68)
வஹி என்ற அரபுச சொல்லுக்கு
ரகசிய செய்தி
அனுப்புபவர், பெறுபவர் இருவரால் மட்டுமே உணரப்படும் ஒரு செய்தி என்று பொருள்
இந்த வஹி என்ற சொல் குர்ஆனில் இரண்டு பொருள்களில் வருகிறது .
ஓன்று தன படைப்புகளுக்கு இறைவன் அனுப்பும் செய்திகள்
குறிப்பாகநபி மார்களுக்கு இறைவன் அனுப்பும் திருமறை வசனங்கள்
அடுத்து இறைவன் தன் ஆணைகளோடு வானங்களுக்கும் பூமிக்கும் அனுப்பும் வஹி
வானங்களும் பூமியும் இந்தக்கட்டளைகளுக்கு ஏற்ப உடனே செயல் படத் துவவ்குகின்றன
பறவைகள் பறப்பது,மீன்கள் நீந்துவது , பிறந்த குழந்தை பால் குடிப்பது எல்லாம் வஹியின் விளைவுதான்
திடீரென்று மனதில் தோன்றும் எண்ணங்கள் ,சிந்தனைகள்
( intuition , extra sensory perception ) சில கனவுகள் எல்லாம் வஹியின் வடிவங்களே
அறிவியல் அற்புதங்கள், கண்டுபிடிப்புகள் இலக்கிய, கலைப்படைப்புகள் எல்லாம் வஹியின் விளைவுகள்தாம்
சுருக்கமாகச் சொன்னால் நம் அனைவருக்குமே ஒரு வகையான வஹி இறைவனிடமிருந்து வருகிறது
நபி மார்களுக்கு இறை வசனங்கள் வந்து இறங்கும் வஹி இவற்றிற்கெல்லாம் முற்றிலும் மாறு பட்ட வ்ஹியாகும்
மேலும் இறைவன் காட்டிய வழியில் சென்று பல் வகையான பழங்களில் இருந்து சாறை உறிஞ்சுங்கள் .இது உங்களுக்கு எளிதாக்கப்பட்டுள்ளது
(தேனீக்களின்)வயிற்றிலிருந்து ஒரு மாறுபட்ட நிறத்தில் வரும் பானத்தில் (நோய்களுக்கு) மருந்து( நிவாரணம்) இருக்கிறது
சிந்திக்கும் மக்களுக்கு இதில் ஒரு சான்று இருக்கிறது (16:69)
தேன் கூட்டின் அமைப்பு , அத்ன் பல்வேறு அறைகள் தேனீக்களின் பல்வேறு பணிகளுக்கு ஏற்ப பல் வேறு வகையான தேனீக்கள்
தேனீக்கள் ஒரு குழுவாக செயல்பட்டுத் தேன் சேகரிப்பது
தேன் ஒரு சுவையான உணவாகவும், பல நோய்களுக்கு மருந்தாவது
எல்லாம் இறைவனின் அற்புதமே
சுராஹ்16 அந்நஹ்ல்(தேனீ வசனம் 68 இல் வரும் சொல் )
வசனங்கள் 128
இதில் வரும் பிற செய்திகளில் சில
நிச்சயமாக விலங்குகளில் உங்களுக்கு ஒரு படிப்பினை இருக்கிறது . அவற்றின் வயிற்றில் ------------தூய்மையான , சுவையான பால் இருக்கிறது (16:66)
உங்களிடம் இருப்பதெல்லாம் கடந்து போகும்
இறைவனிடம் இருப்பது அப்படியே இருக்கும் (16:96)
இறைவன் ஹராம் என்று தடுத்தவை
(அறுப்பதற்கு முன்)உயிரிழந்த விலங்குகள் , குருதி , பன்றி இறைச்சி , இறைவன் பெயர் சொல்லாமல் அறுக்கப்பட்டவை
இவை மட்டும்தான்-----------
இதில் கூட்டவோ குறைக்கவோ யாருக்கும் அதிகாரம் இல்லை (16:115 ,116)
இறைவன் நாடினால் நாளை கதை சொல்லும் குரானில் சிந்திப்போம்
17ரமலான் 1443
19042022 செவ்வாய் .
சர்புதீன் பீ
May be an image of food and nature
Like
Comment
Share

No comments:

Post a Comment