கதை சொல்லும் குரான்
கதை 29
எங்கும் நிறைந்த இறையோன்
j3 சுராஹ் 2 வசனம் 142 முதல் 252 வரை
“உங்கள் முகம் அடிக்கடி வானத்தை நோக்கித் திரும்புகிறது
இப்போது நாம் உங்களுக்குப் பிரியமான திசையில் உங்களைத் திருப்புகிறோம்
புனித ஆலயம் நோக்கி உங்கள் முகத்தைத் திருப்புங்கள் நீங்கள் எங்கிருந்தாலும் இறைவணக்கத்தில் அந்த ஆலயம் நோக்கி உங்கள் முகத்தைத் திருப்புங்கள்
வேதம் அருளப்பட்டவர்களுக்கு நன்கு தெரியும் :
இது இறைவனிடமிருந்து வந்த சரியான கட்டளை என்று
அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அவன் அறியாதவன் அல்ல “(2:144)
இஸ்ச்லாமிய வரலாற்றில் ஒரு முகியமான நிகழ்வு
திசை மாற்றம்
தொழுகையில் முகம் திருப்பும் கிப்லா திசை மாற்றம் –
ஜெருசலேத்திலிருந்து காபாவை நோக்கி மாற்றம்
இந்த வசனத்தில் அதற்கான இறை ஆணை இறங்குகிறது
சற்று பின்னோக்கிப் போனால்தான் இது பற்றிப் புரியும்
ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டில் இந்த ஆணை இறங்கியதாக சொல்லப்படுகிறது
மதியத் தொழுகை zuhr லுகருக்கான நேரம் வந்து விட நபி பெருமான் முன்னின்று தொழுகை நடத்துகிறார்கள்
இரண்டு ரக் அத் முடிந்து மூன்றாவது ரக் அத் தொழுது கொண்டிருக்கும்போது இந்த வசனம் திடீரென்று இறக்கப் படுகிறது
உடனே நபி பெருமான் ஜெருசேலம் திசையிலிருந்து காபாவின் திசையை நோக்கி மாற, அவரைப் பின் தொடர்ந்து தொழுதவர்களும் அது போல் திசை மாறித் தொழுகிறார்கள்
மதீனாவிலும் அதைசுற்றியுள்ள பகுதிகளிலும் இந்த இறைஆணை பொது அறிவிப்பாகப் பரப்பப் படுகிறது
அறிவிப்பைக் கேட்ட உடனே பல்வேறு நேரங்களில் வேறு வேறு நிலைகளில் தொழுது கொண்டிருந்த மக்கள் அனைவரும் திசையை மற்றிக்கொண்டார்கள்
ஹஜ் புனிதப் பயணம் போனவர்கள்
“இரண்டு கிப்லா பள்ளி” யைப் பார்த்திருக்கலாம்
மதீனாவுக்கு அருகில் உள்ள இந்தப் பள்ளியில்தான் திசை மாற்ற ஆணை இறங்கியது
ஜெருசலேம் மதினாவின் வடக்கில் இருக்கிறது
காபா தெற்கில் இருக்கிறது .எனவே வடக்கில் இருந்து தெற்கு என
எதிர் திசையில் திரும்பினார்கள்
இந்த இறை அறிவிப்பை நபி பெருமான் அவர்கள் எதிர்நோக்கி இருந்தார்கள் என்பதை அடிக்கடி வானத்தை நோக்கினார்கள் என்ற சொற்களில் தெளிவாகிறது
முகத்தைத் திருப்புதல்
என்பதற்கு விளக்கம்
“முடிந்த அளவுக்கு , தெரிந்த அளவுக்கு காபாவை நோக்கித் தொழுங்கள்
அதை மிகத் துல்லிதமாகக் கணக்கிட வேண்டியதில்லை என்று குர்ஆன் குறிப்பிடுகிறது”
திசை அறிய முடியாத இடத்தில் தொழுதால் நமக்கு சரி என்று தோன்றும் திசை நோக்கித் தொழுகலாம்
என்னதான் இறையாணை என்றாலும் அதை எதிர்த்து மறுத்துப்பேச ஒரு கூட்டம் இருக்குமே
“என்ன ஆயிற்று இவர்களுக்கு ? எதற்காக தொழும் திசையை மாற்றுகிறார்கள் “ என்று கேட்போருக்கு இறைவனே விடை சொல்கிறான்
“எடுத்துச் சொல்லுங்கள் அவர்களுக்கு
கிழக்கும் மேற்கும் இறைவனுக்கே உரியவை
அவன் நாடியவர்களுக்கு அவன் நேர்வழியைக் காட்டுகிறான் “ (2:142)
கிழக்கு ,மேற்கு என்பதெல்லாம் வெறும் அடையாளங்கள்தான்
அங்கு மட்டும்தான் இறைவன் இருக்கிறான் எனபது பொருளல்ல .என்று இறைவன் சுட்டிக்காட்டுகிறான்
இதை மேலும் தெளிவாக்குகிறான் இன்னொரு வசனத்தில்
“நேர்வழி என்பது உங்கள் முகத்தை மேற்கு நோக்கியோ ,கிழக்கு நோக்கியோ திருபுவதில் இல்லை
உண்மையான நேர்வழி என்பதின் அடையாளங்கள்:
இறைநம்பிக்கை
மறுமை நாள், வானாவர்கள் , மறை நூல்களை நம்புதல்
உற்றார் உறவினர், அனாதைகள் ,வறியவர், வழிப்போக்கர்கள்
உதவி கேட்டு வருவோர்
எல்லோருக்கும் இறைஅன்புடன் தன் பொருளை ,செல்வத்தை வழங்குதல்
தொழுகையை நிலை நிறுத்தி ,ஜக்காத் எனும் தருமம் செய்தல்
கொடுத்த வாக்கை நிறைவேற்றுதல்
துன்பத்திலும் வறுமையிலும் தளராத இறை நம்பிக்கை
--------------(2:177).
மேலும் உங்களை ஒரு நடு நிலை சமுதாயமாக நியமிக்கிறோம்
மனித சமுதாயத்துக்கு சான்று பகர்வோறாக உங்களையும் உங்களுக்கு சான்று சொல்பவராக நபியையும் நியமித்தோம் -----------(2:143)
நபி பெருமானை, அவரைப் பின் பற்றுவோரை உலகிற்கு நல்வழி தலைமைச் சமுதாயமாய் இந்த இறைவசனம் வழியே இறைவன் அறிவிக்கிறான்
மிகப்பெரும் பதவி
அதற்குத் தகுந்தாற்போல் மிகப்பெரும் சுமையும் பொறுப்பும் இறைவன் சுமத்துகிறான்
மேலும் பனி இஸ்ராயில் (இஸ்ரவேலர் கூட்டம்) என அறியப்பட்ட யூதர்கள் இறைவனுக்கு எதிராக பல தவறுகள் செய்ததால் அவர்களிடமிருந்து பொறுப்பு நபி பெருமான் கூட்டத்துக்கு வழங்கப்படுகிறது
இப்படி இரட்டை இழப்பு யூதர்களுக்கு
தலைமைப் பதவி போனது ஓன்று
அடுத்து இஸ்லாம் இறைஞானத்திற்கு எங்களையே சார்ந்து இருக்கிறது
அதனால்தான் நாங்கள் வழிபட்ட அதே ஜெருசலேம் நோக்கித் தொழுகிறார்கள் என்று வீண் பெருமை பேசித் திரிந்தார்கள் .
அதுவும் இப்போது இல்லை என்று ஆகி விட்ட்து
யூதர்களின் இந்த மன நிலை பற்றி இறைவன் சொல்கிறான்
“நீங்கள் என்ன சான்றுகள் கொடுத்தாலும் வேதம் படைத்த அவர்கள் நீங்கள் தொழுகும் திசையை ஒப்க்கொள்ள மாட்டார்கள்
நீங்கள் அவர்கள் திசையை ஒப்புக் கொள்ளமாட்டீர்கள்
யாரும் மற்றவர் திசையை ஒப்புக்கொள்ளவில்லை
(நபியே) உங்களுக்கு கிடைத்த ஞானத்தை மீறி நீங்கள் அவர்கள் வழியில் போனால் நிச்சயம் தவறு செய்தவர்களில் ஒருவராகி விடுவீர்” (2:145)
மேலும்
நாம் காட்டிய திசை சரியானது என்று யூதர்களுக்கு நன்றாகத் தெரியும் .இருந்தும் உண்மையை மறைக்கிறார்கள் என்கிறான் (2:146)
உங்கள் இறைவனிடமிருந்து வந்த உறுதியான இந்த உண்மையில் ஐயம் கொள்ளாதீர்கள் (2:147)
இன்னும் பல வசனங்களில் இது பற்றி எடுத்துச் சொல்லி இறைவன் எச்சரிக்கை செய்கிறான்
ஜூசு 2
சுராஹ் 2 அல் பக்ராவின் ஒரு பகுதி – வசனம் 142 முதல் 252 வரை
இந்தப்பகுதியில் சொல்லப்படும் பல செய்திகளில் ஒரு சில
ஸfஆ , மர்வா – இவை இறைவனின் சின்னங்கள்
நோன்பு வைப்பது பற்றிய கட்டளை
ரமலான் மாதத்தில் குரான் அருளப்பட்டது
இறைவன் தன் அடியாருக்கு மிக நெருக்கத்தில், கூப்பிடு தூரத்தில் இருக்கிறான்
கையூட்டு (லஞ்சம் ) ஒரு பாவச் செயல்
நம்பிக்கை உடையோர் இஸ்லாத்தில் முழுமையாக இணைந்து விட வேண்டும்
இன்னும் விரிவாக எழுதிக் கொண்டே போகலாம்
கால நேர வரையரிக்க் க்குக் கட்டுப்பட்டு இத்துடன் நிறைவு செய்கிறேன்
இறைவன் நாடினால் நாளை கதை சொல்லும் குர்ஆனில் சந்திப்போம்
29 ரமலான் 1443
01052022 ஞாயிறு
சர்புதீன் பீ
.
No comments:
Post a Comment