கதை சொல்லும் குரான்
கதை 14
1= 3,65,000
சுராஹ் 22 அல்ஹஜ் ((புனிதபயணம் ) j 17
ஒரு சிறிய கதை
கதை சொல்லும் குரான்தானே தலைப்பே பிறகு தனியாக என்ன கதை என்று சிலர் முனுமுனுப்பது காதில் விழுகிறது
இது ஒரு மாறுபட்ட கதை
இறைவனை நேரில் கண்டு அவன் அருளைப்பெற எண்ணி கடுந்தவம் புரிகிறார் ஒருவர்
உணவைத் துறந்து உறக்கத்தைத் தவிர்த்து பல ஆண்டுகள் தவம் இருக்க , இறைவன் அவர் முன் தோன்றினான்
உன் உண்மையான ,பொறுமையான தவத்தின் பலனாய் நான் உன் முன் வந்திருக்கிறேன் என்ன வேண்டும் கேள் என்றான் இறைவன்
உங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா ?
தாரளமாகக் கேள் . தயக்கமின்றி எத்தனை கேள்வி வேண்டுமானாலும் கேள்
ஆனால் வரம் ஒன்றே ஒன்றுதான் கேட்கலாம்
உங்களுக்கு ஒரு நிமிடம் என்பது எங்களுக்கு பல்லாயிரம் ஆண்டுகள் என்பது உண்மையா ?
ஆம்
உங்கள் கணக்கில் ஒரு கிராம் என்பது எங்கள் கணக்கில் பல்லாயிரக்கணக்கான கிலோக்களா ?
ஆம்
உங்கள் ஒரு பைசா என்பது எங்களுக்குப் பல கோடி ரூபாய் ஆகுமா ?
ஆம்
இறைவா எனக்கு ஒரே ஒரு ரூபாய் கொடுங்கள்
ஒரு நிமிடம் பொறுத்துக்கொள்
இறைவன் மறைந்து விட்டான்
“மெத்தப் படிச்ச மூஞ்சூறு ----“ என்று ஒரு சொல்வழக்கு நினைவில் வருகிறது
சரி இந்தக் கதைக்கும் திருமறைக்கும் உள்ள தொடர்பு ?
மறுமை நாளின் தண்டனையை விரைந்து கொண்டு வந்து காண்பியுங்கள் என்று அவர்கள் சொல்கிறார்கள்
இறைவன் தான் சொன்ன சொல்லில் இருந்து ஒரு போதும் விலக மாட்டான் இறைவனின் ஒரு நாள் என்பது உங்கள் கணக்கில் ஆயிரம் ஆண்டுகள ஆகும்(22:47)
நபி பெருமானிடம் நம்பிக்கை அற்றோர் அடிக்கடி கேட்பது –
உங்களை மறுக்கும் எங்களை இறை கொள்கையியை ஏற்றுக்கொள்ள மறுத்தால் இறைவனின் சினம் , தண்டனை வந்து இறங்கும் என்று எச்சரிக்கை விடுகிறீர்கள் . நீங்கள் உண்மையில் நபி என்றால் உங்களை மறுக்கும் எங்கள் மேல் ஏன் அந்தச் சினமும் தண்டனையும் இன்னும் இறங்கவில்லை
இது திருமறையில் பல இடங்களில் வரும் செய்தி .
அதற்கு இறைவன் நபி வாயிலாக சொல்லும் ஒரே மறுமொழி எது எப்போது நடக்கும் ; மறுமை நாள் எப்போது வரும், இறைவன் தண்டனை எப்போது வரும் என்ற ரகசியம் இறைவனுக்கு மட்டுமே தெரிந்த ஓன்று . அது பற்றி நபி ஒன்றும் சொல்லமுடியாது . நபியின் வேலை இறைவனின்செய்தியை மக்களுக்குத் தெளிவாக எடுத்துச் சொல்வது மட்டுமே .
மக்களைத் திருத்தி நேர்வழிப்படுதுவதை இறைவன் பார்த்துக்கொள்வான் என்பதே
உங்கள் விருப்பம், உங்கள் எதிர்பார்ப்புக் கேற்ப இறைவன் செயல் படமாட்டான் . தவறுக்கு உடனே தண்டனையை இறக்கி வைக்க மாட்டான்
பல ஆண்டுகளாக , பல நூற்றாண்டுகளாக தவறு செய்தும் இறைவன் தண்டிக்ககவில்லை. இனிமேலா தண்டிக்கப்போகிறான் என எண்ணுவது அறிவற்றோரின் சிந்தனை .ஒரு வழியில் இவர்களும் மெத்தப் படிச்சவ்ர்கள்தான்
அதற்கு முந்தைய வசனங்களி ல் இறைவன் தன் சினத்தால் அழிந்து சிதைந்து போன நகரங்களை சான்றாக எடுத்துச் சொல்கிறான்
இழி செயலில் மூழ்கிய மக்கள் வாழ்ந்த எத்தனை நகரங்களை நாம் அழித்திருக்கிறோம்------எத்தனயோ கிணறுகள் பாழடைந்து கிடக்கின்றன . எத்தனையோ மாடமாளிகைகள் சிதிலமடைந்து விட்டன .(22:45)
”அவர்கள் இந்த பூமியில் பயணம் செய்து பார்த்ததில்லையா ? பார்த்திருந்தால் உணரக் கூடிய உள்ளங்களையும் கேட்கக் கூடிய காதுகளையும் அவர்கள் பெற்றிருப்பார்கள் (22:46)
சுராஹ் அல் ஹஜ் (புனிதப்பயணம் – 27 ஆம் வசனத்தில் வரும் சொல் இந்த சுராவின் பெயராக அமைத்திருக்கிறது ) j 17
78 வசனங்கள் கொண்ட இந்த சூராவில் சொல்லப்படும் மிகப்பல செய்திகளில் சில்வற்றைப் பார்ப்போம்
இப்ராகிம் நபிக்கு காபா எனும் புனித ஆலயம் அமைக்கக் கட்டளை
அமைத்து உலக மக்களை புனிதப் பயனத்துக்கு அழைக்கக் கட்டளை
நாம் இப்ராஹிமுக்கு காபா எனும் இந்த ஆலயத்தின் இடத்தைக் கொடுத்து
அவருக்குக் கட்டளை இட்டோம்
“எதையும் எனக்கு இணையாக வைக்க வேண்டாம்
வலம் வருவோருக்காகவும், சிரம் தாழ்த்தி வணங்குவோருக்குமாக எனது ஆலயத்தைத் தூய்மைப் படுத்தும்
புனிதப்பயணம் மேற்கொள்ள மக்களுக்கு அழைப்பு விடும்
அவர்கள் வெகு தொலைவில் இருந்து நடந்தும் (பயணத்தால் ) மெலிந்த ஒட்டகங்கள் மீதும் வரட்டும்
அவர்களுக்கு அங்கு கிடைக்கும் நன்மைகளை அவர்கள் காணட்டும்
இறைவன் அவர்களுக்கு வழங்கிய கால்நடைகளை குறிப்பிட்ட சில நாட்களில் இறைவன் பெயர் சொல்லி அறுக்க வேண்டும்
அவற்றிலிருந்து அவர்கள் உண்ண வேண்டும்
வறியவர்களுக்கும் தேவை உள்ளவர்களுக்கும் கொடுக்க வேண்டும்
தங்களை சுத்தப் படுத்திக்கொள்ள வேண்டும்
வேண்டுதல்களை நிறைவேற்ற வேண்டும்
தொன்மைச் சிறப்பு வாய்ந்த ஆலயத்தைச் சுற்றி வர வேண்டும் (22:26—29)
இறைவன் நாடினால் நாளை கதை சொல்லும் குர்ஆனில் சிந்திப்போம்
14 ரமலான் 1443
16042022 சனி
சர்புதீன் பீ
.
No comments:
Post a Comment