கதை சொல்லும் குரான்
கதை 11 j 20
மக்கமாநகரம்
“வாழ்வதற்கு ஒரு புனிதமான , பாதுகாப்பான இடத்தை அமைத்துக்
கொடுத்து `அங்கு கனி வகைகள அனைத்தும் நாம் அவர்களுக்கு உணவாக அளிக்கவில்லையா ?
பெரும்பாலானோர் இதை அறியவில்லை “
சொல்வது ஏக இறைவன் – மக்காவாழ் இறை எதிர்ப்பாளர்கள் குறைஷிகளை நோக்கி .
வசனம் 28:57இன் பின் பகுதி இது
உங்கள் சொல்படி, உங்கள் வழியில் நடந்தால் நாங்கள் எங்கள் நாட்டை விட்டு தூக்கி எறியப்படுவோம் என்று அவர்கள் சொல்கிறார்கள்
இது வசனத்தின் முன் பகுதி – குறைஷிகள் நேர் வழிக்கு வர மறுப்பதற்கு சொல்லும் பல சாக்குப் போக்குகளில் இதுவும் ஓன்று – மிக முக்கியமான ஓன்று
இந்த வசனந்தை முழுதாய்ப் புரிந்து கொள்ள அவர்கள் வரலாறை , அவர்கள் அச்சத்தின் அடிப்படையை அறிந்து கொள்வது அவசியம்
குறைஷிகள் அரபு நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கிய அங்கமாகக் கருதப்பட்டார்கள் அதற்குப் பல காரணங்கள்
அதில் முதன்மையானது அவர்கள் நபி இஸ்மாயில் அவர்களின் வழிதோன்றல்கள் என்பது
அடுத்து அரபு நாட்டின் மிகப் புனிதத் தலமான காபாவின் பாதுகாவலர்கள் ஆனது . அங்கு வழிபாடு நடத்தும் உரிமையும் அவர்களுக்கே
ஆண்டு தோறும் புனிதப்பயணமாக காபாவுக்கு அரபு நாட்டவர் அனைவரும் வர வேண்டியதாயிற்று. இதானல் அந்த நாட்டில் உள்ள பல்வேறு குலங்கள் அனைத்துடனும் குறைஷிகளுக்கு தொடர்பு ஏற்பட்டது
இப்படி ஒரு மையமாக இருப்பதால் குறைஷிகள் அரபு நாட்டு வணிகத்தில் முதன்மை இடத்தை அடைந்தனர் .
கிழக்கு ரோமுக்கும் ஈரானுக்கும் இடையில் நிலவிய பகை குறைஷிகளுக்கு பன்னாட்டு வணிகத்தில் முதன்மை இடம் பிடிக்க மிகப் பெரிய நல்வாய்ப்பாக அமைந்தது
ஈரானியர்கள் வணிக வழிகள் அனைத்தையும் அடைத்து விட ரோமானியர்கள் பன்னாட்டு வணிகத்துக்கு அரபு நாட்டை சார்ந்திருக்க வேண்டிய நிலை
இதனால் மக்கமாநகரம் ஒரு பெரிய பன்னாட்டு வணிக மையமாக உருவானது .அந்த வணிகம் முழுக்க முழுக்க குறைஷிகள் கட்டுப்பாட்டில்
வணிகம் தடையின்றி நடக்க அரபு நாட்டில் உள்ள எல்லாக் குலத்தோரும் ஒத்துழைக்க வேண்டும், அதற்காக குறைஷிகள் கையில் எடுத்த பல வழிகளில் மிகவும் வலிமையானது கடன் கொடுத்தல் (வட்டிக்குத்தான்)
இந்த நிலையில் நபி பெருமான் காட்டும் நேர்வழியில் சென்றால் மதத் தலமை ,வணிகத் தலைமை ,மற்ற குலத்தோருடன் உள்ள உறவு அனைத்தும் பறிபோய் மக்கமாநகரை விட்டே வெளியேற வேண்டியிருக்கும் என அச்சம் கொண்டனர்
நபி பெருமான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர்களுக்குப் புரியவில்லை – ஏக இறைத் தத்துவத்தை ஏற்றுகொண்டால் அரபு நாட்டு வணிகம் முழுதும் அவர்கள் வசப்படும் என்பதை
அதற்குக் காரணம் நபி பெருமான் அரபு நாட்டுக்கு மட்டுமல்ல, வலிமை மிக்க ஈராக், சிரியா போன்ற நாடுகள் அனைத்துக்கும் ஒரு ஆட்சியாளராக வருவார் என்பதை அவர்களால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை
இப்படி ஒரு கற்பனையான காரணம் சொல்லி நேர்வழி வர மறுக்கும் குறைஷிகளுக்கு இறைவன் மிகச் சுருக்கமான ஒரு வரியில் மிக விரிவான விடை சொல்கிறான்
“வாழ்வதற்கு ஒரு புனிதமான , பாதுகாப்பான இடத்தை அமைத்துக்
கொடுத்து `அங்கு கனி வகைகள அனைத்தும் நாம் அவர்களுக்கு உணவாக அளிக்கவில்லயா ?
பெரும்பாலானோர் இதை அறியவில்லை”
விளக்கம்
மக்கா ஒரு மையப் பகுதியாக அமைந்திருப்பது, அதன் புனிதத் தன்மை
அங்குள்ள பாதுகாப்பு அனைத்தும் இறைவன் அமைத்துக் கொடுத்தவை
அந்த வறண்ட பாலைவனத்தில் தடையின்றி உணவும் நீரும் கிடைப்பது இறைவன் அருளே அன்றி மனித முயற்சியால் அல்ல
2500 ஆண்டுகள் முன்பு நபி இப்ராகிம் அவர்கள் இறைவனிடம் இறைஞ்சியபடி இன்றளவும் இறைவன் அந்தப் பாதுகாப்பு புனிதத் தன்மை தண்ணீர் உணவு அனைத்தையும் குறையின்றி வழங்கி வருகிறான்
இதெல்லாம் பெரும்பாலோருக்கு மறந்து போயிற்று என்று இறைவன் நினைவூட்டுகிறான
“எத்தனை நகரங்களை நாம் அழித்திருக்கிறோம்-அந்த நகர மக்கள் செல்வச் செருக்கால் தம் நிலை மறந்து தவறு செய்தார்கள்
அங்கு ஒரு சிலரே இப்போது இருக்கிறார்கள் -------“(28:58)
இந்த வசனம் குறைஷிகளுக்கு மேலும் ஒரு விடையாகவும் எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளது
இறைவன் நாடி விட்டால் செல்வமோ மற்ற ஏதுவுமோ உங்களைக் காப்பாற்றாது என்பதை நினைவூட்டுகிறான்
இறைவசனஙளை எடுத்துச் சொல்லும் ஒரு தூதரை அனுப்பாமல் எந்த ஊரையும் இறைவன் அழித்ததில்லை . மேலும் நெறி தவறி மக்கள் சென்றாலன்றி அவர்கள் ஊரை நாம் அழிப்பதில்லை (28:59)
உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பவை எல்லாம் இவ்வுலக வாழ்க்கையின் சுகங்களும் அலங்காரங்களும் தான்
ஆனல் இறைவனிடத்தில் இருப்பவை மிகவும் மேன்மையானவை, நிலையானவை
இதை நீங்கள் அறியவில்லையா ?(28:60)
சுராஹ் 28 அல் கஸஸ் ( கதை ) 88 வசனங்கள்
வசனம் 25ல் வரும் அல் கஸஸ் என்ற சொல் இதன் பெயராக இருக்கிறது
சுராவில் வரும் எதாவது ஒரு சொல்தான் சூராவின் பெயராக பெரும்பாலான சுராக்களுக்கு அமைந்திருக்கிறது
இந்த சுராவில் நபி மூசாவின் நீண்ட வரலாறு சொல்லப்படுவதால் பெயர் ஓரளவுக்குப் பொருத்தமாக இருக்கிறது
மொத்தமுள்ள 88 வசனங்களில் 42 வசனங்கள் மூசா நபி, பிர் அவுன் பற்றிச் சொல்கின்றன
பிறகு இறைவனின் சினத்துக்கு உள்ளாகி அழிக்கப்பட்ட சமுதாயங்கள் பற்றி சொல்லப்படுகிறது
மக்களுக்கு நேர் வழியைக் காட்டுவது இறைவன் மட்டுமே என்பது தெளிவாக்கபடுகிறது
செல்வச் செருக்கினால் அழிக்கப்பட்ட காருண் பாற்றிய செய்திகள் வருகின்றன
நிறைவாக குரான் இறைவனின் அருட்கொடை . அது காட்டும் வழியில் இருந்து யாரும் பிறழ்ந்து போகக் கூடாது என்ற கருத்து வருகிறது
இறைவன் நாடினால் நாளை கதை சொல்லும் குர்ஆனில் சிந்திப்போம்
11ரமலான் 1443
13042022 புதன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment