Thursday 30 June 2022

நயத்தக்க நபித் தோழர்கள் – பகுதி 2

 நயத்தக்க நபித் தோழர்கள் –

பகுதி 2
நேற்றைய முதல் பதிவில் சஹாபாக்கள் பற்றி ஒரு சிறிய அறிமுகம் அவர்கள் தகுதிகள், சிறப்பு பற்றிப்பார்த்தோம்
இனி
சஹாபாக்கள் மொத்தம் எத்தனை பேர் ?
அவர்களில் தர வரிசை உண்டா ?
சஹாபாக்கள பற்றி குரான் என்ன சொல்கிறது
சஹாபாக்கள் எண்ணிக்கை சரியாகத் தெரியாது .பல்லாயிரக்கணக்கில், லட்சக் கணக்கில் இருக்கலாம்
இதில் இம்மை வாழ்வில் இருக்கும்போதே மறுமையில் சுவனம் உறுதி என வாழ்த்துரை கூறப்பட்ட பத்து சஹாபிகள்
முதல் அணியில் இடம் பெருகிறாகள் .
அவர்கள்
1. அபூபக்கர் சித்தீக் 2.உமர் 3.உதுமான்
4.அலி 5.தல்ஹா 6.ஜூபைர்
7. அப்துல் ரஹ்மான் 8.சக்து
9.சயீது 10. அபு உபைதா
இதில் முதல் நால்வரும் நபி பெருமான் காலத்துக்குப்பின் அடுத்தடுத்து கலீபாவாகப் பொறுப்பேற்று நல்லாட்சி நடதியவர்கள்.
கலீபா – ஆட்சிப்பொறுப்போடு மதத் தலைவராகவும் இருப்பவர்
அபூபக்கர் –
தன் திரண்ட செல்வம் அனைத்தையும் இஸ்லாத்துக்காக வாரி வழங்கியவர் .
நபியின் வாழ்க்கைத் துணையாக இருந்து அதிக அளவில் ஹதீஸ்களை பதிவு செய்த அன்னை ஆயிஷா அவர்கள் அபுபக்கரின்
மகளாவார்
இஸ்லாத்தை மட்டும் அல்ல நபிகள் எது சொன்னாலும் கண்ணை மூடிக்கொண்டு சிறிதும் சிறிதும் தயக்கம் இல்லாமல் ஏற்றுக்கொண்டவர் அபூபக்கர்
நபி அவர்கள்ம எதிரிகளிடமிருந்து தப்பி மக்காவில் இருந்து மதீனாவுக்கு இறை ஆணைப்படி ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்டபோது அவர்களுக்குத் துணையாகப்போய் வழியில் நபி பெருமான் ஸவ்ர் எனும் ஒரு குகையில் நபி பெருமானோடு மூன்று நாட்கள் தனிமையில் தங்கும் வாய்ப்புக்கிடைதவர்
இது பற்றி குரான் வசனம் (சூராஹ் அத்தவ்பா )
“அவர்கள் இருவரும் குகையில் தங்கியிருந்தபோது இருவரில் இரண்டாமவராய் இருந்தவர் ------“(9:40)
வாழ்நாளில் மட்டுமல்லாது இறந்தபின்பும் நபி பெருமான் அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டவர்
அவரை இறைவன் பொருந்திக்கொள்வானாக
அடுத்து உமர் –
இவர் பற்றி நான் ஏற்கனவே நிறைய எழுதியிருக்கிறேன் . எனவே சுருக்கமாக் சில வரிகள்
இஸ்லாத்தின் கடும் பகைவனாக இருந்து , குரான் தாஹா சூரவை இவர் உடன்பிறப்பு ஓதக்கேட்டு மனம் உருகி இஸ்லாத்தில் இணைந்து
இஸ்லாதுக்கு ஒரு மிகப் பெரும் பலமாக விளங்கியவர்
வீர் தீரம் , அறிவுக்கூர்மை , ஆட்சித் திறமை எல்லாம் ஒருங்கே சேர்ந்த இவரை இஸ்லாத்தில் சேர்க்க இறைவனிடம் நபி அவர்கள் வேண்டியதில் வியப்பொன்றும் இல்லை
ஆட்சியில் இருந்தபோது மிகப்பல நிர்வாக சீர் திருத்தங்களை கொண்டுவந்தார . இஸ்லாமிய நாள்காட்டியை ஒழுங்கு படுத்தியவர் .பல போர்களில் வெற்றி கண்டு நாட்டை விரிவாக்கியவ்ர் மிக நேர்மையான ஆட்சியாளர்
இவருக்கும் நபி பெருமான் அருகிலேயே அடக்கம் செய்யப்படும் வாய்ப்பு கிட்டியது
மூன்றாம் கலிபா உதுமான் (உஸ்மான் )
சுருக்கமாக சில செய்திகள்
வெட்கத்தின் உறைவிடம் , இவர் வருவது தெரிந்தால் நபி பெருமான் தன் உடைகளை உடனே சரி செய்து கொள்வாராம்
தன் மனைவி மக்களோடு ஹ்ஷபாவுக்கு ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்ட முதல் சஹாபா
நபி பெருமானின் மக்கள் இருவரை மணம் முடித்தவர்
இன்று நாம் படிக்கும் திருக்குரானை வடிவமைத்தவர்
இறக்கும்போதும் கையில் குரானோடு மரித்தவர்
தன சொந்த செலவில் பல கிணறுகளை வெட்டியவர்
நான்காவது கலிபா அலி
வீரத்தின் விளை நிலம் ,அறிவின் நுழை வாயில் என்று போற்றப்படுபவர்
நபி பெருமானின் அருமை மகள் பாத்திமாவை மணம் முடித்தவர்
எதிரிகள் நபி பெருமான் அவர்களை கொல்ல திட்டமிட்டு ,நாள் குறித்து விட்டார்கள் . இறைவன் ஆணைப்படி நபி பெருமான் மதீனாவுக்கு தப்பிதுப் போய் விட்டர்கள்
தன உயிரைப் பொருட்படுத்தாமல் நபி பெருமான் வழக்கமாகப் படுக்கும் இடத்தில் ஒரு பச்சைப் போர்வையை போர்த்தியபடி படுத்திருந்த துணிச்சல் காரர்
“மூஸாவுக்கு ஹாருன் போல் நீ எனக்கு “ என்று நபி பெருமானால் போற்றப்பட்டவர்
ஆட்சியில் இருந்தபோது அரசு அலுவலகங்கள் அனைத்தையும் மதீனாவிலிருந்து கூபாவுக்கு மாற்றியவர்
நபியின்உடலை ( ஜனாசவை) குளிப்பாட்டும் பேறு பெற்றவர்
(அரபு மொழியில் பெயர்களை தந்தை பெயரும் சேர்த்துச் சொல்வது வழக்கம்
ஜூபைர் இப்னு அவ்வாம் என்றால் அவ்வாம் மகன் ஜூபைர் என்று பொருள்
(இப்னு =son of))
அடுத்த அணியில் பத்ருப் போரில் உயிர்த்தியாகம் செய்த பல நூறு பேர் வருகிறர்கள்
(போரில் உயிர்த்தியாகம் செய்தவர்கள் மரிப்பதில்லை என்கிறது திருமறை (2:154. 3:169)
மற்றவர்கள் மூன்றாவது அணியில்
முதல் பத்து சஹாபாகளில் நபி பெருமனுக்குபின் அடுத்தடுத்து களிபாக்களாக இருந்து நல்லாட்சி செய்த நால்வர் பற்றி மிகச் சுருக்கமாக – ஒரு அறிமுகம் போல் கொடுத்திருக்கிறேன்
இந்த நால்வருமே இயற்கை மரணம் அடையவில்லை . எப்படி இறந்தாலும்
அவர்களுக்கு சுவன வாழ்க்கைதான் மறுமையில்
இறைவன் அவர்களைப் பொருதிக்கொள்வானாக
சஹாபாக்கள் பற்றி குரான் வசனங்கள்
003:195 008:072,74, 75 009:020 016:041, 1100 22:039,40
ஒரு வசனம் மட்டும் இங்கே தருகிறேன் சுராஹ் ஆலுஇம்ரான்
ஆகவே, அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு பதிலளித்தான், "உங்களில் ஆண் அல்லது பெண்களில் (நற்)செயல் செய்பவரின் (நற்)செயலை நிச்சயம் வீணாக்க மாட்டேன். உங்களில் சிலர், சிலரைச் சேர்ந்தவர்கள்தான். ஹிஜ்ரா சென்றவர்கள், தங்கள் ஊர்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள், என் பாதையில் துன்புறுத்தப்பட்டவர்கள், போர் செய்தவர்கள், (அதில்) கொல்லப்பட்டவர்கள், அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் நிச்சயம் அகற்றி விடுவேன். அவற்றின் கீழ் நதிகள் ஓடும் சொர்க்கங்களில் நிச்சயம் அவர்களை நுழைப்பேன்.'' அல்லாஹ்விடமிருந்து நற்கூலியாக (இவை வழங்கப்படுவார்கள்). அல்லாஹ், அவனிடத்தில்தான் அழகிய நற்கூலி உண்டு. (003:195 )
மற்றவர்கள் பற்றி அடுத்தடுத்த பதிவில் பார்ப்போம்
நேற்றைய வினா
சஹாபாக்கள் பெயரின் பின்னால் வரும் ரலி (ளி/ழி)- முழு வடிவம் என்ன ? பொருள் என்ன ?
விடை :
ரலி என்பது
“ரலியல்லாஹு அன்ஹு “ என்பதன் சுருக்கமாகும்
இதன் பொருள்
“அவரை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக “ என்பதாகும்
இதை எந்த இறை நம்பிக்கியாளருக்கும் பயன்படுத்தலாம் . ஆனால் சஹாபாகளுக்கு மட்டுமே பயன்படுத்துவது வழக்கத்தில் வந்து விட்டது
சரியான விடை எழுதி வாழ்த்து, பாரட்டுப்பெறுவோர்
சகோ
ஷிரீன் பாருக் – முதல் சரியான விடை
தல்லத்
பாப்டி
கிரசன்ட் ஷேக்
ஷர்மதா
இன்றைய வினா
பல்லாயிரக்கணக்கான சஹாபாக்ளில் குர்ஆனில் பெயர குறிப்பிடப்படும் சஹாபாக்கள் யார் யார் ?
இறைவன் நாடினால் நாளை நபித்தோழர்களை சிந்திப்போம்
இ(க)கடைச்செருகல்
நேற்று பிறை தென் பட்டதாக அறிவிகப்பட்டதால் இன்று புனித துல்ஹஜ் மாதம் துவங்குகிறது .
பத்தாம் நாள் குர்பானி கொடுக்கும் வரை நகம், முடி களைவதை குர்பானி கொடுப்பவர்கள் தவிர்க்க வேண்டும்
01 துல்ஹஜ் (12)1443
0107 2022 வெள்ளி
சர்புதீன் பீ
No photo description available.
Like
Comment
Share

Wednesday 29 June 2022

நயத் தக்க நபித் தோழர்கள் – முதல் பகுதி

 நயத் தக்க நபித் தோழர்கள் –

முதல் பகுதி
சத்திய சஹாபாக்கள் , தாபீன்கள் தபாத் தாபீன்கள்
வெள்ளிக்கிழமை கூட்டுத் தொழுகைக்கு பள்ளிக்குப் போகிறவர்கள் காதில் இந்த சொற்கள் விழுந்திருக்கும்
யார் இந்த சஹாபாக்கள் , அவர்கள் தகுதி என்ன சிறப்பு என்ன ?
சற்று சுருக்கமாக விவரிக்க முயற்சிக்கிறேன் ,இறைவன் அருளால்
இன்னும் ஓரிரு நாட்களில் துல்ஹஜ் எனும் புனித மாதம் துவங்குகிறது .இஸ்லாமிய ஆண்டை நிறைவு செய்யும் இந்த மாதத்தில்தான
உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் இஸ்லாத்தின் ஐந்தாவது கடமையாகிய ஹஜ் எனும் புனிதப் பயணத்தை மேற்கொள்கிறார்கள்
.இந்த மாதத்தின் முதல் பத்து நாட்களும் வழக்கமான பதிவுகள் போடாமல் இஸ்லாம் பற்றிய பதிவுகள் சில ஆண்டுகளாக போட்டு வருகிறேன்
அந்த வரிசையில் இந்த ஆண்டு உடன் பிறப்புகள் சொன்னபடி சஹாபாக்கள் பற்றி எழுத எண்ணுகிறேன்
எழுத நினைத்தால் எழுத வேண்டியதுதானே எதற்கு சுற்றிச் சுற்றி வருகிறாய் என்று கேட்பீர்கள்
அதற்கும் காரணம் இருக்கிறது
.இன்னும் மனம் இந்தப் பணிக்கு முழுமையாக ஆயத்தமாகவில்லை
இது வரை பெரும்பாலும் குரான் பற்றிய பதிவுகளே போட்டு வந்தேன் .
இறைவன் படைத்து பாதுகாக்கும் குர்ஆனின் வசனங்களில் மாற்றுக்கருத்துக்கு இடம் கிடையாது
அதிலிருத்து விலகி வேறு பதி வுகள் போடுவதை மனம் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை
இது போன்ற பதிவுகள் பற்றி யாரும் கருத்து , குறை நிறை சொல்லமாட்டார்கள் . எனவே யாரவது படிக்கிறார்களா என்ற ஐயம் உண்டாகும் . அதுவும் தயக்கத்துக்கு ஒரு காரணம்
வினா விடையாகப்போட்டால் இரண்டு மூன்று விடைகளாவது வந்து விடும்
எப்படியோ வழக்கம்போல் இறைவன் மேல் பொறுப்பையும் சுமையையும் இறக்கி வைத்து விட்டு எழுதத் துவங்குகிறேன்
சஹாபாக்கள் – சுருக்கமாக , எளிதாக நபித் தோழர்கள் என்று சொல்லலாம்
(சகா – சஹாபா ஏதேனும் தொடர்பு உண்டா ?)
சற்று விளக்கமாகச் சொல்வதென்றால்
நபி பெருமான் காலத்தில் வாழ்ந்து
நபி பெருமானை சந்தித்துப்பேசி ,
நபி பெருமான் சொல் கேட்டு ஏக இறைக்கொள்கையான இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு வாழ்நாள் முழுதும் அந்த வழியிலேயே நடந்தவர்கள்தான் சஹாபாக்கள்
நபி பெருமானின் நெருங்கிய உறவினர்கள் பலர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாததால் அவர்களுக்கு இந்த சஹாபா என்னும் உயர் நிலை கிடைக்கவில்லை
அது போல நபி அவர்கள் காலத்தில் வாழ்ந்த பல இஸ்லாமிய இறை நேசர்களுக்கு நபி பெருமானை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காதால் அவர்களும் சஹாபாக்கள் ஆகவில்லை
தர வரிசையில் நபி மார்களுக்கு அடுத்தபடி சஹாபாக்கள் வருகிறார்கள்
நபி பெருமான் பேருக்குப்பின் ஸல்லலாஹு அலா முஹமது முகமது ஸல்லலாஹு அலைஹுவசல்லம் என்ற வாழ்த்தை சுருக்கமாக ஸல் என்று சொல்வது போல்
சஹாபாக்கள் பேருக்குப்பின் ரலி (ளி/ழி) என்று சொல்லவேண்டும்
சரி அப்படி என்னதான் செய்தார்கள் சஹாபாக்கள் ?
இஸ்லாத்தின் வேர்கள், விழுதுகள் சஹாபாக்களே என்று சொல்வதுண்டு
தங்கள் வீடு வாசல், சொத்து சுகம் அனைத்தையும் துறந்து மறந்து இஸ்லாத்தை பரப்பும் பணியில் ஈடுபட்டவர்கள்
நபி பெருமானுக்கு வஹி எனும் நிலையில் இறங்கும் இறை வசனங்களை நபி சொல்வதை கேட்டு மனதில் நிறுத்தி உடனே எழுதியும் பாதுகாத்து உலகுக்கு அளித்தவர்கள்
இன்றளவும் குர்ஆனில் மாற்றங்கள் எதுவும் செய்ய முடியாமல் இருப்பதற்கு பல்லாயிரக்கணக்கான் சஹாபாக்கள் மனனம் செய்து பாதுகாத்ததும் ஒரு காரணம்
அதே போல் (வஹி அல்லாத ) இயல்பு நிலையில் நபி பெருமானின் வாயி லிருந்து வரும் ஒவ்வொரு சொல்லையும் , உடலின் ஒவ்வொரு அசைவையும் ஒவ்வொரு செயலையும் பதிவு செய்து ஹதீஸ் எனும் நபி மொழிகளாக உலகுக்கு அளித்தார்கள் .
நபியின் தாடியில் எத்தனை முடிகள் போன்ற நுண்ணிய செய்திகளைக் கூட உன்னிப்பாகக் கவனித்து பதிவு செய்வார்கள் என்று சொல்வதுண்டு
“நீங்கள் உஹுது மலை அளவு தங்கத்தை தருமம் செய்தாலும் அது சஹாபாக்களின் தருமத்துக்கு ஈடாகாது “
“ சஹாபாக் களை குற்றம் சொன்னால் அதே என்னைக்குற்றம் சொல்வது போலாகும் “
இவை நபி மொழிகள்
சஹாபாக்கள் மொத்தம் எத்தனை பேர் ?
அவர்களில் தர வரிசை உண்டா ?
சஹாபாக்கள பற்றி குரான் என்ன சொல்கிறது ?
அடுத்த பதிவில் பார்ப்போம்
நிறைவு செய்யுமுன் ஒரு எளிய வினா (பழக்கத்தை விட முடியவில்லை)
சஹாபாக்கள் பெயரின் பின்னால் வரும் ரலி (ளி/ழி)- முழு வடிவம் என்ன ? பொருள் என்ன ?
இறைவன் நாடினால் நாளை நபித்தோழர்களை சிந்திப்போம்
29 துல்காயிதா (11)1443
30062022 வியாழன்
சர்புதீன் பீ
No photo description available.
4 Shares
Like
Comment
Share

Tuesday 28 June 2022

வட்டார் வழக்கு -திருப்பத்தூர் ,காரைக்குடி - "உண்டன " தமிழ் மொழி

 தமிழ் (மொழி)அறிவோம்

“உண்டன “
எங்கள் (காரைக்குடி திருப்பத்தூர் மதுரை ) பகுதி வட்டார வழக்கில் புழங்கிய சொல்
இதன் பொருள் தெரிந்தவர்கள் சொல்லலாம்
விடை
அதிகமாக ,
(எ-டு)உண்டன சாப்பிடு
சரியான விடை எழுதி வாழ்த்து ,பாராட்டுப்பெறுவோர்
சகோ
தல்லத்(- முதல் சரியான விடை
நெய்வேலி ராஜா
நசீமா பெரோஸ்
பர்ஜானா
ஜோதி லியாகத்
ஷர்மதா
மெஹராஜ்
சுராஜ்
பாடி பீர்
சிராஜூதீன்
முகமது ராஜா
சிறப்புப் பாராட்டுக்கு உரியவர்கள்
சகோ
ஹசன் அலி
கணேச சுப்பிரமணியம்
ஹபிபுர் ரஹ்மான்
இவர்கள் மூவரும் எங்கள் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை
ஆர்வத்துடன் முயற்சித்த
சகோ
ராஜாத்தி
முகமது பாஷா
ஆண்டி கவுண்டர்
மூவருக்கும் நன்றி
தொல்காப்பியத்தில் இருந்து இந்தச் சொல்லை எடுத்துக்காட்டி விளக்கம் அனுப்பிய
சகோ சிராஜூதீனும் சிறப்புப் பாராட்டுக்குரியவர்
அவர் அனுப்பிய விளக்கம்
“உண்டன “ என்ற சொல் தொல்காப்பியத்தில்
“பால்கெழுக்கிளவி என்ற இலக்கண வரையறையில்எடுத்துக்காட்டாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
"ஒருபாற் கிளவி ஏனைப் பாற் கண்ணும் வருவகை தாமே வழக்கென மொழிய"
என்னும் நூற்பாவில் பால்கெழு கிளவியை வழக்கிற்குரியதாக
"உண்டற்குரிய அல்லாப் பொருளை
உண்டன போலக் கூறலும் மரபே"
எடுத்துக்காட்டு
உண்டற்குரிய அல்லாப் பொருளை உண்டன போலக் கூறுதல் (காட்டு : பசலை உண்டது)(பொருளியல் - 19)
இந்த வினா விடையில் எனக்கு பல வித மகிழ்ச்சிகள்
“உண்டன “ எங்கள் அத்தம்மா சொல்லக்கேட்டது . அதன் பின் எங்கள் அம்மா கூட இந்தச் சொல்லை பயன்படுத்திய நினைவில்லை
இருந்தாலும் இத்தனை பேர் சரியான விடை அனுப்பியிருப்பது எங்கள் வட்டாரத் தமிழ் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை உறுதிப் படுத்துகிறது
அடுத்து எங்கள் வட்டாரத்தைச் சேராத பலர் சரியான விடை அனுப்பியிருப்பதும்
பேச்சு வழக்கில் இருந்த இந்தச சொல் இலக்கியத் தரம் வாய்ந்தது என்பதும் எங்கள் வட்டாரத் தமிழின் பெருமைக்கு மேலும் சிறப்பு சேர்க்கின்றன
இது போல் பல வட்டரப்பேச்சு வழக்கு சொற்கள் இலக்கியத் தரத்துடன் இருப்பது கண்டு வியந்ததுண்டு ---பொத்தல்(துளை, ஓட்டை)
ஆணம் (குழம்பு)
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
௨௯ ௦௬ ௨௦௨௨
29062022 புதன்
சர்புதீன் பீ
May be an image of road
Like
Comment
Share