முத்திரை பகிப்போம்
8 புதி முத்திரை
(புத்தி முத்திரை அல்ல )
((Fluid Mudhra)
நீர்மப்பொருள் முத்திரை
இந்த 2022 ஆம் ஆண்டில் முதல் முத்திரைப் பதிவு என நினைக்கிறேன்
மிக எளிய முத்திரை
பயன்கள் பல
செய்முறை
பெருவிரல் Thumb)நுனி சுண்டு விரல் (little finger) நுனி இரண்டையும் சேர்த்து வைத்துக்கொள்ளவும்
மற்ற விரல்கள் இயல்பான நீட்டிய நிலையில் இருக்கட்டும்
அவ்வளவுதான் புதி முத்திரை
இது போல் இரண்டு கைகளிலும் செய்ய வேண்டும்
எப்போது வேண்டுமானாலும் , தேவைப்படும்போது செய்யலாம்
ஒரு நாளைக்கு மூன்று முறை ஒவ்வொரு முறையும் 15 நிமிடங்கள் செய்வது
ஒரு முறையான பயிற்சியாக இருக்கும்
பயன்கள்
நம் உடலின் எடையில் பாதிக்கு மேல் fliuid substance எனும் நீர்மப் பொருளால் ஆனது
இந்த நீர்மப்பொருளை சம நிலையில் வைக்க புதி முத்திரை உதவுகிறாது
வாய் வறட்சி, கண் வறட்சி அதனால் கண் எரிச்சல்
சிறுநீரகம் , சிறுநீர்ப்பை பிரச்சினைகள் இந்த முத்திரையால் சரியாகும்
முத்திரைகள்
செய்ய எளிமையானவை
பொருட்செலவு எதுவும் இல்லை
கருவிகள், உடலை வருத்தும் பயிசிகள் எதுவும் கிடையாது
மருந்துகள் , அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் இல்லை
முறையாக செய்தால் நல்ல பலன் தருபவை
அமைதியான நேரத்தில் அமைதியான இடத்தில் அமைதியாக உட்கார்ந்து செய்யவும்
முடிந்தவர்கள் , தெரிந்தவர்கள் பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் உட்கார்ந்து செய்யலாம்
முடியாவிட்டால் இருக்கவே இருக்கிறது சுகாசனம்
சம்மணம் போட்டு எளிதாக அமர்வதுதான் சுகாசனம் .
அதுவும் முடியாவிட்டால் நாற்காலியில் உட்கார்ந்து செய்யலாம்
மூச்சு இயல்பாக இருக்கட்டும்
குறிப்பு
முத்திரைகள் செய்வதற்காக மருந்து, மாத்திரை மருத்துவம் எதையும் உங்கள் மருத்துவரைக் கலக்காமல் நிறுத்த வேண்டாம்
இறைவன் நாடினால் மீண்டும் முத்திரை பதிப்போம்
04062022 சனிக் கிழமை
சர்புதீன் பீ
No comments:
Post a Comment