திருமறை குரான்
“மனிதனை நாம் களிமண்ணின் சத்திலிருந்து படைத்தோம் “
திருமறையின் எந்தப்பகுதியில் வரும் வசனம் இது ?
விடை
சுராஹ் 23(அல் முக்மினின் ) வசனம் 12
இன்னும் 6(அல் அன்ஆம் ):2, 15(அல் ஹிஜ்ர):26,15:28 55:14
என பல இடங்களில் மனிதன் களிமண்ணில் இருந்து படைகப்பட்ட செய்தி வருகிறது
சரியான விடை அனுப்பி வாழ்த்து, பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஹசன் அலி- முதல் சரியான விடை
சிராஜுதீன் , முத்தவல்லி அக்பர் அலி
ஷர்மதா , ஷிரீன் பாருக்
வசனம் 23:12 முதல் 23;16 வரை 5 வசனங்களில் மனிதன் படைக்கப்ட்டதில் இருந்து மரணித்து மீண்டும் உயிர்ப்பிக்கப்படுதல் வரை
மிகச் சுருக்கமாக இறைவன் சொல்கிறான்
“மனிதனை நாம் களிமண்ணின் சத்திலிருந்து படைத்தோம் “(23:12)
“பின்னர் அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் (செலுத்தப்பட்ட) விந்தாக ஆக்கினோம்
பிறகு அந்த விந்தை இரத்தக் கட்டியின் வடிவத்தில் அமைத்தோம்
பின்னர் அந்த இரத்தக்கட்டியை சதைக் கட்டியாய் ஆக்கினோம்
பிறகு அந்தச் சதைக்கட்டியை எலும்புகளாக்கினோம்
பின்னர் எலும்புகளை சதையால் போர்த்தினோம்
பிறகு அதை முற்றிலும் வேறொரு படைப்பாக வளரச் செய்தோம்
-----------இறைவன் ------மிக அழகான படைப்பாளன்
பின்னர் நிசசயமாக நீங்கள் மரணிக்க் கூடியவர்கள்தான்
பிறகு மறுமை நாளில் எழுப்பப் படுவீர்கள் “ (23:13—23:16)
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
23 துல்காயிதா(1!) 1443
24 06 2022 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment