Thursday, 30 June 2022

நயத்தக்க நபித் தோழர்கள் – பகுதி 2

 நயத்தக்க நபித் தோழர்கள் –

பகுதி 2
நேற்றைய முதல் பதிவில் சஹாபாக்கள் பற்றி ஒரு சிறிய அறிமுகம் அவர்கள் தகுதிகள், சிறப்பு பற்றிப்பார்த்தோம்
இனி
சஹாபாக்கள் மொத்தம் எத்தனை பேர் ?
அவர்களில் தர வரிசை உண்டா ?
சஹாபாக்கள பற்றி குரான் என்ன சொல்கிறது
சஹாபாக்கள் எண்ணிக்கை சரியாகத் தெரியாது .பல்லாயிரக்கணக்கில், லட்சக் கணக்கில் இருக்கலாம்
இதில் இம்மை வாழ்வில் இருக்கும்போதே மறுமையில் சுவனம் உறுதி என வாழ்த்துரை கூறப்பட்ட பத்து சஹாபிகள்
முதல் அணியில் இடம் பெருகிறாகள் .
அவர்கள்
1. அபூபக்கர் சித்தீக் 2.உமர் 3.உதுமான்
4.அலி 5.தல்ஹா 6.ஜூபைர்
7. அப்துல் ரஹ்மான் 8.சக்து
9.சயீது 10. அபு உபைதா
இதில் முதல் நால்வரும் நபி பெருமான் காலத்துக்குப்பின் அடுத்தடுத்து கலீபாவாகப் பொறுப்பேற்று நல்லாட்சி நடதியவர்கள்.
கலீபா – ஆட்சிப்பொறுப்போடு மதத் தலைவராகவும் இருப்பவர்
அபூபக்கர் –
தன் திரண்ட செல்வம் அனைத்தையும் இஸ்லாத்துக்காக வாரி வழங்கியவர் .
நபியின் வாழ்க்கைத் துணையாக இருந்து அதிக அளவில் ஹதீஸ்களை பதிவு செய்த அன்னை ஆயிஷா அவர்கள் அபுபக்கரின்
மகளாவார்
இஸ்லாத்தை மட்டும் அல்ல நபிகள் எது சொன்னாலும் கண்ணை மூடிக்கொண்டு சிறிதும் சிறிதும் தயக்கம் இல்லாமல் ஏற்றுக்கொண்டவர் அபூபக்கர்
நபி அவர்கள்ம எதிரிகளிடமிருந்து தப்பி மக்காவில் இருந்து மதீனாவுக்கு இறை ஆணைப்படி ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்டபோது அவர்களுக்குத் துணையாகப்போய் வழியில் நபி பெருமான் ஸவ்ர் எனும் ஒரு குகையில் நபி பெருமானோடு மூன்று நாட்கள் தனிமையில் தங்கும் வாய்ப்புக்கிடைதவர்
இது பற்றி குரான் வசனம் (சூராஹ் அத்தவ்பா )
“அவர்கள் இருவரும் குகையில் தங்கியிருந்தபோது இருவரில் இரண்டாமவராய் இருந்தவர் ------“(9:40)
வாழ்நாளில் மட்டுமல்லாது இறந்தபின்பும் நபி பெருமான் அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டவர்
அவரை இறைவன் பொருந்திக்கொள்வானாக
அடுத்து உமர் –
இவர் பற்றி நான் ஏற்கனவே நிறைய எழுதியிருக்கிறேன் . எனவே சுருக்கமாக் சில வரிகள்
இஸ்லாத்தின் கடும் பகைவனாக இருந்து , குரான் தாஹா சூரவை இவர் உடன்பிறப்பு ஓதக்கேட்டு மனம் உருகி இஸ்லாத்தில் இணைந்து
இஸ்லாதுக்கு ஒரு மிகப் பெரும் பலமாக விளங்கியவர்
வீர் தீரம் , அறிவுக்கூர்மை , ஆட்சித் திறமை எல்லாம் ஒருங்கே சேர்ந்த இவரை இஸ்லாத்தில் சேர்க்க இறைவனிடம் நபி அவர்கள் வேண்டியதில் வியப்பொன்றும் இல்லை
ஆட்சியில் இருந்தபோது மிகப்பல நிர்வாக சீர் திருத்தங்களை கொண்டுவந்தார . இஸ்லாமிய நாள்காட்டியை ஒழுங்கு படுத்தியவர் .பல போர்களில் வெற்றி கண்டு நாட்டை விரிவாக்கியவ்ர் மிக நேர்மையான ஆட்சியாளர்
இவருக்கும் நபி பெருமான் அருகிலேயே அடக்கம் செய்யப்படும் வாய்ப்பு கிட்டியது
மூன்றாம் கலிபா உதுமான் (உஸ்மான் )
சுருக்கமாக சில செய்திகள்
வெட்கத்தின் உறைவிடம் , இவர் வருவது தெரிந்தால் நபி பெருமான் தன் உடைகளை உடனே சரி செய்து கொள்வாராம்
தன் மனைவி மக்களோடு ஹ்ஷபாவுக்கு ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்ட முதல் சஹாபா
நபி பெருமானின் மக்கள் இருவரை மணம் முடித்தவர்
இன்று நாம் படிக்கும் திருக்குரானை வடிவமைத்தவர்
இறக்கும்போதும் கையில் குரானோடு மரித்தவர்
தன சொந்த செலவில் பல கிணறுகளை வெட்டியவர்
நான்காவது கலிபா அலி
வீரத்தின் விளை நிலம் ,அறிவின் நுழை வாயில் என்று போற்றப்படுபவர்
நபி பெருமானின் அருமை மகள் பாத்திமாவை மணம் முடித்தவர்
எதிரிகள் நபி பெருமான் அவர்களை கொல்ல திட்டமிட்டு ,நாள் குறித்து விட்டார்கள் . இறைவன் ஆணைப்படி நபி பெருமான் மதீனாவுக்கு தப்பிதுப் போய் விட்டர்கள்
தன உயிரைப் பொருட்படுத்தாமல் நபி பெருமான் வழக்கமாகப் படுக்கும் இடத்தில் ஒரு பச்சைப் போர்வையை போர்த்தியபடி படுத்திருந்த துணிச்சல் காரர்
“மூஸாவுக்கு ஹாருன் போல் நீ எனக்கு “ என்று நபி பெருமானால் போற்றப்பட்டவர்
ஆட்சியில் இருந்தபோது அரசு அலுவலகங்கள் அனைத்தையும் மதீனாவிலிருந்து கூபாவுக்கு மாற்றியவர்
நபியின்உடலை ( ஜனாசவை) குளிப்பாட்டும் பேறு பெற்றவர்
(அரபு மொழியில் பெயர்களை தந்தை பெயரும் சேர்த்துச் சொல்வது வழக்கம்
ஜூபைர் இப்னு அவ்வாம் என்றால் அவ்வாம் மகன் ஜூபைர் என்று பொருள்
(இப்னு =son of))
அடுத்த அணியில் பத்ருப் போரில் உயிர்த்தியாகம் செய்த பல நூறு பேர் வருகிறர்கள்
(போரில் உயிர்த்தியாகம் செய்தவர்கள் மரிப்பதில்லை என்கிறது திருமறை (2:154. 3:169)
மற்றவர்கள் மூன்றாவது அணியில்
முதல் பத்து சஹாபாகளில் நபி பெருமனுக்குபின் அடுத்தடுத்து களிபாக்களாக இருந்து நல்லாட்சி செய்த நால்வர் பற்றி மிகச் சுருக்கமாக – ஒரு அறிமுகம் போல் கொடுத்திருக்கிறேன்
இந்த நால்வருமே இயற்கை மரணம் அடையவில்லை . எப்படி இறந்தாலும்
அவர்களுக்கு சுவன வாழ்க்கைதான் மறுமையில்
இறைவன் அவர்களைப் பொருதிக்கொள்வானாக
சஹாபாக்கள் பற்றி குரான் வசனங்கள்
003:195 008:072,74, 75 009:020 016:041, 1100 22:039,40
ஒரு வசனம் மட்டும் இங்கே தருகிறேன் சுராஹ் ஆலுஇம்ரான்
ஆகவே, அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு பதிலளித்தான், "உங்களில் ஆண் அல்லது பெண்களில் (நற்)செயல் செய்பவரின் (நற்)செயலை நிச்சயம் வீணாக்க மாட்டேன். உங்களில் சிலர், சிலரைச் சேர்ந்தவர்கள்தான். ஹிஜ்ரா சென்றவர்கள், தங்கள் ஊர்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள், என் பாதையில் துன்புறுத்தப்பட்டவர்கள், போர் செய்தவர்கள், (அதில்) கொல்லப்பட்டவர்கள், அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் நிச்சயம் அகற்றி விடுவேன். அவற்றின் கீழ் நதிகள் ஓடும் சொர்க்கங்களில் நிச்சயம் அவர்களை நுழைப்பேன்.'' அல்லாஹ்விடமிருந்து நற்கூலியாக (இவை வழங்கப்படுவார்கள்). அல்லாஹ், அவனிடத்தில்தான் அழகிய நற்கூலி உண்டு. (003:195 )
மற்றவர்கள் பற்றி அடுத்தடுத்த பதிவில் பார்ப்போம்
நேற்றைய வினா
சஹாபாக்கள் பெயரின் பின்னால் வரும் ரலி (ளி/ழி)- முழு வடிவம் என்ன ? பொருள் என்ன ?
விடை :
ரலி என்பது
“ரலியல்லாஹு அன்ஹு “ என்பதன் சுருக்கமாகும்
இதன் பொருள்
“அவரை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக “ என்பதாகும்
இதை எந்த இறை நம்பிக்கியாளருக்கும் பயன்படுத்தலாம் . ஆனால் சஹாபாகளுக்கு மட்டுமே பயன்படுத்துவது வழக்கத்தில் வந்து விட்டது
சரியான விடை எழுதி வாழ்த்து, பாரட்டுப்பெறுவோர்
சகோ
ஷிரீன் பாருக் – முதல் சரியான விடை
தல்லத்
பாப்டி
கிரசன்ட் ஷேக்
ஷர்மதா
இன்றைய வினா
பல்லாயிரக்கணக்கான சஹாபாக்ளில் குர்ஆனில் பெயர குறிப்பிடப்படும் சஹாபாக்கள் யார் யார் ?
இறைவன் நாடினால் நாளை நபித்தோழர்களை சிந்திப்போம்
இ(க)கடைச்செருகல்
நேற்று பிறை தென் பட்டதாக அறிவிகப்பட்டதால் இன்று புனித துல்ஹஜ் மாதம் துவங்குகிறது .
பத்தாம் நாள் குர்பானி கொடுக்கும் வரை நகம், முடி களைவதை குர்பானி கொடுப்பவர்கள் தவிர்க்க வேண்டும்
01 துல்ஹஜ் (12)1443
0107 2022 வெள்ளி
சர்புதீன் பீ
No photo description available.
Like
Comment
Share

No comments:

Post a Comment