யாரைத்தான் நம்புவது!!
கண்களுக்கு ஓய்வே இல்லாமல் கணினியின் முன் அமர்ந்திருக்கும் வேலை அவருக்கு
சொல்ல வேண்டியதே இல்லை எப்போதும் கண்ணாடி அணிந்திருப்பார்
கண் பரிசோதனை செய்துகொள்ள மருத்துவமனை செல்கிறார்
வழக்கமான பரிசோதனைகள் முடிந்தபின்
"பார்வைத் திறன் மிக குறைவாக இருக்கிறது
அதன் விளைவாக குலுகோமா என்ற கண் அழுத்தம் வர வாய்ப்பு உள்ளது
எனவே அதற்கான சிறப்பு மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது
அதே மருத்துவமனையில் உள்ள சிறப்பு மருத்துவர் பல பரிசோதனைகள் செய்தபின்
குலுகோமா ஒரு சிறிய அளவில் இருக்கிறது
உடனே லேசர் சிகிச்சை செய்தால் மேற்கொண்டு பரவாமல் தடுக்கலாம் என்கிறார்.
விரைவில் தான் வெளிநாடு போவதால் இப்போது லேசர் சிகிச்சை வேண்டாம் என்று பரிசோதனைக்கு வந்தவர் சொல்ல
மருத்துவரும் பயணம் முடிந்து திரும்பிய பின்னர் விரைவில் சிகிச்சை செய்து கொள்ளச் சொல்கிறார்
வெளிநாடு சென்று திரும்பிய அவர் வேறோரு மருத்துவமனைக்குப் போகிறார்
அங்கு எல்லாப் பரிசோதனைகளும் செய்து விட்டு
இபுபோதைக்கு குலுகோமா அறிகுறி எதுவும் இல்லை. அப்படி அறிகுறி இருப்பவர்கள் அடிக்கடி வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்
உங்களுக்கு அது தேவை இல்லை
ஆறு மாதத்திற்கு ஒரு முறை வந்து பரிசோதனை செய்து கொண்டால் நல்லது என்று சொல்லி அனுப்பி விட்டார்கள்
இருந்தாலும் மனம் அமைதி கொள்ளவில்லை
குலுகோமா சிகிச்சை நிபுணர் யார் என் கண்டறிந்து அவர் இருக்கும் மருத்துவமனையைத் தொடர்பு கொண்டு அவரை சந்திக்க நாள் கேட்கிறார்
20 நாள் கழித்தே அவரைப் பார்க்க நேரம் ஒதுக்குகிறார்கள்
இதற்கிடையில் அவருக்கு கண்ணில் எரிச்சல் ஏற்பட அந்த நிபுணர் இருக்கும் மருத்துவமனைக்கே போகிறார்
அங்கு வேறொரு முதுநிலை மருத்துவரிடம் தன் குலுகோமா வரலாறு முழுவதும் சொல்ல அவர் பல பரிசோதனைகள் செய்யச் சொல்கிறார் பரிசோதனைகள் முடிவுகளுடன்திரும்பி வந்து பார்த்தால்
அந்த மருத்துவர் பணி நேரம் முடிந்து போய்விடுகிறார்
மீண்டும் இன்னொரு மருத்துவர் அவரிடம் முழு வரலாற்றையும் எடுத்துச்சொல்லி அவர் சொன்ன சில பரிசோதனைகள் செய்துவிட்டு வருவதற்குள் அந்த மருத்துவரும் பணி நேரம் முடிந்து போய் விடுகிறார்
கண் எரிச்சலோடு மன எரிச்சலும் சேர்ந்த நிலையில் அதே மருத்துவமனையில் மூன்றாவது மருத்துவரிடம் போய் மீண்டும் குலுகோமா வரலாற்றை திரும்பச் சொல்கிறார்
குடும்ப குலுகோமா வரலாறு பற்றி கேட்டு அதை அரைகுறையாக புரிந்து கொண்டு
குலுகோமா இருப்பதை உறுதி செய்து அதற்கான தனிப்பட்ட சிறப்புப் பரிசோதனைகள் செய்து வரச் சொல்கிறார்
அதற்காக பணம் கட்டும் இடத்திற்கு அருகில் நிபுணரின் அறை
அங்கிருந்த வரவேற்பாளர் இவர் மிகவும் எரிச்சலான மன நிலையில் இருப்பதை உணர்ந்து என்ன ஏது என்று கேட்கிறார்
இவரும் தான் மூன்று மருத்துவர்களை சந்திக்க நேர்ந்த கதையைச் சொல்கிறார்
இவருடைய மருத்தவ அறிக்கைகளைப் படித்துப் பார்த்த வரவேற்பாளர்
குலுகோமா அறிகுறி எதுவும் இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை
நிபுணரிடம் கலந்தாலோசித்து அதன் பின்னர் மற்ற பரிசோதனைகள் செய்து கொள்ளலாம் என்று சொல்கிறார்
அதற்கு இன்னும் இருபது நாள் காத்திருக்க வேண்டுமே என்று இவர் அலுத்துக் கொள்ள வரவேற்பாளர் இரண்டு நாட்களில் நிபுணரை சந்திக்க நேரம் ஒதுக்குகிறார்
இரண்டு நாள் கழித்து நிபுணரை சந்தித்து அந்த மருத்துவ மனையில் தான் சந்தித்த அனுபவங்களை எடுத்துச் சொல்கிறார்
இப்படி நடந்ததற்கு மிகவும் வருத்தம் தெரிவிக்கிறார் நிபுணர்
மேலும் குலுகோமா அறிகுறி எதுவுமே இல்லை
கண் அழுத்தம் இயல்பு நிலையில் இருக்கிறது என்று சொல்ல
பிறகு ஏன் அந்த மூன்றாவது மருத்துவர் அப்படிச் சொன்னார் என்று இவர் கேட்க
அவர் மிகக்குறைந்த அனுபவம் உள்ளவர்
என்கிறார் நிபுணர்
கண் எரிச்சல்
தொடர்ந்து கணினி பார்ப்பதன் விளைவு
அவ்வப்போது கண்களுக்கு ஓய்வு கொடுங்கள் என அறிவுறுத்துகிறார்
இதுவரை படித்தது 100% உண்மை நிகழ்வு
இதைக் கேள்விப்பட்டதும் எப்போதோ படித்த கதை ஒன்று நினைவில் வந்தது
பல ஆண்டுகளாக கடுமையான இடை விடாத தலைவலி அவருக்கு
பொறுக்க முடியாத நிலையில் ஒரு புகழ்பெற்ற மருத்துவரை அணுகி கலந்தாலோசிக்கிறார்
பல பரிசோதனைகள் செய்தபின் மருத்துவர் சொல்கிறார்
"அறுவை சிகிச்சை செய்து உங்கள் தலைவலியை குணமாக்கி விடலாம்
ஆனால் உங்கள் testicles நீக்கப்பட்டு விடும் "
"வேறு வழி இல்லையா "என்று இவர் கேட்க
இல்லை . உங்கள் உடலமைப்பு சற்று மாறுபட்தாக இருக்கிறது
உங்கள் testicles அதன் மேலுள்ள நரம்பின் மேல் அழுத்தம் கொடுத்த நிலையில் இருக்கின்றன
எனவே அவற்றை நீக்கினால் தான் உங்கள் தலைவலி தீரும்
என்கிறார் மருத்துவர்
பல லட்சங்கள் செலவில் சிகிச்சை செய்யப்பட்டது
தலைவலி இல்லாதில் மனதில் உற்சாகம்
ஆனால் ஒரு வெறுமை உணர்வு
ஒரு புதுப் பிறவி எடுத்த உணர்வு
வரும் வழியில் ஒரு துணிக்கடையில் நுழைந்து சட்டை வாங்க சரியான அளவைத் தேடுகிறார்
உதவிக்கு வந்த கடை விற்பனையாளர்
உங்களுக்கு 95 செ மீ சட்டை சரியான அளவு என்கிறார்
அது மிகப் பொருத்தமாக இருக்கிறது
தன் நீண்ட அனுபவத்தால் விற்பனையாளர் வந்தவருக்கு தேவையான எல்லா உடைகளையும் மிகப் பொருத்தமாக எடுத்துச் கொடுக்கிறார்
இப்போது உள்ளாடை underwear
விற்பனையாளர் 110 அளவை எடுக்கிறார்
வாங்க வந்தவர் அவரை வென்று விட்டது போன்ற உணர்வில்
தவறு 90 தான் எனக்கு சரியான அளவு
பல ஆண்டுகளாக அதைத்தான் பயன்படுத்துகிறேன்
என்றார்
110 தான் சரியான அளவு
90 பயன்படுத்தினால்
அது உங்கள் testicles மேல் ஓர் அழுத்தம் உண்டாக்கி அந்த அழுத்தம் அதற்கு மேலுள்ள நரம்பில் பரவி அதன் விளைவாக தீராத தலைவலி போன்ற பல பிரச்சினைகள் உண்டாகும்
என்றார் விற்பனையாளர்
முதலில் சொன்ன உண்மை நிகழ்வு
இந்தக்கதை
இரண்டுக்கும் தொடர்பு இருப்பது போல் தெரிகிறதா?
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
No comments:
Post a Comment