தமிழ் (மொழி)அறிவோம்
பாரதியின்
“அழகு தெய்வம் “
(மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்)
“எண்ணினால் எண்ணியது நண்ணுங்கான் “ என்றாள்”
எதில் வரும் வரி இது ?
நிறைய சரியான விடைகளை எதி ர்பார்க்கிறேன்
விடை
பாரதியின்
“அழகு தெய்வம் “
(மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன் )
எனும் தனிப்பாடலில் வரும் வரி இது
சகோ ஒருவர் “நான் எந்த முயற்சியும் செய்யவில்லை ,
வினாவை கூகிளில் ஒட்டி வந்த விடையை கட்செவியில் ஒட்டி அனுப்பி விட்டேன் “
என்று சொல்லியிருந்தார்
அப்படி கூகிளில் தேடும்போது வேறு ஒன்றிரண்டு பாடல்கள் கண்ணில் படும் . அதில் ஒரு ஆர்வம் பிறக்கும்
இதுதான் என் நோக்கம் , மற்றபடி உங்கள் அறிவை சோதிப்பதோ என் அறிவை வெளிக்காட்டுவதோ இல்லை
கட்செவியில் நூற்றுக்கு மேல் நண்பர்கள் , முக நூலிலும் பல .
இருந்தாலும் எவ்வளவு எளிதான வினாவுக்கும் முயற்சி செய்து ஒரு பத்துப் பதினைந்து பேருக்கு மேல் விடை அனுப்புவதில்லை
சரியான விடை அனுப்பி வாழ்த்து , பாராட்டுப் பெறும் தமிழ் அறிஞர்கள்
சகோ
அஷ்ரப் ஹமீதா –முதல் சரியான விடை
இதயத்
சிராஜுதீன்
கணேச சுப்ரமணியம்
செங்கை A சண்முகம்
ஹசன் அலி
செல்வகுமார்
ஆரா விஸ்வநாதன்
மரு.கண்ணன் முருகேசன்
மிக ஆர்வமாக முயற்சித்த
சகோ சர்மதாவுக்கு நன்றி
இந்த வினாவை நான் தெரிவு செய்ததற்கு பாடலின் அழகுதான் காரணம்
பாரதி என்றாலே புதிய சொற்கள் உவமைகள் நிறைய வரும் –
பிள்ளைக்கனி அமுதே , பேசும் பொற்சித்திரமே , நிலவூறித் ததும்பும் விழிகள் , அக்கினிக் குஞ்சு,வேடிக்கை மனிதர்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்
.
அழகு தெய்வம் – இந்தத் தலைப்பு இணையத்தில் பல இடங்களில் அழகுத் தெய்வம் என்று வருகிறது
இதை யாரவது சரி செய்ய வேண்டும் . இல்லாவிட்டால் காலப்போக்கில் தவறு சரியாகிவிடும்.
“பொங்கி வரும் பெருநிலவு போன்ற ஒளி முகம் “
“புன்னகையின் புது நிலவும் “
“துங்கமணி மின் போலும் வடிவத்தாள்”
இப்படி எத்தனை புதுமைகள் ஒரு பாட்டில் !
துங்கமணி மின் – என்ன பொருள் தெரியவில்லை
தெரிந்தவர்கள் சொல்லலாம்
“யோகமே தவம் ,தவமே யோகம் “
“ காலமே மதியினுக்கோர் கருவியாம்”என தத்துவங்கள் பலவற்றைச் சொல்லி “முகத்தில் அருள் காட்டினாள் மோகமது தீர்ந்தேன் “ என்று நிறைவு செய்கிறான் கவிஞன்
இந்தப்பாடலில் உள்ள சில தத்துவங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதாய் ஒரு மிக நீண்ட விமர்சனம் முன் வைக்கபடுகிறது
தத்துவங்கள், முரண்பாடுகள் , பிழைகள் அனைவற்றையும் பின்னுக்குத் தள்ளி விட்டு
எண்ணத்திலும் கண்ணிலும் நிலைத்து நிற்பது
மங்கிய நிலவொளியில் மங்கையின் அழகு
அதை படம் பிடித்துக்காட்டும் கவிதை நயமும் சொல்லழகும் மட்டுமே
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
௧௫௦௬௨௦௨௨
15062022புதன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment