திருமறை குரான்
2:154. 3:169
----------இறைவனின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் எனச சொல்லாதீர்கள் .(உண்மையில்) அவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள் . ஆனால் அவர்களின் நிலையை நீங்கள் அறிவதில்லை
இந்த இறை வசனம் வரும் பகுதி எது ?
விடை அனுப்புவோர் இந்த வசனத்தின் விளக்கமும் அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன்
விடை:
வசனங்கள்
2:154 (அல்பக்ரா)
3:169 (ஆல் இம்ரான்)
சரியான விடை அனுப்பி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
சிராஜுதீன் முதல் சரியான விடை
ஹசன் அலி
தல்லத்
ஷர்மதா
விடையுடன் வந்த விளக்கங்கள்
சகோ ஷர்மதா
வசனம் 2:154,மேலும் இதுபற்றி வசனம் 3:169,3;170,3:171 லும் இது பற்றிய விரிவான விளக்கம் தரப்பட்டுள்ளது
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என எண்ணாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்; உணவளிக்கப்படுகின்றனர். தமக்கு அல்லாஹ் வழங்கும் அருளை எண்ணி மகிழ்கின்றனர். தம்முடன் (இதுவரை) சேராமல் பின்னால் (உயிர் தியாகம் செய்து) வரவிருப்போருக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்பதை எண்ணி மகிழ்ச்சியுடன் உள்ளனர். அல்லாஹ்விடமிருந்து கிடைத்த நற்பேறு மற்றும் அருள் பற்றியும், நம்பிக்கை கொண்டோரின் கூலியை அல்லாஹ் வீணாக்க மாட்டான் என்பது பற்றியும் அவர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
திருக்குர்ஆன் 3:169, 170, 171
சகோ சிராஜுதீன
விடை :
இந்த வசனம் அல்குர்ஆனின் பாகம் 2 அல் பகராவில் வசனம் 154 ல் குறிப்பிடப்பட்டுள்ளது
விளக்கம்:
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் எனக் கூறாதீர்கள் ! மாறாக உயிருடன் உள்ளனர் . எனினும் உணர மாடீர்கள் . (அல்குர் ஆன் 2:154)
இந்த வசனம் பற்றி ஹதீஸில், "உயிருடன் உள்ளனர் என்பதன் பொருள் சொர்க்கத்து வாழ்வு தான் என்றும் அவர்களின் உயிர்கள் பச்சை நிறத்து பறவைக் கூட்டுக்குள்ளிருந்து சொர்க்கத்தில் விரும்பியவாறு சுற்றித் திரிகின்றன " என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(அறிவிப்பவர் இப்னு மஸ்ஊத் (ரலி)
நூல் முஸ்லிம் 3500)
இந்த நிலை எல்லா நல்லடியார்களுக்கும் பொதுவானதன்று அல்லாஹ்வின் பாதையில் போரிட்டு கொல்லப்பட்டவர்களுக்கே உரியதாகும் . மற்ற நல்லடியார்களுக்கு இந்த நிலைமை இல்லை.
மற்ற நல்லடியார்களின் நிலை என்ன என்பதைப் பின்வரும் நபிமொழி விளக்குகின்றது .
ஒரு நல்லடியார் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவுடன் கேள்விகள் கேட்கப்படும் . அவர் சரியாக பதில் கூறுவார் . அதன் பின்னர் " புது மணமகனைப் போல் நீ உறங்கு ! அல்லாஹ் உன் உறக்கத்திலிருந்து உன்னை எழுப்பும் வரை உறங்கு !"
(அஹ்மத் , திர்மிதி ஆகிய நூல்களில் இது இடம் பெற்றுள்ளன)
சகோ தல்லத்
2:154 மற்றும் 3:169
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்கள் எனக் கூறாதீர்கள் மாறாக அவர்கள் உண்மையில் உயிருடன் இருக்கிறார்கள் ஆனால் அவர்களின் நிலையை நீங்கள் அறிய மாட்டீர்கள் என்று கூறும் இறைவன் அவர்களைப் பற்றி நாம் அறிந்து கொள்ளும் பொருட்டு சிறு விளக்கம் நமக்கு தருகின்றான். அவர்கள் தம் இறைவனிடமிருந்து தங்களுக்கு தேவையான வாழ்வாதாரத்தை பெற்றுக் கொண்டு இருக்கிறார்கள் அல்லாஹ் தனது அருளில் இருந்து அவர்களுக்கு அளித்தவற்றைக்கொண்டு மகிழ்ச்சியில் திளைத்திருக்கின்றார்கள். தங்களுக்குப் பின் உலகில் வாழ்ந்து வருகின்ற இன்னும் தங்களுடன் வந்து சேராமல் இருக்கின்ற இறைநம்பிக்கையாளர்கள் குறித்து அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள் என்று இவர்கள் மனநிறைவு பெறுகிறார்கள் என்று அவர்களைப் பற்றி நமக்கு கூறுகிறான். மேலும் அல்லாஹ் அளித்த கொடையினாலும் அருளினாலும் அவர்கள் அகமகிழ்வுடன் இருக்கிறார்கள் என்றும் கூறுகிறான்.
: இது விளக்கம் இல்லை.பின் வருகின்ற ஆயத்துகளின் தமிழாக்கம் மட்டுமே.
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
16துல்காயிதா (11) 1443
17062022வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment