திருமறை குர்ஆன்
யாருடைய பிரார்த்தனைக்கு செவி சாய்த்து இறைவன் நபி முகமது ஸல் அவர்களைப் படைத்தான் ?
இது பற்றிய திருமறை வசனம் எது?
விடை
நபி இப்ராஹீம் ,
அவர் மகன் நபி இஸ்மாயில்
வசனம் 2:127.- 129(129)
“நினைவு கூருங்கள்
இப்ராஹிமும் இஸ்மாயிலும் அவ்வீட்டின் (காபாவின்) சுவர்களை உயர்த்திக் கொண்டிருந்தபோது இவ்வாறு பிரார்த்தித்தார்கள்
“எங்கள் இறைவனே ,----------------------------------------------------------
மேலும் இம்மக்களுக்காக அவர்களில் இருந்தே ஒரு தூதரை எழுப்புவாயாகா !
அவர் உன்னுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காட்டுபவராகவும், வேதத்தையும் ஞானத்தையும் அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பவராகவும் ,அவர்களுடைய வாழ்க்கையை தூய்மைப் படுத்துபவராகவும் இருக்க வேண்டும் -----------------------------“
யாரும் விடை அனுப்பாதது வினாவில் ஏதும் தவறோ என்று எண்ணத் தோன்றுகிறது
இருந்த்கால் இறைவன் மன்னிப்பானாக
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
02துல்காயிதா (11) 1443
03062022 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment