Friday, 10 June 2022

திருமறை குரான் – 2:118

 திருமறை குரான் – 2:118

------------“இறைவன் ஏன் எங்களிடம் பேசுவதில்லை “----------
கேட்டது யார் ?
குரானின் எந்தப்பகுதியில் இது வருகிறது ?
விடை :
கேட்டவர்கள் அறியாமையில் மூழ்கி இருப்பவர்கள் l
வசனம் 2:118
அறியாதவர்கள் கேட்கிறார்கள் “
“இறைவன் ஏன் எங்களிடம் பேசுவதில்லை ?
எங்களுக்கு ஏன் சான்று எதுவும் வரவில்லை ?”
இவ்வாறே இவர்களுக்கு முன்பு சென்றவர்களும் கூறினார்கள்
(நேர்வழி தவறிய) இந்த அனைவரின் மனப்பாங்கும் எப்பொழுதும் ஓன்று போல் இருக்கிறது
உறுதியாக நம்புவோருக்கு நாம் சான்றுகளை மிகத் தெளிவாக விளக்கி விட்டோம் (2:118 )
சரியான விடை அனுப்பிய
சகோ
ஹசன் அலி – முதல் சரியான விடை
பீர் ராஜா
இருவருக்கும்
வாழ்த்துகள்
பாராட்டுகள்
விளக்கம்
இந்த வினா கேட்பவர்களின் அறியாமையையும் அதை மிஞ்சிய ஆணவத்தையும் வெளிப்படுத்துகிறது
எதோ மிக உயர்ந்த நிலையில் இருப்பதாய் ஒரு வீண் கற்பனை
இறைவன் இவர்களுக்குக் கட்டுப்பட்டவன் என்ற எண்ணத்தில்
“ இறைவன் ஏன் எங்களிடம் நேரடியாகப் பேசி குரானின் பெருமையை , உண்மைத் தத்துவத்தை விளக்கி தெளிவு படுத்தக்கூடாது “ என்று கேட்கிறார்கள்
இது போன்ற அறியாமை,ஆணவத்தில் எழுந்த வினாக்களுக்கு மறுமொழி சொல்வதே வீண் வேலை
“எங்களுக்கு ஏன் சான்று எதுவும் வரவில்லை ?” என்பதற்கு மறுமொழியாக
“உறுதியாக நம்புவோருக்கு நாம் சான்றுகளை மிகத் தெளிவாக விளக்கி விட்டோம் “ என்று இறைவன் சொல்கிறான்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
09 துல்காயிதா (11) 1443
10062022 வெள்ளி
சர்புதீன் பீ
No photo description available.
3 Shares
Like
Comment
Share

No comments:

Post a Comment