தமிழ் (மொழி) அறிவோம்
“பொருந்தலை இகழ்தற்கு ஒத்த
காரணம் இதுவே ஆயின் என் உயிர்
காண்பென் “
எந்த இலக்கியத்தில் யார் யாரிடம் சொன்னது ?
விடை
கம்ப இராமாயணம் –
இராமனிடம் சூர்ப்பனகை சொல்வது
பாடல்
“ஆரண மறையோன் எந்தை ;அருந்ததிக்
கற்பின் எம் மோய்
தாரணி புரந்த சால கடங்கட
மன்னன் தையல்
போர்அணி பொலம் கொள் வேலாய்
பொருந்தலை இகழ்தற்கு ஒத்த
காரணம் இதுவே ஆயின் என் உயிர்
காண்பேன் “என்றாள்
பொருள் -சுருக்கமாக - நான் அந்தணர் குலம் ,அரக்கர் குலம் கலந்த பெண் .குளத்தை வைத்து என்னை ஓதிக்கினால் நான் உயிர் துறப்பேன்
சரியான விடை எழுதி வாழ்த்து, பாராட்டுப் பெறும் தமிழ் அறிஞர்கள்
சகோ
இதயத்துல்லா –முதல் சரியான விடை
செங்கை A சண்முகம்
ஹசன் அலி
சிராஜுதீன்
சிவசுப்ரமணியம்
கணேச சுப்பிரமணியன்
அஷ்ரப் ஹமீதா &
ராஜாத்தி
( சிலப்பதிகாரத்தில் கண்ணகி பாண்டிய மன்னனிடம் கூறுவது என்றொரு விடை – எப்படி என்று தெரியவில்லை )
எளிதான இந்த விடைக்குப்பின் அறிஞர் பெருமக்கள் தொடுத்த, கொடுத்தபல வினாக்கள், விளக்கங்கள் இருக்கின்றன
அவற்றை சுருக்கமாகப் பார்ப்போம்
இலக்கியம் என்றால் மனம் திறந்து கருத்துகள் , விமர்சனங்கள் எழுதலாம் . இதுவோ பக்தி இலக்கியம் எனவே சில கட்டுப்பாடுகள் குறிப்பாக மற்றவர்களுக்கு
எனவே நான் இங்கு வலையில், முக நூலில் பிறர்பதிந்த கருதுக்களை மட்டும் தருகிறேன்
வால்மீகி ராமாயணத்தில் இராமனை சூர்ப்பனகை அணுகி திருமணம் பற்றி பேச்சு எடுத்தவுடன் “நான் ஏகபத்தினி விரதன்
எனக்கு திருமணம் ஆகிவிட்டது அதனால் உன்னை ஏற்க முடியாது” என்று இராமன் மறுத்து விடுகிறான்
ஆனால் கம்பனில் இராமன் சூர்ப்பனகை இடையே ஒரு நீண்ட சுவையான உரையாடலைத் தருகிறான்
திருமகள் அருளால் மிக அழகிய பெண்ணாக வந்த சூர்ப்பனகையின் அழகை இராமன் பெரிதும் வியந்து பாராட்டுகிறான்
சீதை அங்கு வரும்வரை இந்த உரையாடல் தொடர்கிறது
திருமணப் பேச்சை உடனே இராமன் மறுக்கவில்லை . குலம் கோத்திரம் என்ற காரணம் காட்டித்தான் மறுக்கிறான்
இது பற்றி பல்வேறு கருத்துக்கள்
வேடர் குலத்தைச் சேர்ந்த குகனை தன் உடன் பிறப்பாக ஏற்றுக்கொண்டு
“இனி நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம் “ என்று இராமன் சொல்வது ஒரு புகழ் பெற்ற வரியாகும்
இன்னும் ஒரு படி மேலே போய்
சீதை உன் கொழுந்தியாள் என்று சொல்கிறான்
“இந்நன்னுதல் அவள் நின் கேள் “
மேலும் மனித இனமே அல்லாத ஜடாயுவை தந்தையாக ஏற்றுக்கொண்டு இறுதிச் சடங்குகள் செய்கிறான்
இவ்வளவு பரந்த மனம் கொண்ட இராமன் குலத்தைக் காரணம் காட்டி மறுப்பது சரியா ?
ஒருவேளை அவள் அரசகுலம் என்றால் ஏற்றுக்கொண்டிருப்பானோ?
என்ற வினாக்கள் எழுகின்றன
இதற்குமேல் இது பற்றி நான் எழுதவில்லை
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
௦௮௦௬௨௦௨௨
08062022 செவ்வாய்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment