Wednesday, 29 June 2022

நயத் தக்க நபித் தோழர்கள் – முதல் பகுதி

 நயத் தக்க நபித் தோழர்கள் –

முதல் பகுதி
சத்திய சஹாபாக்கள் , தாபீன்கள் தபாத் தாபீன்கள்
வெள்ளிக்கிழமை கூட்டுத் தொழுகைக்கு பள்ளிக்குப் போகிறவர்கள் காதில் இந்த சொற்கள் விழுந்திருக்கும்
யார் இந்த சஹாபாக்கள் , அவர்கள் தகுதி என்ன சிறப்பு என்ன ?
சற்று சுருக்கமாக விவரிக்க முயற்சிக்கிறேன் ,இறைவன் அருளால்
இன்னும் ஓரிரு நாட்களில் துல்ஹஜ் எனும் புனித மாதம் துவங்குகிறது .இஸ்லாமிய ஆண்டை நிறைவு செய்யும் இந்த மாதத்தில்தான
உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் இஸ்லாத்தின் ஐந்தாவது கடமையாகிய ஹஜ் எனும் புனிதப் பயணத்தை மேற்கொள்கிறார்கள்
.இந்த மாதத்தின் முதல் பத்து நாட்களும் வழக்கமான பதிவுகள் போடாமல் இஸ்லாம் பற்றிய பதிவுகள் சில ஆண்டுகளாக போட்டு வருகிறேன்
அந்த வரிசையில் இந்த ஆண்டு உடன் பிறப்புகள் சொன்னபடி சஹாபாக்கள் பற்றி எழுத எண்ணுகிறேன்
எழுத நினைத்தால் எழுத வேண்டியதுதானே எதற்கு சுற்றிச் சுற்றி வருகிறாய் என்று கேட்பீர்கள்
அதற்கும் காரணம் இருக்கிறது
.இன்னும் மனம் இந்தப் பணிக்கு முழுமையாக ஆயத்தமாகவில்லை
இது வரை பெரும்பாலும் குரான் பற்றிய பதிவுகளே போட்டு வந்தேன் .
இறைவன் படைத்து பாதுகாக்கும் குர்ஆனின் வசனங்களில் மாற்றுக்கருத்துக்கு இடம் கிடையாது
அதிலிருத்து விலகி வேறு பதி வுகள் போடுவதை மனம் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை
இது போன்ற பதிவுகள் பற்றி யாரும் கருத்து , குறை நிறை சொல்லமாட்டார்கள் . எனவே யாரவது படிக்கிறார்களா என்ற ஐயம் உண்டாகும் . அதுவும் தயக்கத்துக்கு ஒரு காரணம்
வினா விடையாகப்போட்டால் இரண்டு மூன்று விடைகளாவது வந்து விடும்
எப்படியோ வழக்கம்போல் இறைவன் மேல் பொறுப்பையும் சுமையையும் இறக்கி வைத்து விட்டு எழுதத் துவங்குகிறேன்
சஹாபாக்கள் – சுருக்கமாக , எளிதாக நபித் தோழர்கள் என்று சொல்லலாம்
(சகா – சஹாபா ஏதேனும் தொடர்பு உண்டா ?)
சற்று விளக்கமாகச் சொல்வதென்றால்
நபி பெருமான் காலத்தில் வாழ்ந்து
நபி பெருமானை சந்தித்துப்பேசி ,
நபி பெருமான் சொல் கேட்டு ஏக இறைக்கொள்கையான இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு வாழ்நாள் முழுதும் அந்த வழியிலேயே நடந்தவர்கள்தான் சஹாபாக்கள்
நபி பெருமானின் நெருங்கிய உறவினர்கள் பலர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாததால் அவர்களுக்கு இந்த சஹாபா என்னும் உயர் நிலை கிடைக்கவில்லை
அது போல நபி அவர்கள் காலத்தில் வாழ்ந்த பல இஸ்லாமிய இறை நேசர்களுக்கு நபி பெருமானை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காதால் அவர்களும் சஹாபாக்கள் ஆகவில்லை
தர வரிசையில் நபி மார்களுக்கு அடுத்தபடி சஹாபாக்கள் வருகிறார்கள்
நபி பெருமான் பேருக்குப்பின் ஸல்லலாஹு அலா முஹமது முகமது ஸல்லலாஹு அலைஹுவசல்லம் என்ற வாழ்த்தை சுருக்கமாக ஸல் என்று சொல்வது போல்
சஹாபாக்கள் பேருக்குப்பின் ரலி (ளி/ழி) என்று சொல்லவேண்டும்
சரி அப்படி என்னதான் செய்தார்கள் சஹாபாக்கள் ?
இஸ்லாத்தின் வேர்கள், விழுதுகள் சஹாபாக்களே என்று சொல்வதுண்டு
தங்கள் வீடு வாசல், சொத்து சுகம் அனைத்தையும் துறந்து மறந்து இஸ்லாத்தை பரப்பும் பணியில் ஈடுபட்டவர்கள்
நபி பெருமானுக்கு வஹி எனும் நிலையில் இறங்கும் இறை வசனங்களை நபி சொல்வதை கேட்டு மனதில் நிறுத்தி உடனே எழுதியும் பாதுகாத்து உலகுக்கு அளித்தவர்கள்
இன்றளவும் குர்ஆனில் மாற்றங்கள் எதுவும் செய்ய முடியாமல் இருப்பதற்கு பல்லாயிரக்கணக்கான் சஹாபாக்கள் மனனம் செய்து பாதுகாத்ததும் ஒரு காரணம்
அதே போல் (வஹி அல்லாத ) இயல்பு நிலையில் நபி பெருமானின் வாயி லிருந்து வரும் ஒவ்வொரு சொல்லையும் , உடலின் ஒவ்வொரு அசைவையும் ஒவ்வொரு செயலையும் பதிவு செய்து ஹதீஸ் எனும் நபி மொழிகளாக உலகுக்கு அளித்தார்கள் .
நபியின் தாடியில் எத்தனை முடிகள் போன்ற நுண்ணிய செய்திகளைக் கூட உன்னிப்பாகக் கவனித்து பதிவு செய்வார்கள் என்று சொல்வதுண்டு
“நீங்கள் உஹுது மலை அளவு தங்கத்தை தருமம் செய்தாலும் அது சஹாபாக்களின் தருமத்துக்கு ஈடாகாது “
“ சஹாபாக் களை குற்றம் சொன்னால் அதே என்னைக்குற்றம் சொல்வது போலாகும் “
இவை நபி மொழிகள்
சஹாபாக்கள் மொத்தம் எத்தனை பேர் ?
அவர்களில் தர வரிசை உண்டா ?
சஹாபாக்கள பற்றி குரான் என்ன சொல்கிறது ?
அடுத்த பதிவில் பார்ப்போம்
நிறைவு செய்யுமுன் ஒரு எளிய வினா (பழக்கத்தை விட முடியவில்லை)
சஹாபாக்கள் பெயரின் பின்னால் வரும் ரலி (ளி/ழி)- முழு வடிவம் என்ன ? பொருள் என்ன ?
இறைவன் நாடினால் நாளை நபித்தோழர்களை சிந்திப்போம்
29 துல்காயிதா (11)1443
30062022 வியாழன்
சர்புதீன் பீ
No photo description available.
4 Shares
Like
Comment
Share

No comments:

Post a Comment