தமிழ் (மொழி)அறிவோம்
நண்பர்கள் இருவர் தொடர் வண்டிப் பயணம்
சிற்றுண்டி விற்கும் பெண்ணிடம் காலை உணவு வாங்குகிறார்கள்
அதில் ஒருவர் தான் வாங்கியதை விற்பனைப் பெண்ணிடம் திருப்பிக் கொடுக்கிறார்
ஏன் என்று நண்பர் கேட்க
“ ஊசியிருக்கு ,நூலுமிருக்கு எனவே தையலுக்குக் கொடுத்துவிட்டேன் “
என்கிறார்
அவர் சொன்னதன் பொருள் என்ன ?
மிக எளிய, ஒரு வேடிக்கை வினா
விடை
வாங்கிய வடை பழையதாக ஊசிப்போய் இருந்தது
ஊசிய வடை நூல் போல் வரும்
தையல் என்பது பெண்ணைக் குறிக்கும்
சரியான விடை அனுப்பி வாழ்த்து , பாராட்டுப் பெறுவோர்
சகோ
அஷ்ரப்ஹமீதா – முதல் சரியான விடை
செங்கை A சண்முகம்
ஆண்டி கவுண்டர்
ஹசன் அலி
மெஹராஜ்
கனகராஜ்
சிராஜுதீன் .
பாப்டி
பர்ஜானா
ஷிரீன் பாருக்
சுராஜ் .
இதயத்
தல்லத்.
பன்னீர்
ஷர்மதா
இளைய தலை முறைக்கு தையல் என்ற சொல் தெரிந்திருக்காது என்ற என் எண்ணத்தை முறியடித்து
அடுத்த தலைமுறையில் ஐந்து பேர் சரியான விடை அனுப்பியதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி
பல முறை எங்கள் அத்தா சொல்லக்கேட்ட இந்த எளிய வினா விடையில் ஒரு எதிர்பாராத திருப்பம்
“இந்த வரிகள் பாரதிதாசன் இயற்றிய குடும்ப விளக்கில் வருவது , நான் ஏழாவது வகுப்பில் “
என்று சகோ இதயத் குறிப்பிட்டிருந்தார்
என்னால் முடிந்த அளவுக்கு குடும்ப விளக்கின் ஐந்து பாகங்களையும் மேலோட்டமாகப் பார்த்து விட்டேன் கிடைக்கவில்லை
சகோ இதயத் அல்லது வேறு யாருக்கும் தெரிந்தால் பதிவு செய்யவும்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
௨௨ ௦௬ 2௨௨௨
22062022 புதன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment