நயத்தக்க நபித் தோழர்கள் –
பகுதி 3
நேற்றைய பதிவில் முதல் அணியில் இருக்கும் பத்து சஹாபாக்களில் நால்வர் பற்றி ஒரு சிறிய அறிமுகம் போல சுருக்கமாகப் பார்த்தோம்
இனி மற்ற ஆறு சஹாபாக்களில் மூவர்
5.தல்ஹா 6.ஜூபைர்
7. அப்துல் ரஹ்மான்
பற்றி சுருக்கமாகபார்ப்போம்
5. தல்ஹா
இஸ்லாத்தில் முதலில் இணைந்த எட்டுப்பேரில் ஒருவர்
மிகப் பெரிய போர் வீரர் ;உஹதுப்போரின் நாயகர்
நபி பெருமானைக் காப்பாற்ற நபிக்குக் கேடயமாக நின்று `தன் வலது கையை இழந்தவர்
“உயிரோடு பூமியில் உலாவிக்கொண்டிருக்கும் ஷஹீது “ என்று நபி பெருமானால் சொல்லப்பட்டவர்
(இறந்த ஒருவர்தான் ஷஹீது எனப்படுவார் )
உண்மையை எடுத்துச் சொல்வாதற்குத் தயங்காதவர்
முழுக்க முழுக்க சஹாபாக்களுக்குள்ளேயே நடந்த ஜமல் போரில் கொல்லப்பட்ட்வர்
6. ஜூபைர்
ஜூபைர் என்றால் வீரம் வீரம் என்றால் ஜுபைர் என்று சொல்லும் அளவுக்கு ஒரு அவரது தாயார் அவரை சிறுவயதிலிருந்தே அச்சம் என்பதை அறியாதவராக வளர்த்து வந்தார்
“எனது சீடர், “ என்று நபி பெருமான் வாயால் அழைக்கப்பட்டபெருமை உடையவர் .
பலவகையிலும் நபிக்கு நெருங்கிய உறவினர் ,
நபியின் நேர்முக உதவியாளர்
16 வயதிலேயே மிகப்பெரிய இஸ்லாமிய அழைப்பாளராக ஆனவர்
அபிசீனிய நாட் டில் உள்ள ஹபஷாவுக்கு ஹிஜ்ரத் செய்த இவர் அந்நாட்டு மன்னருக்கு மிகா நெருக்கமானவராக ஆகிவிட்டார்.
அந்த நேர்மையான அரசர் பின்னால் இஸ்லாத்தில் இணைந்து விட்டார், அவர் ஜூபைருக்கு ஒரு சிறிய கைதடியை பரிசாகக் கொடுத்தார்
பல ஆண்டுகள் அந்தக் கைத் தடியை எப்போதும் கையில் வைத்திருந்த ஜுபைர் பின்னர் நபி அவர்களுக்கு கொடுத்து விட்டார்
நபியிடமிருந்து அபூபக்கர் , உமர் உத்மான் , அலி என பல கலிபாக்கள் கை மாறிய அந்தக் கைதடியை அனைவரும் ஒரு மதிப்போடு கையில் வைத்திருந்தார்கள்
அலி. அவர்கள் முன்னிலையில் ஜுபைர் கொல்லப்பட, ஜுபைரின் குடும்பத்தினர் அந்தத் தடியை கேட்டு வாங்கிகொண்டனர்
போர்க்களத்தில் ஜுபைரை எதிர்க்கத் துணிவில்லாத அவரது எதிரிகள் , அவர் தொழுகும்போது பின்னாலிருந்து வெட்டிக் கொலை செய்தார்கள்
7. அப்துல் ரஹ்மான்
அப்துல், ரஹ்மான் இரண்டும் இறைவனுக்கு மிகப்பிரியமான பெயர்கள் .
இந்த சஹாபியும் தன் நேர்மையால் , ஊழைப்பால்,வீரத்தால் ,வாரி வழங்கும் வள்ளல் தன்மையால், அறிவுக்கூர்மையால் இறைவனுக்கும் நபிக்கும் பிரியமானவராய் வாழ்ந்தார்
அபிசீனியாவில் உள்ள ஹபஷா ,பின்னர் மதீனா என்ற இரு இடங்களுக்கும் ஹிஜ்ரத் செய்த ஒரு சிலரில் ஐவரும் ஒருவர்
எல்லாபோர்களிலும் –குறிப்பாக உஹதுப்போரில் மின் வரிசையில் நின்று போரிட்டு அதில் பட்ட காயத்தா,ல் வாழ்நாள் முழுதும் விந்தி விந்தி நடந்தார்
நபி அவர்களால் தலைப்பாகை கட்டிவிடப்பட்ட சிறப்பு உடையவர்
மதினாவுக்கு புலம் பெயர்ந்த (ஹிஜ்ரத் செய்த)அப்துல் ரகுமானை மதினாவில் உள்ள மிகப்பெரிய செல்வந்தரான ஒரு அன்சாரி சஹாபியிடம் நபிகள் இணைத்து விட்டார் .
சக்து என்ற பெயர கொண்ட அந்த அன்சாரி, தன வீடு, வாசல், வயல் சொத்து சுகம் அனைத்திலும் பாதியை அப்துல் ரகுமானுக்குக் கொடுக்க முன்வந்தார்
ஆனால் அப்துல்ரகுமான் அவற்றையெல்லாம் தன்மையாக மறுத்து விட்டு “எனக்கு இந்த ஊரில் உள்ள பெரிய வணிகத்தெருவைக் காண்பியுங்கள் அது போதும் “ என்றார்
அங்கே போய் தன்னத்தனியாக , முதல் எதுவும் இல்லாமல் சிறுகச் சிறுக கடனுக்கு வாங்கி விற்று , தன நேர்மையாலும் குறைந்த லாபத்தில் விற்றதாலும் விரைவில் மிகப்பெரிய வணிகராய் , செல்வந்தராய் மாறினார்
பிறகு திருமணம் செய்து கொண்டு, நபி பெருமான் சொற்படி ஒரு ஆட்டை அறுத்து விருந்து கொடுத்தார்
நபி பெருமான் தன வாழ்நாளில் இரண்டு பேருக்குப் பின்னால்தான் நின்று தொழுதிருக்கிரர்கள்
அதில் ஒருவர் அப்துல் ரஹ்மான் (மற்றவர் அபூபக்கர் )
நபி பெருமான் வீட்டுச் சென்ற 9 மனைவிமாரையும் தன் தாய்போல் காத்துப் பராமரித்தார்
அவர்கள் உமர் ஆட்சிக்காலத்தில் உம்ரா செய்ய விரும்பியபோது அவர்களுக்கு அரசு சார்பில் துணையாகப் போன இருவரில் ஒருவர் அப்தல் ரஹ்மான்
உமர் அவர்களின் இறுதிக்காலத்தில் அடுத்த கலிபாவை முடிவு செய்ய அமைக்கப்பட்ட குழுவில் இடம் பெற்றவர்,
இவர் சொன்னபடி உஸ்மான் அடுத்த கலிபாவாக தெரிவு செய்யப்பட்டார்
தனது 75 ஆவது வயதில் உயிர் நீத்த இவர் ஜன்னத்துல் பகியில் அடக்கம் செய்யப்பட்டார்
.
இறைவன் அவர்களைப் பொருதிக்கொள்வானாக
நேற்றைய வினா
பல்லாயிரக்கணக்கான சஹாபாக்ளில் குர்ஆனில் பெயர குறிப்பிடப்படும் சஹாபாக்கள் யார் யார் ?
விடை :
ஒரே ஒரு சஹாபியின் பெயர் மட்டுமே குரானில் வருகிறது
அந்தப் பெருமைக்குரியவர்
ஜய்த் (Zaid bin Harisa)
அல் அஹ்சாப்( 33) சுராவில் வசனம் 37 ல் இவர் பெயர் வருகிறது .
இது பற்றிய செய்திகளை முன்பே எழுதியிருக்கிறேன்
சரியானா விடை அனுப்ப்பிய ஒரே சகோ
ஹசன் அலிக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்
இன்றைய வினா
நேற்றைய பதிவின் நிறைவுப்புகுதியில் குர்பான் கொடுக்கும் எண்ணம் உள்ளவர்கள் குர்பான் கொடுக்கும் வரை
முடி, நகம் களைவதைத் தவிர்க்க வேண்டும் என்று எழுதியிருந்தேன்
இந்த நபி மொழியின் பின்னணி , காரணம் என்ன ?
இறைவன் நாடினால் நாளை நபித்தோழர்களை சிந்திப்போம்
02 துல்ஹஜ் (12)1443
0207 2022 சனிகிழமை
சர்புதீன் பீ
No comments:
Post a Comment