Tuesday, 5 July 2022

நயத்தக்க நபித் தோழர்கள் – பகுதி 7 இப்ன் உம் மக்தும் சுராஹ் 80 அபசஅவர் கடுகடுத்தார்

 நயத்தக்க நபித் தோழர்கள் –

பகுதி 7
சென்ற பகுதியில்
கவ்லா என்ற சஹாபியாவின் பிரச்சினையைக் கேட்டு இறைவன் உடனே தீர்வ சொன்னது பற்றியும் அதன் மூலம்
லிகர் எனும் மூடத்தனமான மணமுறிவு வழக்கம் ஒழிக்கப் பட்டதையும் பார்த்தோம்
இன்று இனொரு சஹாபா பற்றிப் பார்ப்போம்
அவர்
Ibn Umm Maktum இப்ன் உம் மக்தும்
இந்தப்பெயர் பலரும் அறியாத ஒன்றாக இருக்கலாம் . ஆனால் அவர் பற்றிய நிகழ்வு , அது பற்றி இறங்கிய கிருமறை வசனம் பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்
இஸ்லாத்தில் துவக்க நிலையில் இணைந்த சிலரில் இவரும் ஒருவர்
இவர் கண் தெரியாதவர்
நபி பெருமான் அவர்கள் மக்காவின் பெருந்தலைகளோடு சபையில் அமர்நதிருக்கிரார்கள். அந்தப் பெரிய மனிதர்களை இஸ்லாத்தில் இணைக்க முயற்சி செய்கிறார்கள்
அப்போது இந்த சஹாபி இஸ்லாம் பற்றிய சில விளக்கங்கள் கேட்பதற்காக நபியை அணுகுகிறார்
இந்த இடையூறை விரும்பாத நபி அவர்கள் சஹாபியை புறக்கணித்து முகத்தைத் திருப்பிக் கொள்கிறரர்கள்
நபியின் இந்தச் செயல் தவறு ஈன்று சுட்டிக்காட்டும் முகமாகஇறங்கிய இறைவசனம் .
..
சுராஹ் 80 அபச
“ அவர் கடுகடுத்தார் , முகத்தைத் திருப்பிக் கொண்டார்
கண் தெரியாதவர அவரிடம் வந்தபோது (80:1,2)
இந்த இரண்டு வசனங் களும் இறைவன் பொதுவாகப் பேசுவது போல் அமைந்துள்ளன
ஆனால் அடுத்தடுத்து வசனங்கள் இறைவன் நேரடியாக நபியை நோக்கிப் பேசுவது போல் இருக்கின்றன
“உங்களுக்கு எப்படித் தெரியும் ?
அவர் சீர்திருந்தக்கூடும் “
“அல்லது அறிவுரைக்கு செவி சாய்க்கக் கூடும் (80:3,4)
“எவன் அலட்சியம் செய்கின்றானோ அவன் பக்கம் நீங்கள் கவனம் செலுத்துகின்றீர்கள் “(80:5.6)
“மேலும் எவர் இறைவனை அஞ்சியவராக உங்களிடம் விரைந்து வருகிறாரோ அவரிடம் நீங்கள் பாரா முகமாக் இருந்து விடுகிறீர்கள் (80:8.9.10)
இதன் பொருள்
நபி யாரிடம் உரையாடடிக்கொண்டிருந்தாரோ அந்தப் பெரிய மனிதர்கள் இஸ்லாத்தில் இணைவார்களா என்பது தெரியாது . அந்த அளவுக்கு அவர்கள் நபி சொல்லை அலட்சியப் படுத்துகிறார்கள்
ஆனால் இந்த சஹாபி இறைவனை அஞ்சி ஏற்கனவே இஸ்லாத்தில் துவக்க காலத்திலேயே இணைந்தவர்
.
அவர் உங்களிடம் எதோ விளக்கம் கேட்க வரும்போது அவரை அலட்சியப்டுதியது சரியல்ல என்கிறான் இறைவன்
இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளும் சில செய்திகள் :
நபியே தவறு செய்தாலும் சுட்டிக்காட்ட இறைவன் தயங்குவதில்லை
ஏற்கனவே அன்னை ஆயிஷா மேல் வீண் பழி சுமத்தப்பட்டபோது அதற்கான சாட்சிகளை ஏன் நபி கோரவில்லை என வினா எழுப்புகிறான் இறைவன்
மேலும் திருமறை குரான் முழுக்க முழுக்க இறைவன் படைப்பு ; எதிரிகள் சொல்வது போல் நபி பெருமான் உண்டாக்கியது அல்ல என்பது உறுதியாகிறது
நேற்றைய வினா
“எவன் அலட்சியம் செய்கிறானோ அவன் பக்கம் நீங்கள் கவனம் செலுத்துகிறீர்கள் “
இது குரானின் எந்தப்பகுதியில் வரும் வசனம் ?
விடை
மேலே சொல்லப்பட்ட வசனம் 80:5,6
இந்த சூராவின் பெயர்
“அவர் கடுகடுத்தார் (அபச ) என்பதாகும்

சரியான விடை அனுப்பிய ஒரே சகோ
ஹசன் அலிக்கு
வாழ்த்துகள் பாராட்டுகள்

இன்றைய வினா
“--------வீடுகளுக்குள் அவற்றின் வாயில்கள் வழியாகவே வாருங்கள்--------------
திருமறையில் எந்த வசனத்தின் பகுதி இது?
இறைவன் நாடினால் விடை விளக்கத்துடன் நாளை சஹாபாக்களை சிந்திப்போம்
06 துல்ஹஜ் (12)1443
06 07 2022 புதன்
சர்புதீன் பீ
May be an image of text
4 shares
Like
Comment
Share

No comments:

Post a Comment