திருமறை குரான்
நீங்கள் (புனித ஹஜ் பயணத்தின்போதுவணிகம் செய்து) உங்கள் இறைவனிடமிருந்து அருளைத் தேடிக்கொள்வது உங்கள் மீது குற்றமில்லை
இது குர்ஆனில் எந்தப் பகுதியில் வருகிறது ?
விடை
சுராஹ் அல் பக்ராவில் வரும் வசனத்தின் பகுதி இது
2:198
சரியான விடை அனுப்பி வாழ்த்து ,பாராட்டுப் பெறுவோர்
சகோ
சிராஜுதீன் – முதல் சரியான விடை
ஹசன் அலி
விளக்கம்
அரபு நாட்டில் நிலவிய பல மூட நம்பிக்கைகளை , பழக்க வழக்கங்களை முடிவுக்குக் கொண்டு வந்தது இஸ்லாம்
புனித ஹஜ் பயணம் மேற்கொண்டவர்கள் வீடு திரும்பும் போது புறவாசல் வழியாக நுழையும் பழக்கத்தை மாற்றியது பற்றி முன்பு பார்த்தோம்
அதுபோல் புனிதப் பயணத்தின்போது வணிகத்தில் ஈடுபடக் கூடாது என்ற மூட நம்பிக்கை இந்த வசனந்தின் மூலம் அகற்றப்படுகிறது
வட்டியைக் கடுமையாகச் சாடி தடை செய்யும் இஸ்லாம் , நேர்மையான வணிகத்தின் மூலம் பொருட்செல்வம் மட்டுமல்ல அருட்செல்வமும் கிடைக்கும் என்கிறது
ஜும்மா சூராஹ் வசனம் 62 :10 லும் வணிகம் பற்றிய இந்தக் கருத்து வலியுறுத்தப்படுகிறது
(எங்கள் ஹஜ் புனிதப் பயணத்தில் காலை(பஜ்ர்) தொழுகை முடிந்து வரும்போது இந்தோனேசியப் பெண்கள்
“கொய்னாபு “என்று கூவி விற்பனை செய்தது நினைவில் வருகிறது
.நம் ஊர் இட்லி போல் ஆவியில் வெந்த உணவுப்பண்டம்
நிறத்தில் போண்டா போல் இருக்கும்
சுவைக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை )
இறைவன் நாடினால் நாளை மீண்டும் சிந்திப்போம்
15 துல் ஹஜ்(12) 1443
15 07 2022 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment