தமிழ் (மொழி )அறிவோம்
செங்கீரைப் பருவம்
“செங்கீரை “
தமிழ் இலக்கியத்தில் எதைக் குறிக்க, எதற்கு ஒப்பாக சொல்லப்படுகிறது ?
விடை
பிள்ளைத் தமிழ் இலக்கியத்தில் குழந்தையின் ஐந்தாவது மாதம்
செங்கீரைப் பருவம் என அழைக்கப்படுகிறது
பத்துப் பகுதிகளாக உள்ள பிள்ளைப் பருவத்தில் இரண்டாவது பருவம்
செங்கீரைபருவம் ஆகும்
சரியான விடை அனுப்பி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஹிதயத் – முதல் சரியான விடை
D R சுந்தரம்
நஜிமா பெரோஸ்
சிவசுப்ரமணியன்
ஆ ரா விஸ்வநாதன்
ஹசனலி
ஷர்மதா
கணேச சுப்ரமணியம்
விடையுடன் விளக்கமும் அனுப்பிய அனைவருக்கும் நன்றி
விளக்கம்
தமக்குப் பிடித்த தெய்வங்கள் , அரசர்களை குழந்தைகளாக உருவகப் படுத்தி பாடல் இயற்றுவது பிள்ளைத் தமிழாகும்
3ஆம் மாதம் முதல் 21 ஆம் மாதம் வரை உள்ள குழந்தைப் பருவத்தை பத்துப்பகுதிகளாப் பிரித்துப் பாடுவது வழக்கம்
இதில்
காப்பு, செங்கீரை ,தால் ,
சப்பாணி முத்தம் வருகை, அம்புலி
இந்த எழும் ஆண், பெண் குழந்தைகளுக்குப் பொதுவானவை
மற்ற மூன்றும் ஆண் பெண்ணுக்குத் தனியாக உள்ளன.
(அடைப்புக் குறியில் உள்ளது பெண்களுக்கு)
சிற்றில் (நீராடல் ) சிறுபறை (அம்மானை ) சிறுதேர் (ஊசல் )
இவற்றில் இரண்டாவது உள்ளது செங்கீரைப் பருவம் .
5 இல் துவங்கி 7 ஆம் மாதம் உள்ள இந்தப் பருவத்தில் குழந்தை ஒரு காலை உயர்த்தி மற்ற காலை மடக்கி
இரு கைகளையும் தரையில் ஊன்றிக்கொண்டு முகத்தை மேலே உயர்த்தி ஆடுவதைப் பார்த்தால் செங்கீரை செடி காற்றில் அசைவது போல் மிக அழகாக இருக்கும்
செங்கீரை செடியை , அது காற்றில் அசைவதைப் பார்க்கும் வாய்ப்பு பலருக்கும் கிடைத்திருக்காது
பரபரப்பான இந்த துரித வாழ்க்கையில் குழந்தையின் செயல்களைப் பார்த்து ரசிக்கவும் நேரம் இருக்காது
வழக்கத்தை விட கொஞ்சம் (உண்டன ) விரிவாக எழுதத் தோன்றியது , எழுதி விட்டேன்
இறைவன் நாடினால் நாளை மீண்டும் சிந்திப்போம்
௧௩ ௦௭ ௨௦௨௨
13 07 2022 புதன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment