நயத்தக்க நபித் தோழர்கள் –
பகுதி 4
நேற்றைய பதிவில் முதல் அணியில் இருக்கும் பத்து சஹாபாக்களில் மூவர் பற்றி ஒரு சிறிய அறிமுகம் போல சுருக்கமாகப் பார்த்தோம்
இனி மீதி மூவர் 8.ஸ அத் 9.சயீது 10. அபு உபைதா
பற்றி சுருக்கமாகபார்ப்போம்
ஸ அத்
நபி பெருமானுக்கு நெருங்கிய உறவினர்
இஸ்லாத்தில் முதலில் இணைந்த எட்டுப்பேரில் ஒருவர்
நபி காலத்துக்குப் பிந்தைய கலிபாக்களை வழி நடத்த அமைக்கப்பட்ட குழுவில் இடம் பெற்றவர்
“இவர் எனக்கு மாமா ஆவர் . இவரைப்போல் எனக்கு உறவு யார் இருக்கிறார் “ என்று நபியால் போற்றப்பட்டவர்
அம்பு எறிவதில் மிகத் திறமை உடையவர் . அதன் மூலம் பல எதிரிகளை வீழ்த்தி தம் படை வீரர்கள் பலரைக் காப்பாற்றியவர்
அதற்குப் பாராட்டாக “என் தாயும் உனக்கு அர்ப்பணமாகட்டும் “ என நபியால் வாழ்த்தப் பட்டவர்
நிறைய பொருள் சம்பாதித்து இறை வழியில் வாரி வழங்கியவர்
கலிபா உமர் காலத்தில் நடந்த காதிஸிய்யா போரில் தளபதியாய் இருந்தவர்
உடல் நலிவுற்ற நிலையில் தன் சொத்து முழுதையும் இறை வழிக்குக் கொடுக்க முன்வந்தபோது நபி அவர்கள் அதைத் தடுத்து மூன்றில் ஒரு பங்குக்குமேல் வேண்டா,ம் . உங்கள் குடும்பத்தயும் கவனியுங்கள் என்று சொன்னார்கள்
இது சொத்துப்பிரிவினையில் ஒரு முக்கியாமான ஷரி அத் சட்டமாக - யாரும் தன் சொத்தில் மூன்றில் ஒரு பங்குக்கு மேல் வாரிசு அல்லாதோருக்கு எழுதி வைக்க முடியாது – என்று உருவானது
அவர் மரித்த பின் அவர் விருப்பபடி , பத்ருப் போரில் அவர் அணிந்த ஆடை அவர் உடலுக்கு அணிவிக்கப்ட்டு, மஸ்ஜீதூ நபவியில் உள் பள்ளியில் ஜனாசா தொழுகை நடத்தப்பட்டு ., ஜன்னத்து பக்கியில் அடக்கம் செய்யப்பட்டது
சயீத் இப்னு ஜைது
சயீத் பற்றி சொல்வதற்கு முன் அவரது தந்தை ஜைது பற்றிச் சொல்லியே ஆகவேண்டும்
இவர் நபி பெருமானுக்கு நபித்துவம் அருளப்படுவதற்கு முன்பே நபி இப்ராஹிமின் ஏக இறைக்கொள்கையின் வழியில் எந்த சிலை வணக்கத்திலும் ஈடு படாதவர்
மதுவைத் தொட்டது கூடக் கிடையாது
பெண் குழந்தைகளை உயிரோடு புதைக்கும் கொடிய வழக்கத்தை பல முறை தடுத்து , தன் சொந்தப்பணத்தில் அந்தக் குழந்தைகளை விலைக்கு வாங்கி அவர்களது உயிரைக் காப்பாற்றியவர்
ஹலால் அல்லாத உணவுகளை முற்றிலுமாக ஒதுக்கியவர்
இப்படி வாழ்ந்த அவர் இஸ்லாத்தில் இணையாவிட்டாலும் அவரை முஸ்லிமாகக் கருதி அவருடைய மறுமைகாக மகன் சயீதை பிரார்த்ணனை செய்ய நபி அவர்கள் அனுமதித்தார்கள்
இப்படிப்பட்ட உத்தமத் தந்தையின் மகன் சயீத் பற்றி
இவர் உமர் அவர்களுக்கு இரு வகயில் மைத்துனர் , இவரது தங்கை ஆத்திக்கா உமரின் துணைவி .
உமரின் தங்கை பாத்திமா சயீத்தின் துணைவி
இந்த பாத்கிமா சயீத் இணைதான் உமர் அவர்கள் இஸ்லாத்தில் இணையக் காரணமாக இருந்தவர்கள்
உமர் மட்டுமல்ல இன்னும் பலபேர் சயீத்தினால் இஸ்லாத்தில் இணைந்திருக்கிறார்கள்
மிகவும் கூச்சத்தன்மை உள்ளவர் . தன் பெயர் சொல்லப்பட்டாலே அந்த இடத்தை விட்டு வெளியேறிவிடுவார் . அதாலேயே அவருடைய பல நற்செயல்கள் ,சாதனைகள் வெளியே தெரியாமல் போய்விட்டன
இவ்வளவு கூச்சத்தன்மை உள்ள இவர் தர்மூக் போரில் பன்மடங்கு பெரிதாய் இருந்த எதிரிப்படையைக்கண்டு இஸ்லாமிய வீர்கள் மலைத்துப்போய் தயங்கி நிற்கையில் முன் நின்று வீரஉரையாற்றி வேகமாக எதி ரிப்படையை நோக்கிப் பாய்ந்து போர் புரிந்தார் அதனால் “தர்மூக்கின் சிங்கம்” என்ற பட்டமும் பெற்றார்
எல்லாப்போர்களிலும் கலந்து கொண்ட வீரர் . அதனால்தான் தப்ரூக் போரில் இவர் கலந்து கொள்ள வாய்ப்புக் கிடைகவிட்டலும் தப்ரூக் சஹாபிகள் பட்டியலில் இவர் பெயரும் இடம் பெற்றிருக்கிரது
தன் பிர்ரர்தனை அங்கீகரிக்கப்படும் வரம் பெற்றவர் (முஸ்தஜாபுத் )
இப்படிப்பட்ட உத்தமரை வம்படியாக நீதி மன்றத்துக்கு இழுத்து தன் வீட்டையும் இடத்தையும் கைபற்றிக் கொண்டார் என ஒரு பெண் பொய் வழக்குத் தொடுத்தார்
இவர் எவ்வளவோ மறுத்துச் சொல்லியும் அந்தப்பெண் தன் பொய்யில் உறுதியாக இருந்தார்
அந்தப்பெண்ணுக்கே அவர் கேட்டபடி விட்டுக் கொடுத்து விட்டு “ அந்தப்பெண் சொல்வது பொய் என்றல் ஆவரது கண் பார்வையைபறித்து விடு . வீண் பழி சுமத்தி கைப்பற்றிய இடத்தில் அவர் மரணிக்கட்டும் “ என்று இறைவனிடம் வேண்ட , காலப்போக்கில் இவை இரண்டுமே நடந்தன
74 ஆவது வயதில் மரணித்து உமர் அவர்களின் மகனால் அடக்கம் செய்யப்பட்டார்
அபூ உபைதா
முதல் அணியில் உள்ள பத்து சஹாபாக்கள் வரிசையில் பத்தாவதாக அபூ உபைதா பற்றிப் பார்க்கிறோம்
Last but not least எனபது போல் எந்த வகையிலும் யாருக்கும் பின் தங்கியவர் இல்லை அபூ உபைதா
இன்னும் சொல்லப்போனால் நபி பெருமானுக்கும் , ஜிப்ரில் அலைக்கு மட்டும் கிடைத்த “அமீன் (நம்பிகஈக்கு உரியவர் “ என்ற பட்டம் நபியால் சூட்டப்பட்டவர்
இறைவனின் திருஅருளை பல நேரங்களில் கண்கூடாகப் பார்த்தவர்
ஒரு தடவை 300 பேர் கொண்ட ஒரு படைக்குத் தலைமை தாங்கி நடத்திச் செல்கிறார் . கொண்டு வந்த சிறிய அளவிலான உணவு தீர்ந்து விட்டது
உணவு உண்டால்தான் தீரமாகப்போர் செய்ய முடியும்
செய்வதறியாது நிற்கிறார்
அப்போது இறைவன் ஒரு மீனை , மிகப்பெரிய மீனை ,இது வரை உலகில் யாரும் கண்டிராத அளவுக்கு பெரிய மீனை உணவாக அனுப்பி வைக்கிறான்
கடற்கரையில் இறந்து கிடந்தது அந்த மீன்.
இறந்த மீனை உணப்து ஆகுமா என்ற தெளிவு பிறக்காத அந்தக் காலத்தில் அவ்வளவு பசியிலும் வீரர்கள் மத்தியில் ஒரு தயக்கம்
அப்போது அபூ உபைதா தெளிவு படுத்துகிறார் “ வேறு உணவ எதுவும் கிடைக்காத நிலையில் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள எந்த உணவையும் உண்ண இறைவன் அனுமதி கொடுத்திருக்கிறான் . இப்போது நாம் அந்த நிலையில்தான் இருக்கிறோம் . எனவே தயங்காமல் உண்ணுங்கள் “ என்று சொல்ல எல்லோரும் சாப்பிட்டார்கள்
ஒரு நாள் அல்ல இரண்டு நாள் அல்ல ,ஒரு மாத காலத்திற்கு 300 வீரர்களுக்கும் போதுமான உணவாக அமைந்த அந்த மீனின் பெயர் அம்பர்
போர் முடிந்த திரும்பிய அபூ , நபி அவர்களை சந்தித்து நடந்ததை எடுத்துச் சொல்கிறார் . அதைகேட்ட நபி அவர்கள் இது உறுதியாக ஒரு இறை அற்புதம்தான் என்று சொன்னதோடு அந்த மீனில் மிச்சம் இருந்ததை தாமும் வாங்கி சப்பிடுகிறார்கள் . இதனால் இது ஆகுமான உணவா என்ற ஐயம் முழுமையாக விலகி , தெளிவு பிறந்தது
நபி அவர்கள் காலத்துக்குப்பின் அடுத்த கலிபாவைத் தேர்வு செய்வதில் எந்த விதக் குழப்பமும் கருத்து வேறுபடும் ஏற்படாமல் அபூபக்கர் நியமிக்கபப்ட்டதில் பெரும்பங்கு வகித்தவர் அபூ
அபூபக்கர் ஆட்சிக் காலத்தில் சிரியாவுக்கு அனுப்பப்பட்ட படையில் முன்னணி வீரராய்ச் சென்றார் அபூ .
காலிக் என்பவர் படைத் தளபதி .
போர் தொடங்கிய நிலையில் அபூ விடம் உமர் அனுப்பிய ஒரு கடிதம் கொடுக்கப்படுகிறது
“அபூபக்கர் அறைவுக்குபின் நான் (உமர்) களிபாவகப் பொறுப்பு ஏற்றிருக்கிறேன் .
காலிக்கை நீக்கி விட்டு படைத் தளபதியாக உங்களை (அபூவை ) நியமிக்கிறேன் “ என்று அதில் இருக்கிறது
போர் நல்ல முறையில் வெற்றிபாதையில் போய்க்கொண்டிருக்கிறது . இப்போது இந்த செய்தியைச் சொல்லி தளபதியை மாற்றினால் அது ஒரு பின்னடவை ஏற்படுத்தலாம் என்று எண்ணிய அபூ கடித்த்தை மறைத்து வைத்து விட்டு, போர் முடிந்த பின்ப தளபதி காலித்திடம் கடிதத்தைக் கண்பித்தார்
அதன் பின்பு அபூ படைத் தளபதியாய் பொறுப்பேற்று , ஜெருசலம் நகரைக் கைப்பற்றி பைத்துல் முகத்தஸ்ஸை மீட்டதில் பெரும்பங்கு வகித்தார்
சிரியாவின் ஆளுனராய்ப்பதவி ஏற்று அபூ ஆட்சி புரிந்தபோது இறைவனின் சோதனையாய் அங்கு காலரா என்னும் கொடிய கொள்ளை நோய் பரவி மக்கள் கொத்துக்கொத்தாக பல்லாயிரக்கணக்கில் மடிந்தார்கள்
கலீபா உமர் சிரியாவில் இருந்து உடனே புறப்படுமாறு அபூ வுக்கு செய்தி அனுப்ப , அவரோ “ நான் ஒரு சாதரணக் குடிமகன் அல்ல . ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் நான் அப்படியெல்லாம் மக்களை விட்டு வர முடியாது :” என்று சொல்லிவிட்டார்
உமர் நினத்துக் கவலை பட்டது போலவே கொள்ளை நோயின் தாக்குதலால் உயிரிழந்தார் அபூ உபைதா
அழுதார் அழுதார இப்படி யாரும் பார்த்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு அழுதார் உமர் .
அப்போது உமர் சொன்னது “ நான் இதுவரை எதற்கும் ஆசைப்பட்டது கிடையாது . ஒரு வேளை உலகில் எதற்காவது ஆசைப்பட் அனுமதித்தால்
“எனக்கு ஒரு வீடு வேண்டும் , அந்த வீடு முழுக்க அபூ உபைதா போன்றவர்களால் நிறப்பப் பட்டிருக்க வேண்டும் “ என்று
அமீன் என்ற சிறப்புப்பெயர் பெற்ற அபூ உபைதாவுக்கு , நேர்மை, எளிமை , நல்லாட்சியின் இருப்பிடமான உமர் சொன்ன இதைவிட வேறு புகழுரை இருக்க முடியாது
இறைவன் அவர்களைப் பொருதிக்கொள்வானாக
ஒரு வழியாக சஹாபாக்களின் முதல் அணியில் உள்ள , இம்மையிலே மறுமையில் சுவனம் என உறுதி கூறப்பட்ட பத்து பேர் பற்றி முழுமையாக
இல்லாவிட்டாலும் சிறு குரிப்பும்போல், ஒரு அறிமுகம் , முன்னுரைபோல எழுதி இறைவன் அருளால் நிறைவு செய்தி விட்டேன்
இந்த பத்து சஹாபிகளுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு
-அனைவரும் மக்கவாசிகள்
- மிகப்பெரும் செல்வந்தர்கல். இஸ்லாத்துக்காக சொத்து சுகம், வீடு வாசல் அனைத்தையும் தியாகம் செய்யத் தயங்காதவர்கள்
- வீரம், தீரம் மிக்க போர் வீரர்கள்
-
மற்ற நபித் தோழர்கள் பற்றி தொடர்ந்து எழுத இறைவன் அருள் புரிய வேண்டும்
நேற்றைய வினா
நேற்றைய பதிவின் நிறைவுப்புகுதியில் குர்பான் கொடுக்கும் எண்ணம் உள்ளவர்கள் குர்பான் கொடுக்கும் வரை
முடி, நகம் களைவதைத் தவிர்க்க வேண்டும் என்று எழுதியிருந்தேன்
இந்த நபி மொழியின் பின்னணி , காரணம் என்ன ?
விடை :
இது நபி மொழி, எனவே பின்பற்றிதான் ஆக வேண்டும் என்ற விடையை சகோ
ஹசன் அலியும் சிராஜுதீனும் அனுப்பியிருந்தார்கள்
அவர்களுக்கு நன்றி,
கடந்த வெள்ளிக் கிழமை ஜும்மா தொழுகையில் எங்கள் பள்ளி முத்தவல்லி சகோ அக்பர் அலி அவர்கள் இது பற்றி சொன்ன செய்தியை உங்களுடன் பகிர்த்து கொள்கிறேன்
“ நபி இப்ராஹீம் அவர்கள் கனவில் இறைவைனிடம் இருந்து ஒரு செய்தி வருகிறது
“ உங்களு ககு மிகவும் பிரியமானதை எனக்கா தியாகம் செய்யுங்கள் குர்பான் கொடுங்கள் “ என்பது அந்தச் செய்தி
அடுத்த நாள் இப்ராஹீம் நபி அவர்கள் , இறைவனுக்காக 100 ஆடுகளை குர்பானி கொடுக்கிறார்கள
அன்று இரவு மீண்டும் இதே போல் செய்தி இறைவனிடமிருந்து
அடுத்த நாள் 100 மாடுகளை குர்பானி கொடுக்கிறார்கள் நபி அவர்கள்
மீண்டும் அந்தச் செய்தி அன்றிரவு வருகிறது
அடுத்த நாள் 100 ஒட்டகங்களை குர்பானி கொடுக்கிர்ரரகுள்
ஆனால் மீண்டும் அன்று இரவு அதே செய்தி
நபி இப்ராகிம் சிந்திக்கிறார்கள் அதன் விளைவாக
“ நாம் முதுமைப் பருவத்தில் இறைவன் அருளால் பெற்ற அருமை மகன்தானே நமக்குப் பிரியமானவன் ,
அதைத்தான் இறைவன் கேட்கிறான் என்ற தெளிவு பெறுகிறார்கள்
நபி அப்போது இருப்பது பாலஸ்தீன நாட்டில்
மகன் இருப்பதோ மக்கமா நகரில்
இறைவன் கட்டளையை நிறைவேற்றுவதில் ஏற்கனவே மூன்று நாட்கள் ஆன தாமதத்தால் மனம் பத்ரி மக்காவை நோக்கி விரைந்து
பயணம் செய்கிறார்கள்
கசங்கிய , புழுதி படிந்த ஆடைளை மாற்ற , நகம் வெட்ட , தாடி, தளை முடியை ஒழுங்கு படுத்த நினைவும் இல்லை , நேரமும் இல்லை
இதுதான் நபி மொழிக்குப் பின்னணி
சகோ அக்பர் அலிக்கு நன்றி
இன்றைய வினா
“பிறகு அவர்கள் அழுக்குகளை நீக்க வேண்டும் “
இது குரானில் எஙகு வரும், எதைப்பற்றிச் சொல்லும் வசனம் ?
இறைவன் நாடினால் நாளை நபித்தோழர்களை சிந்திப்போம்
03 துல்ஹஜ் (12)1443
03 07 2022 ஞாயிறு
சர்புதீன் பீ
No comments:
Post a Comment