திருமறை குரான்
“இறை வழியில் என்ன (எவ்வளவு) செலவு செய்ய வேண்டும்”
என்றும் அவர்கள் உங்களிடம் கேட்கிறார்கள்”
என்று நபி ஸல் அவர்களிடம் சொல்லும் இறைவன் அதற்கான விடையையும் நபிக்கு அறிவிக்கிறான்
அந்த விடை என்ன ?
திருமறையின் எந்தப்பகுதியில் இது வருகிறது ?
விடை
சூராஹ்(2) அல்பக்றா வசனம் 219
“----------------(உங்கள் தேவைகள் ) போக மிஞ்சியிருப்பது அனைத்தையும் இறை வழியில் செலவு செய்யுங்கள் ---------“(2:219)
இதுதான் இறைவன் நபி அல் அவர்களுக்கு அறிவித்துக் கொடுத்த மறுமொழி
சரியான விடை எழுதி வாழ்த்து, பாராட்டுப்பெறும் ஒரே சகோ
ஹசன் அலி
2:215 என்று விடை அனுப்பிய சகோ
சர்மதாவுக்க்கும் பீர் ராகவுக்கும் நன்றி
இதில் யாருக்குக் கொடுக்கவேண்டும் என்பது வருகிறது எவ்வளவு என்பது வரவில்லை
விளக்கம்
சக்காத், சதக்கா ,, தருமம் என பல சொற்களால் குரிப்ப்பிடப்படும் பொருள் உதவியி
இஸ்லாத்தின் பொருளாதார சமூக சீர்திருத்தத்தில் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது
குரானில் 30க்கு மேற்பட்ட இடங்களில் சக்காத் என்ற சொல் வருகிறது
இறைவணகத்தோடு சேர்த்து “ தொழுங்கள், சக்காத் கொடுங்கள் “ என பல இடங்களில் வருகிறது
சில விதிகளுக்கு உட்பட்டு சேமிப்பில் 2,5% கட்டாய தருமம் என்று குரான் வலியுறுத்துகிறது .
இது சக்காத்.துக்கு மட்டும்தான்
இதை ஒழுங்காக பகிர்ந்து அளித்தாலே சமுதாயத்தில் உள்ள பொருள் வறுமை, கல்வி வறுமை, நல்வாழ்வு வறுமை எல்லாம் பெரும்பாலும் சரியாகி விடும்
இந்த வசனம் 2:219 ல் இறைவன் மிகத் தெளிவாகச் சொல்கிறான் : :
இவ்வுலகின் வளங்கள், செல்வங்கள் எல்லாம் இறைவனுக்கே சொந்தம் .
மனிதன் தன் சுக வாழ்வுக்கு, சட்டப்படி தனக்கு உரிமை ஆனது அது எவ்வளவாக இருந்தாலும் அதை அவன் எடுத்துக்கொள்ளலாம்
அதற்க்கு மேல் மனிதனிடம் மிச்சம் மீதி இருப்பது எலாம் மற்றவர்களுக்குக் கொடுப்பதற்கே
இப்படிதான் நபி பெருமான் வாழ்ந்து காட்டினார்கள்
பேரரசின் மன்னராய் இருந்தாலும் அவர்கள் வீட்டில் எதுவுமே வைக்காமல் வரும் செல்வம் அனைத்தையும் அன்றே ஆம் அன்று இரவுக்குள் கொடுத்து விடுவார்களாம்
உணவுப்பொருள் கூட அதிகமாக வைத்துக்கொள்வது இல்லை
நபி போல் வாழ நம்மால் முடியாது
நல்ல மனிதனாக இறைவழியில் நடக்க இறைவன் அருள் புரிவானாக
இறைவன் நாடினால் நாளை மீண்டும் சிந்திப்போம்
29துல்ஹஜ் (12) 1443
29072022 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment