Wednesday, 6 July 2022

நயத்தக்க நபித் தோழர்கள் – பகுதி 8 ஸுஹைப் ரூமி

 நயத்தக்க நபித் தோழர்கள் –

பகுதி 8
சென்ற பகுதியில்
இப்ன் உம் மக்தும் எனும் சஹாபியின் சிறப்புகள் பற்றிப் பார்த்தோம்
இன்று இன்னொரு சஹாபா பற்றிப் பார்ப்போம்
இவர் பெயர் ஸுஹைப் ரூமி
தெரிந்த பெயர் , தெரியாத செய்திகள்
“இன்னும் இறைவனின் திருப் பொருத்தத்தை நாடி தன்னையே அர்ப்பணிப்பு செய்பவர்களும் இருக்கிறார்கள்
இத்தகைய நல்லடியார்கள் மேல் இறைவான் அளவற்ற அன்புடையோனாக இருக்கிறான் “ (2:207)
அல்பக்ரா சூராவில் வரும் இந்த வசனத்துக்கு எடுத்துக்காட்டாக , விளக்கமாக வாழ்ந்தவர் இந்த சஹாபி
அப்படி என்ன செய்தார் ?
மக்கமா நகரில் பெரிய அளவில் வணிகம் செய்து பெரும்பொருள் ஈட்டியவர் .
நபி பெருமான் ஹிஜ்ரத் பயனாமாக மதீனா சென்ற சில நாட்களில் இவரும் அங்கு செல்ல ஆயத்தமானார்
.கணக்கு வழக்குப் பார்த்து வாங்க வேண்டியதை வாஙகி , கொடுக்க வேண்டியதைக் கொடுத்தது போக மிஞ்சி இருந்தது பெரும் செல்வம் – பணமாக, கால்னடைகளாக , சொத்துக்களாக
அவற்றையெல்லாம் நம்பிக்கைக்கு உரியவர்களிடம் ஒப்படைத்.து,விட்டு, பணத்தின் ஒரு பகுதியை மறைத்து வைத்து விட்டு ஒரு சிறிய பையுடன் தன்னந் தனியாக மதீனா நோக்கிப் பயணம்
இதை அறிந்த மக்கவாசிகள் கூட்டம் ஓன்று அவரை வழி மறித்து
“எங்கிருந்தோ வெறும் கையாக வந்து எங்கள் ஊரில் பெரும் செல்வம் ஈட்டி. பிறகு நபியோடு சேர மதீனா போவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் “ என்று வம்பு செய்தனர்
நொடியில் சிந்தித்து ஒரு முடிவு செய்த சஹாபி விரைந்து அருகில்
உள்ள ஒரு மேட்டில் ஏறி நின்று தன் பையில் இருந்த அம்புகளை
வரிசையாக அடுக்கி விட்டு அந்த வம்புகூட்டத்தை நோக்கி
“ என் வில் வித்தை திறமை பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரியும் . என் ஒவ்வொரு அம்பும் குறி தவறாமல் உங்கள் ஒவ்வொருவறைக் கொன்று விடும் .
அதன் பின் இருப்பவர்கள் என் வாளுக்கு இரை ஆவார்கள் .
என்னைத் தடுக்காமல் போக விட்டால் என் திரண்ட சொத்துக்களை உங்களுக்குக் கொடுத்து விடுவேன் .” என்று சொன்னார்
சொத்துக்கு ஆசைப்பட்டு வந்தவர்கள் திரும்பி ஓடி விட, இவர் தம் மதீனப் பயணத்தைத் தொடர்ந்தார்
அங்கு போனவுடன் நபி பெருமானை சந்திக்க விரைந்தார்
அவர் சொல்வதற்கு முன்பே நடந்ததை வானவர் தலைவன் ஜிப்ரில் அலை மூலம் அறிந்த நபி அவர்கள்
“உங்கள் வணிகம் உங்களுக்கு பெரும் பொருளை, லாபத்தை ஈட்டிக் கொடுத்து விட்டது “ என்று சொல்லி, வாழ்த்தி மேலே சொன்ன இறை வசனத்தை ஓதிக் காண்பித்தார்கள்
இந்த வசனம் இறங்கியதெ ஸுஹைப்புக்காகத்தான்என்று சொல்லப்படுகிறது
இது ஒன்ற போதும் இவர் சிறப்புப் பற்றிச் சொல்ல
பசித்தவர்களுக்கு உணவு அளிக்க தாராளாமாக செலவு செய்வார்
பத்ரு ,உஹத் என எல்லாப்போர்களிலும் நபிக்குத் துணையாக அருகிலேயே இருந்தார்
இவரின் தாய் , தந்தை இருவரும் மக்கா வாசிகள்தான்
தந்தை ஆளுநராக இருந்த பகுதியை ரோமானியர்கள் கைப்படபற்றி சிறுவனாக இருந்த ஸுஹைபை சிறை பிடித்து அடிமையாக பல வீடுகளில் பணிக்கு அமர்த்தினர்
அதனால் ரோமானிய மொழியைக் கற்றுகொண்டார் , நடை உடை தோற்றத்தில் ரோமானியரைப் போல் இருந்தார் , கலீபா உமர் உட்பட பலரும் இவர் ரோமானியர் என்றே நினைத்தனர்
அத்னால்தான் இவரை வழி மறித்த வம்பர்கள் “எங்கிருந்தோ வந்த நீ “ என்று சொன்னார்கள்
கலீபா உமர் எதிரியால் தாக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருக்கும்போது இமாமாகவும் ,அடுத்த கலிபா தேர்வு செய்யப்படும் வரை இடைக்கால கலிபாவாகவும் பணிபுரிந்த சிறப்புப் பெற்றவர்
நபி பெருமான் மறைவுக்குப்பின் ஏற்பட்ட குழப்பங்கள் எதிலும் தலைஇடாமல் ஒதுங்கி நின்றார்
70 ஆவது வயதில் அவர் விரும்பியபடி மதீனாவில் உயிர் நீத்தார்
இறைவன் அவரைப் பொருந்திக்கொள்வானாக
நேற்றைய வினா
“--------வீடுகளுக்குள் அவற்றின் வாயில்கள் வழியாகவே வாருங்கள்--------------
திருமறையில் எந்த வசனத்தின் பகுதி இது?
விடை
அல் பக்.ரா சூராவில் வரும் வசனம் இது (2:189)
சரியான விடை எழுதி வாழ்த்து, பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஹசன் அலி முதல் சரியான விடை
ஷிரீன் பாருக்
ஷர்மதா
பண்டைய அரபு நாட்டில் நிலவிய ஒரு மூடப் பழக்தைக் குறிப்பிட்டு அதை ஒழித்துக் கட்டியது இந்த வசனம்
அந்தக் கால அராபியர்கள் இஹ்ராம் உடை அணிந்து விட்டால் வீட்டு வாசலின் வழியே வராமல் சுவர் ஏறிக்குதித்தோ , சன்னல் வழியாகவோ வீட்டுக்கு வருவார்கள்
புனித ஹஜ் பயணத்தில் இருந்து திரும்பும் போதும் இதே போல்தான் செய்வார்கள்
மிகுந்த புண்ணியம் நிறைந்த நேர்வழி இதுவே என்று நம்பினார்கள்
வசனம் :
“----------------ஹஜ்ஜை நிறைவு செய்த பிறகு உங்கள் வீடுகளுக்கு கொல்லைப் புறமாக வருவதில் புண்ணியம் எதுவும் இல்லை
இறைவனுக்கு அஞ்சி நற்செயல் புரிவோரே புண்ணியம் செய்தவர்கள் எனவே வீடுகளுக்குள் முறையான வாசல் வழியாகவே செல்லுங்கள்
நீங்கள் வெற்றி அடையும் பொருட்டு இறைவனை அஞ்சி நடந்து கொள்ளுகள் “(2:189)
இன்றைய வினா :
“------மேலும் இறைவனும் இறைவனின் தூதரும் ஒன்றைப் பற்றிக் கட்டளை இட்டு விட்டால் , அது பற்றி மாறுபட்ட கருத்துக் கொள்வதற்கு இறை நம்பிகை உள்ள ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமை இலலை”
இது திரு மறையின் எந்தப்பகுதியில் வருகிறது ?
(ஒரு சஹாபியின் வாழ்வின் பின்னணியாக இந்த வசனம் இருக்கிறது .அவர் பெயர் தெரிந்தால் அதையும் எழுதி அனுப்புங்கள்)
இறைவன் நாடினால் விடை விளக்கத்துடன் நாளை சஹாபாக்களை சிந்திப்போம்
07 துல்ஹஜ் (12)1443
07 07 2022 வியாழன்
சர்புதீன் பீ
May be an image of 3 people and text that says "SAHABA"
Like
Comment
Share

No comments:

Post a Comment