தமிழ் (மொழி) அறிவோம்
மூன்றெழுத்துச் சொல்
சங்க இலக்கியங்களில்
இசைக்கருவி
ஆந்தையின் குரலோசை
செடிகளில் பரவும் நோய்
என்ற பொருளிலும்
வட்டார வழக்கில்
கஞ்சி
என்ற பொருளிலும் வருகிறது
முதல் எழுத்து
ம
என்பதையும் சொல்லிவிட்டால்
மிக எளிதாக விடை அறியலாம்
அந்தச் சொல் என்ன?
விடை
மகுளி
சரியான விடை அனுப்பி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஹசன் அலி. முதல் சரியான விடை
ஷர்மதா
ஹிதயத்
செல்வகுமார்
கணேச சுப்பிரமணியம்
விடை விளக்கம் அதோடு பல புதிய செய்திகளையும் அனுப்பிய இவருக்கு நன்றி
கணேச சுப்பிரமணியம் அனுப்பிய விளக்கம்
உருள்துடி மகுளியின் பொருள்தெரிந்து இசைக்கும்
கடுங்குரல் குடிஞை” –(அகம் 19)
பொருள்: உருளும் இழுகு பறையின் ஓசையினைப் போல பொருள் தெரிய ஒலிக்கும் கடுமையான குரலை உடைய ஆந்தைகள் உள்ள பெரிய மலை.
வட்டார வழக்கில் கஞ்சி என்று பொருள் வருவதாக இணையத்தில் சொல்லப்படுகிறது
எந்த வட்டாரம் என்பது எனக்குத் தெரியவில்லை
யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்
முயற்சித்த
சகோ
ஜோதி
அ ரா விஸ்வநாதனுக்கு நன்றி
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
20072022 புதன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment