திருமறை குரான் 2: 213
“------------தெளிவான சான்றுகள் உள்ள திருமறை வந்தபின் அதனைப் பெற்றுக்கொண்டவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட பொறாமையின் காரணமாகவே (திருமறைக்கு ) மாறு செய்ய முற்பட்டனர் “
திருமறையின் எந்த வசனத்தில் வரும் வரி இது ?
விடை
சூராஹ் அல்பக்ரா வசனம் 2: 213
“ஆரம்பத்தில் மனிதர்கள் அனைவரும் ஒரே இனத்தவராக இருந்தனர்
அவர்கள் நேரான வழியில் செல்வதற்காக நன்மை செய்தவர்களுக்கு நற்செய்தி கூறும்படியும்
தீமை செய்தவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும்படியும் இறைவன் நபி மார்களை அனுப்பி வைத்தான்
மேலும் அவர்களுக்குள் ஏற்படும் கருத்து வேற்றுமைகளை தீர்த்து வைப்பதற்காக சத்திய வேதத்தையும் அருளினான்
இவ்வாறு தெளிவான சான்றுகள் உள்ள வேதம் வந்தபிறகு அதனைப் பெற்றுக்கொண்ட அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட பொறாமையின் காரணமாக அன்த சத்திய வேதத்துக்கு மாறு செய்ய முற்பட்டனர்
ஆயினும் அவர்கள் புறக்கணித்து விட்ட சத்திய வழியில் செல்ல நம்பிக்கை உடையோருக்கு இறைவன் நேர்வழி காட்டினான்
இன்னும் இவ்வாறே தான் விரும்பியவர்கலளை இறைவன் நேர்வழியில் செலுத்கிறான் (2:213)
இதற்கு முழுமையாகவோ ஓரளவோ ஒத்த கருத்துகள் பல வசனங்களில் வருகின்றன (எ—டு 3:19 , 2:109, )
சரியான விடை எழுதி வாழ்த்து, பாராட்டு பெறுவோர் :
சகோ
ஹசன் அலி –முதல் சரியான விடை
பீர் ராஜா
ஷர்மதா
விளக்கம்
மனித குல வளர்ச்சி பற்றிய ஒரு மிகப்பெரும் உண்மையை தெளிவு படுத்துகிறது இந்த வசனம்
“ஆதி மனிதன் அறியாமை இருளில் மூழ்கி ஓரிறைக் கொள்கையை தவிர்த்து வந்தான் .
பின்னர் காலப்போக்கில் ஏற்பட்ட முன்னேற்றம் ,தெளிவு காரணமாக ஓரிறைக் கொள்கைக்கு மாறினான் “ என்ற ஒரு கருத்து மத ஆராய்ச்சியாளர்கள் பலரும் முன் வைப்பது
இதை திருமறை ஒப்புக்கொள்ளவில்லை
மாறாக உலகின் முதல் மனிதனே ஏக இறைவன் பற்றிய தெளிவான சிந்தனையுடன்தான் படைக்கப்பட்டான் என அறிவிக்கிறது குரான்
ஒரே குலமாக ,ஏக இறைவழிபாட்டில் இருந்த மனிதகுலம் சில தவறுகள் செய்யும்போது, வழி தவறிப்போகும்போது --
குறிப்பாக ஒரு சிலர் மற்றவர்களை அடக்கி ஆண்டு, அவர்கள் உரிமைகளைப் பறித்து தங்கள் தகுதிக்கு மீறிய வசதிகளை அனுபவிக்கத் தொடங்கியபோது
அவர்களை எச்சரித்து நேர்வழிப் படுத்த இறைவன் தன தூதர்களான நபி மார்களை உலகுக்கு அனுப்பி வைத்தான்
வேறு வேறு மதங்களை உருவாக்க நபி மார்கள் அனுப்பப்படவில்லை .
தெளிவான வழிகாட்டும் வேதங்கள் அருளப்பட்டும் மத குருமார்கள் ,மேல்தட்டு மக்கள் போன்றவர்கள் வேத்த்தின் உண்மைகளை மறைத்து தங்களுக்கு சாதகமாக மதக் கொள்கைகளை வகுத்துக் கொண்டார்கள்
இதில் விளைந்த போட்டி ,பொறாமையின் விளைவே வேறு வேறு மதங்கள்
“மனிதன் மதங்களைப் படைசசு “ என்ற யேசுதாஸ் பாடல் நினைவில் வருகிறது
இதே போல்
மனிதன் குரங்கில் இருந்து பிறந்தான் , காட்டு மிராண்டியாக இருந்தான் , பேசத் தெரியாமல் ஒலிகள் எழுப்பினான் என பல கருத்துகளை இஸ்லாம் மறுக்கிறது
மனிதனை முழுமயான மனிதனாகத்தான் இறைவன் படைத்தான்
“அளவற்ற அருளாளன் குரானைக் கற்றுக் கொடுத்தான்
மனிதனைப் படைத்தான்
அவனுக்குப் பேசக் கற்றுக் கொடுத்தான் “ சூராஹ் அற்ரஹ்மான் (55: 1 -4)
முதல் மனிதனாகிய ஆதம் அவர்கள் ஒரு நபியாகப் போற்றப் படுகிறார்
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
22 துல்ஹஜ் (12) 1443
22 07 2022 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment