நயத்தக்க நபித் தோழர்கள் –
பகுதி 9
சென்ற பகுதியில்
ஸுஹைப் ரூமி சஹாபி பற்றிப்பாரத்தோம் தெரிந்த பெயர் , தெரியாத செய்திகள்
அதற்கு முன் பார்த்த
இப்ன் உம் மக்தும் எனும் சஹாபியின் பெயர் பரவலாகத் தெரியாவிட்டாலும் அவர் பற்றிய நிகழ்வு ,இறங்கிய இறைவசனம் பலருக்கும் தெரிந்த செய்திகள்
இன்று இன்னொரு சஹாபா பற்றிப் பார்ப்போம்
தெரியாத பெயர் , தெரியாத செய்திகள்
அவர்தான்
ஜூலை பீப்
குட்டையான உருவம் . தட்டையான பாதங்கள் பருமனான , உடல் பொலிவில்லாத முகம்
குலம் கோத்திரம் தெரியாது .இவ்வளவு ஏன் அரபியர்கள் பெயருக்குப்பின்னால் பெருமைடன் சேர்த்துக்கொள்ளும் தந்தை பெயர் கூடத் தெரியாது பணம் காசும் கிடையாது
ஆனால் இவருக்கு இறைவன் கொடுத்த்அருட்கொடை, உயர்வுகள் ஏராளம்
அங்கீகாரமே இல்லாமல் வாழ்ந்து வந்தவர மதீனா வந்து இஸ்லாத்தில் இணைகிறார் . குலம், கோத்திரம் நிறம் மொழி என்று எந்த வேறுபாடும் காட்டாத இஸ்லாத்தில் இணைந்து சஹாபி, (நபித்தோழர் ) என்ற உயரிய பதவியைப் பெறுகிறார் .எந்நேரமும் நபிகளின் சபையிலேயே இருக்கிறார்
நபிகள் இவருக்குத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்ய, வீண் முயற்சி, எனக்கு யார் பெண்கொடுக்க முன்வருவார்கள் என்று அவரே சொல்கிறார்
இருந்தாலும் அவருக்கு கிடைத்த வாழ்க்கைத் துணை அந்த ஊரில் மிக அழகிய பெண்களில் ஒருவர் .
எப்படி ?
நபி பெருமான் ஒரு அன்சாரி (மதீனாவில் வாழ்ந்த நபித் தோழர்கள் அன்சாரி எனப்படுவர் ) வீட்டுக்குப் போகிறார்
எதிர்பாராமல் வந்த நபியைப் பார்த்து மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப் போகிறார் அந்த அன்சாரி
“உங்கள் மகளைப் பெண் கேட்டு வந்திருக்கிறேன் “ என்று நபி சொல்ல மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது அவருக்கு
“தவறாக எண்ண வேண்டாம், பெண் எனக்கல்ல “ என்று நபி சொன்னவுடன் அன்சாரியின் முகம் வாடிவிடுகிறது
ஜூலை பீப்பு.க்கு பெண் கேட்டு நபிகள் வந்திருக்கிறார் என்று அறிந்ததும் முகம் சுருங்கி கசங்கிய மலர்போல் ஆகி விடுகிறது
இருந்தாலும் நபியின் சொல்லுக்கு உடனே மறுப்புத் தெரிவித்தல் ஆகாது என எண்ணி tதன் துணைவிஇடம் கலந்து பேசப்போவதாகச் சொல்லி போகிறார் அன்சாரி
அங்கும் இதே கதைதான் . முதலில் வந்த மகிழ்ச்சி பிறகு மாறி விடுகிறது .
ஜூலை பீபுக்கு பெண் தரும் பேச்சுக்கே இடம் இல்லை என்று உறுதியாக மறுக்கிறார் பெண்ணின் தாய்
இந்த உரையாடல் ஒலி மகள் காதில் விழுகிறது , அவர் தன் தந்தை தாயிடம் இது பற்றிக் கேட்க , அவர்கள் நடந்ததைச் சொல்ல அந்த பெண் கேட்கிறார்
“ நபி பெருமானின் சொல்லுக்கா இருவரும் மறுப்புத் தெரிவிக்கிறீர்கள் ?
நபி சொன்ன . ஜூலை பீபை – அவர் எப்படி இருந்தாலும் சரி – நபியின் சொல்லுக்காக நான் மணம் முடிக்க சம்மதிக்றேன் “
என்று சொன்ன்தோடு , திருமறை வசனம் ஒன்றை ஓதுகிறார
அதுதான் நேற்றைய பதிவில் வினாவாக வந்த வசனம்
“------மேலும் இறைவனும் இறைவனின் தூதரும் ஒன்றைப் பற்றிக் கட்டளை இட்டு விட்டால் , அது பற்றி மாறுபட்ட கருத்துக் கொள்வதற்கு இறை நம்பிகை உள்ள ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமை இலலை” (33:36) சுராஹ் அல் அஹ்சாப்)
நபிகளின் வளர்ப்பு மகன் ஜைது மணம் முடித்திருந்த பெண்ணை மணமுறிவுக்குப்பின் நபிகளார் மணம் முடிக்கத்தயங்கியபோது நபிக்கு வழி காட்டுதலாய் இறங்கிய வசனம் உலக மக்கள் அனைவருக்கும் ஒரு நெறியாக அமைந்தது
பெண்ணே சம்மதம் தெரிவித்து விட்டார் . பிறகென்ன தடை !
பல செல்வந்தர்களும் அழகான இளைஞர்களும் மணமுடிக்க போட்டி போட்ட அழகிய பெண் ஜூலைபீபை மனமுவந்து திருமணம் செய்து கொள்கிறார்
நபி பெருமான் இறைவனிடம் இறைஞ்சுகிறார்கள்
“இந்த மணமக்களுக்கு ஏராளமான அருட்கொடைகளை , நன்மைகளை வாரி வாரி வழங்குவாயாக
துன்பத்தையும் சிரமத்தையும் கொடுத்கு விடாதே “
இதை விட ஒரு சிறந்த பரிசு யாருக்குக் கிடைக்கும் “
மதீனா மக்கள் பார்த்து வியக்கும் அளவுக்கு , அழுக்காறு கொள்ளும் அளவுக்கு உவப்பான ,மனம் ஒருமித்த வாழ்க்கை வாழ்ந்தார்கள்
- ஆனால் சிறிது காலம்தான்
- போரில் வீர மரணம் எய்தி சஹீது என்ற பதவியையும் பெற்று விட்டார்
- அவர் உடலச் சுற்றி எதிரிப் படையைச் சேர்ந்த 7 பேரின் உடல்
ஜூலைபீபைத் தேடி அவர் உட்லைக்கண்ட நபி அவர்கள்
“இவர் என்னுடையவர் , நான் அவருடையவன் “ என்று மூன்று முறை சொன்னதோடு உடலைக் கையிலேயே சுமந்திருந்து தம் திருக்கரங்களால் அடக்கம் செய்தார்கள்
அந்தபெண்ணோ நபி அவர்களின் துவா பரக்கத்தால் மதீனாவின் மிகப்பெரும் செல்வச் சீமாட்டி ஆனார் ,நபி அவர்களின் ஆசி பெற்ற அந்தப்பெண்ணை மணம் முடிக்க செல்வந்தர்கள் வரிசையில் காத்து நின்றார்கள்
அந்தப்பெண்ணின் பெயர் கூட எங்கேயும் பதியப்படவில்லை
ஜூலை பீப் எனபதும் குட்டையான உருவத்தைக் குறிக்கும் சொல்தான் , அவர் பெயரும் தெரியாது
பெயர் தெரியாத ஒரு குள்ள மனிதருக்கு இறைவன் எவ்வளவு சிறப்புகளை அள்ளிக் கொடுத்திருக்கிறான்
இறைவன் அவரைப் பொருந்திக்கொள்வானாக
வினாவுக்கு சரியான விடை அனுப்பி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ.
சிராஜுதீன் – முதல் சரியான விடை , விளக்கத்துடன்
ஹசன் அலி
ஆர்வத்துடன் முயற்சித்த சகோ ஷர்மதாவுக்கு நன்றி
இன்றைய வினா :
“
“ஹலால் ,ஹராம் பற்றி நன்கு அறிந்தவர் இவரைப்போல் யாரும் இல்லை “
என நபி வாயால் போற்றப்பட்டு ஷரி அத்தின் சட்ட மேதை என அறியப்பட்டநபித்தோழர் யார் ?
இறைவன் நாடினால் விடை விளக்கத்துடன் நாளை சஹாபாக்களை சிந்திப்போம்
08 துல்ஹஜ் (12)1443
08 07 2022 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment