நயத்தக்க நபித் தோழர்கள் –
பகுதி 6
சென்ற பகுதியில் பத்ருப்போர் சஹாபிகள பற்றிப்பார்த்தோம்
சஹாபியாக்கள் எனும் பெண் சஹாபிகள் பற்றி ஒரு சிறிய பதிவு பார்த்தோம்
அன்னை ஆயிஷா மேல் சிலர் வீண்பழி சுமத்த , இறைவனே தன வசனத்தால் அந்தப் பழியை துடைத்து எறிந்து தெளிவு படுத்தியது பற்றி அண்மையில் நான் விரிவாக எழுதியிருந்தேன் .எனவே அது பற்றி இங்கு விவரிக்கவில்லை
அதேபோல் இன்னொரு சஹாபியா பற்றியும் சில காலமுன் விரிவாக எழுதியிருந்தேன் , அவர் அன்னை ஆயிஷா போல் பரவலாக அறியப்பட்டவர் அல்ல
எனவே அதை நினைவூட்டுமுகமாக சுருக்கமாக மீஎண்டும் சொல்கிறேன்
அவர் பெயர்
கவ்லா (தந்தை – தலாபா ; கணவன் அவுஸ் )
இப்போது நேற்றைய வினாவைப் பார்ப்போம்
ஒரு பெண்ணுக்காக , அவர் பிரச்சினைக்கு விடை சொல்லும்படி உடனே இறங்கிய இறை வசனம் எது ?
விடை
சுராஹ் அல் முஜாதிலா (58:2)
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறும் ஒரே சகோ
சிரஜூதீனுக்கு
வாழ்த்துகள் பாராட்டுகள்
விளக்கம்
அன்றைய அரபு மக்களிடையே லிகர் எனும் மண முறிவு செய்யும் வழக்கம் பரவலாக இருந்தது
தன் துணைவியைப் பிடிக்காத ஒருவன் “நீ பின் பகுதியில் என் தாய் போல இருக்கிறாய் “ என்று சொலி விட்டால்
அந்தப்பெண் அவனுக்கு தாய் ஆகி விடுகிறார் , எனவே எளிதாக மண முறிவு செய்து விடலாம்
இந்த லிகரினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் --
அவர்தான் மேலே சொல்லப்பட்ட கவ்லா
வந்து நபி பெருமானிடம் முறையிடுகிறார் .
நபியோ இதில் நான் ஒன்றும் செய்வதற்கில்லை என்பது போல் சொல்ல அடுத்த நொடியே இறைவசனம் இறங்குகிறது
“-----------உங்கள் இருவர் (நபி பெருமான், கவ்லா) உரையாடலை, , வாதத்தை இறைவன் செவியுற்றான் .-----(
“-------உங்களில் தமது மனைவியரை கோபத்தில் தாய் எனச் சொல்லுவோருக்கு அவர்கள் தாய் இல்லை
அவர்களைப் பெற்றவர்கள் தவிர வேறு யாரும் அவர்களின் தாயாக முடியாது
அவர்கள் வெறுக்கத்தக்க சொல்லையும் பொய்யையும் சொல்கிறார்கள் -------------(58:1,2)
“வாதிடுபவள் “ என்பதே இந்த சுராவின் பெயராக அமைந்துள்ளது
ஒரு வெறுக்கத்தக்க மூடப்பழக்கம் இந்த வசனத்தால் தடை செய்யபட்ட்டது
இந்த நிகழ்வால் கவ்லாவின் பெயரும் புகழும் ஊரெங்கும் பரவியது .
ஒரு முறை உமர் தன் தோழர்கள் இருவருடன் அரசுப்பணியாக சில பெரிய மனிதர்களை சந்திக்கப் போய்க் கொண்டிருந்தார்
இந்தப்பெண் உமர் அவர்களை வழிமறித்து வெகு நேரம் வேண்டாத பழங்கதை எல்லாம் பேசிக்கொண்டிருக்கிருக்க உமர் பொறுமையாக் கேட்டுக் கொண்டிருந்தார்
உமருடன் வந்தவர்கள் பொறுமையிழந்து அந்தப்பெண்ணை விரட்ட முயற்சிக்கிறார்கள்
அப்போது உமர் சொல்கிறார்
“இன்று முழுதும் இந்தப்பெண் பேசினாலும் நான் கேட்கக் கடமைப்பட்டவன்
இவர் யார் தெரியுமா ? இவர் நபியிடம் முறையிட்ட குரல் இறைவன் காதுக்கு எட்டி ,இறைவன் உடனே மறுமொழியும் தீர்வும் அருளிய சிறப்புடையவர் “ என்கிறார்
தொடர்ந்து வரும் பதிவுகளில் மற்ற சஹாபிகள் ஒரு சிலர் பற்றிப் பார்ப்போம்
இன்றைய வினா
“எவன் அலட்சியம் செய்கிறானோ அவன் பக்கம் நீங்கள் கவனம் செலுத்துகிறீர்கள் “
இது குரானின் எந்தப்பகுதியில் வரும் வசனம் ?
விடை விளக்கத்துடன் இறைவன் நாடினால் நாளை நபித்தோழர்களை சிந்திப்போம்
05 துல்ஹஜ் (12)1443
05 07 2022 செவ்வாய்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment