எங்கள் CBROA Puducherry
நூறை எட்டும் உறுப்பினர் எண்ணிக்கை
யாதும் ஊரே யாவரும் கேளிர்
எனும் சங்கத் தமிழ் மனப்பாங்கு
அதனால்
நோ சண்டை சச்சரவு
நோ அறைகூவல்கள்
நோ வெறுப்புப் பேச்சு
நோ மதவாதம்
எம்மதமும் சம்மதம்
ஒரே வங்கியில் பணியாற்றி ஒய்வூதியம் பெறுவோர் குழுவில் சண்டை சச்சரவுக்கு இடம் ஏது எனும் எண்ணம் தோன்றுவது இயல்பு
ஆனால் அனுபவங்கள் அப்படி இல்லை
இதே போன்ற ஒரு நாடு தழுவிய குழுவில் நான் இருந்தேன் . தொடர்ந்து இருக்கமுடியாத அளவுக்கு வெறுப்புப் பதிவுகள் , தமிழ் பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டது என்ற விதி வேறு
இதுவரை செயலராக இருந்த தோழர் விஜயகுமாரும் சரி இப்போது இருக்கும் தோழர் கணேச சுப்ரமணியமும் சரி அலட்டல் இல்லாமல் அமைதியாக குழுவை செம்மையாக நடத்திச் செல்கிறார்கள்
சரி என்ன செய்கிறோம் எங்கள் குழுவில்
கதிரவன் உதிக்கும் நேரத்தில் காலை மலராய் மலர்ந்து மணம் பரப்பும் தோழர் சோம சேகரின் கவிதைகள்
என்ன ஒரு கருத்து நயம் , சொல் அலங்காரம் !
ஆசு கவி, புதுவையின் புதுமைக் கவி என என்ன பட்டம் கொடுத்தாலும் தகும்
தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் கவித்திறன் பெற்றவர்
இரவில் தூக்கம் கண்களைத் தழுவி சுகமாக உறங்க இனிய திரைப்பாடல்கள் ஒலி வடிவில் – நன்றி தோழர் மணி வண்ணனுக்கு
தோழர் செங்கை சண்முகம் அவ்வப்போது தன் தமிழ்ப் புலமையையும் கவித்திறனையும் வெளிப்படுத்துவார்
தோழர் கரம் சில திகிலான படைப்புகளைக் கொடுத்து விட்டு மாயமாகி விடுவார்
தினம் ஒரு குறள் கொடுப்பார் மற்றொரு தோழர் ,
சிறிதும் பெரிதுமாய் ஒளி ஒலி பதிவுகள் , கூட் மானிங் செய்தி எல்லாம் வரும்
கவித்திறன் , தமிழ்ப் புலமை , எழுதும் வல்லமை எல்லாம் கொண்ட அறிஞர்கள் தங்களை வெளிக்காட்டாமல் இருக்கிறார்கள்
எனக்குத் தெரிந்த மட்டில் தோழர்கள் கணேச சுப்ரமணியன் ,ஹசன் அலி , ரவிராஜ் ஆகியோர் இந்த வரிசையில் வருவார்கள்
என் வினாக்களுக்கு விடை அளிப்பதை வைத்து இவர்கள் பெயரைக் குறிப்பிடு கிறேன் எனக்குத் தெரியாமல் நிறையப் பேர் இருக்கலாம்
இதற்கிடையில் பாதுகாக்கப்பட்ட ஆவண வடிவில் (PDF) சில சுற்றறிக்கைகள் அவ்வபோது தலை நீட்டும் . யார் இவற்றைப் படிக்கிறார்கள் என்பது தெரியவில்லை ,நான் படிப்பதில்லை
என்னைப்பற்றிச் சொல்ல மறந்து விட்டேன் .
ஞாயிறு திங்கள் ஆங்கில வினா விடை, செவ்வாய் புதன் தமிழ், வியாழன் வெள்ளி குரான் சனிக்கிழமை வேறு ஏதாவது என்று வாரத்தில் 7 நாளும் என் பதிவு வரும்
என் வினாக்களுக்கு உடனே சரியான விடை அனுப்புபவர் தோழர் ஹசன் அலி
ஆழமான கருத்துகள், பல புதிய செய்திகளுடன் விடை அளிப்பவர் தோழர் கணேச சுப்ரமணியன்
அவ்வப்போது விடை அளிக்கும் தோழர்கள் செங்கை சண்முகம் , சோம சேகர் , சிவசுப்ரமணியன் .கனகராஜ்
அனைவருக்கும் நன்றி
தோழர் ரவிராஜ் தொடர்ந்து குரான் வினாக்களுக்கு விடை அளித்து வந்தார்
இப்படி ஒரே மாதிரியாகப் போய்க் கொண்டிருந்தால் ஒரு சலிப்புத் தட்டி விடும்
அதை மாற்றி எல்லோரையும் சுறு சுறுப்பாக்கும் ஒரு மந்திரச் சொல்
பென்சன் அப்டேஷன்
இது பற்றி சில மாதங்களுக்கு ஒரு முறை ஒரு நேர்மறைக் செய்தி வரும்
உடனே காரசாரமான கருத்துப் பரிமாற்றங்கள் நடக்கும்
கொஞ்ச நாள் கழித்து
Talks inconclusive -------
_____not cooperating
என்று ஒரு செய்தி வரும்
ஒத்துப்போகாதது யார் என்பது முக்கியமல்ல
அது யாராக இருந்தாலும்
இலவு காத்து நிற்பவர்கள் நாம்தான்
மனதில் பட்டதை எழுதி விட்டேன்
யாரையும் குற்றம் சொல்லவில்லை
இறைவன் நாடினால் மீண்டும் நாளை சிந்திப்போம்
23072022 சனிக்கிழமை
சர்புதீன் பீ
No comments:
Post a Comment