அரபா நாள்
நாளை 09 07 20 22 துல்ஹஜ் மாதம் 9 ஆம் நாள்
மிகப்புனிதமான ஒரு நாள்
ஹஜ்ஜுப் புனிதபயணம் அரபா நாள் அன்று அரபா திடலில் செய்யவேண்டிய கடமைகள் எல்லாம் செய்தால்தான் நிறைவேறும்
இந்த நாளின் சிறப்பு , பெயர்க் காரணம் எல்லாம் இறைவன் அருளால் பின்பு எப்போதாவது விரிவாகப் பார்ப்போம்
இப்பொது நான் சொல்ல வருவது நாம் அரபா நாளன்று செய்ய வேண்டியது பற்றி
அரபா நாளில் நோன்பு வைப்பது மிகவும் சிறப்பான ஓன்று
இது கட்டாயக் கடமை (பர்ளு ) இல்லை என்றாலும் இதில் உள்ள நன்மைகள் பலன்கள் கருதி வைப்பது நல்லது
அடுத்து தக்பீடர் ஓதுவது
நாளை 09 07 2022சனிக்கிழமை
காலை பஜ்ர் (சுபுஹ் தொழுகையில் துவங்கி
13 07 2022 புதன அசர் தொழுகை வரை 23 வேளைகள் தொழுதவுடன்
தக்பீர் ஓத வேண்டும்
வீட்டில் தொழுதாலும் , வெளியே தொழுதாலும் ,,பள்ளியில் தொழுதாலும்
தனியே தொழுதாலும் , கூட்டாகத் தொழுதாலும் ஆண்கள் பெண்கள் சிறுவர் சிறுமியர் அனைவரும் தவறாமல் ஓத வேண்டும்
ஓத வேண்டிய தக்பீர்
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
ளாஇலாஹா இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர் வலிள்லாஹில் ஹம்து
என்று மூன்று முறை ஓதவேண்டும்
இதுவும் ஒரு நபிவழி சுன்னத்தான் .
ஆனால் கடைப்பிடிக்கவ்ண்டிய சுன்னத்
சிரமம் இல்லாத சுன்னத்.
அடுத்து குர்பான் இது தியாகத்திருநாள் தொழுகைக்குப் பின் கொடுக்கவ்ண்டியது
வசதி உள்ள எல்லோரும் குர்பான் கொடுக்க வேண்டும்
என்று நபி பெருமான் சற்று கடுமையாகவே சொல்லியிருக்கிறார்
எல்லாம் வல்ல ரக இறைவன் இந்த்ப்புனித மாதத்தின் மிகப் புனித நாளில் நாம் பாவங்களை மன்னித்து அவனுடைய ரஹ்மாதையும் பரக்கதையும் வாரி வாரி வழங்குவானாக
இறைவன் நாடினால் நபித் தோழர்களை வழக்கம் போல் நாளை சிந்திப்போம்
08 துல்ஹஜ் (1@) 1443
08 07 2022 வெள்ளி
No comments:
Post a Comment