Friday, 8 July 2022

நயத்தக்க நபித் தோழர்கள் – பகுதி 1 0மு ஆத் இப்னு ஜபல்

 நயத்தக்க நபித் தோழர்கள் –

பகுதி 10
சென்ற பகுதியில்
ஊர் பேர் தெரியாத ஒரு சஹாபி - ஜூலை பீப் பெற்ற பேறுகள் பற்றிப் பார்த்தோம்
இன்று இன்னொரு சஹாபா பற்றிப் பார்ப்போம்
அவர் பெயர்
மு ஆத் இப்னு ஜபல்
16 வயதில் இஸ்லாத்தில் இணைந்து 38 வயதில் உயிர் நீத்தவர்
இந்தக் குறுகிய காலத்தில் இவர் சாதித்தவை ஏராளம்
இளமைத் துடிப்பில் பல இடங்களுக்கு சென்று இஸ்லாத்தை வேகமாகப் பரப்பினார்
குரானைக் கற்றுத் தேர்ந்து மனனம் செய்து ஹாபிஸ் எனும் பெருமை பெற்ற ஆறில் ஒருவரானார்
குரானை இன்னாரிடம் போய்க் கற்றுக்கொள்ளுங்கள் என நபிகளால் சுட்டிக்காட்டப்பட்ட நால்வரில் ஒருவராய் இருந்தார்
என் சமுதாயத்தில் ஹளால் ,ஹராம் பற்றி நன்கறிந்தவர் என்று நபி போற்றும் அளவுக்கு இஸ்லாமிய சட்டங்களை கற்றுத் தெளிந்தவர்
நபி இப்ராஹீம் ஒரு தனி மனிதனல்ல . அவர் ஒரு சமுதாயம் என்று இறைவன் சொல்கிறான்
அது போல்
ஒரு சமுதாயம் செய்ய வேண்டிய களப் பணிகளை தனி ஒருவராய் நின்று செய்ததால் ஒரு சமுதாயம் என்று போற்றப்பட்டவர்
“உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும்” என நபிகளால் போற்றப்பட்டவர்
தம் இரு மனைவியரை இஸ்லாமிய நெறிப்படி மிக நீதமாக நடத்தியவர்
தன் மகனுக்கு இவர் கூறிய அறிவுரைகளில் மிகச் சிறந்தது
“ நீ தொழும் ஒவ்வொரு தொழுகையையும் இதுவே நமது விடைபெறும் நிறைவுத் தொழுகை என்று நினைத்து மிகச் சிறப்பகஎன்பது த் தொழுகவேண்டும்” என்பது
நபி பெருமான் சொனார்கள்
“ஈமான் என்பது இறையச்சத்துக்கும் இறை நம்பிக்கைக்கும் இடைப்பட்டது
இறைவன்நமக்கு நரகத்தைக் கொடுத்துவிடுவானோ என்ற அச்சம் இருக்கும் அளவுக்கு , உறுதியாக இறைவன் நமக்கு சுவனத்தை வழங்குவான் என்ற நம்பிக்கையும் இருக்க வேண்டும் “
இதே போல் மு ஆத்தும்
“ இறைவா உன்னை அஞ்சியே வாழ்ந்தேன் இப்போது நீ என்னைநரகிலிருந்து காப்பாற்றுவாய் என நம்பிக்கை வைக்கிறேன் “
என்று சொல்லிய சில நிமிடங்களில் அந்த இளம் சஹாபியின் உயிர் பிறந்தது
இறைவன் அவரைப் பொருந்திக் கொள்வானாக
நேற்றைய வினாவுக்கு இன்றைய பதிவே விடையாகி :விட்டது
உமர், ஜைத் இப்னு தா(சா)பித் என இரு விடைகள் வந்தன
நீதியின் இ லக்கணமாய், நல்லாட்சியின் எடுத்துக்காட்டாயத் திகழ்ந்த உமரின் சட்டம் பற்றிய அறிவு மிகத் தெளிவானது
ஜைத் இப்னு தா(சா)பித்”இந்த சமுதாயத்தின் கல்விக்கடல்” என அறிஞர்களால் போற்றப்பட்டவர் , குரானைத் தொகுத்ததில் பெரும் பங்காற்றியவர்
ஆனால் “இந்த சமுதாயத்தில் ஹலால் ,ஹராம் பற்றி நன்கறிந்தவர் என்று நபி பெருமான் அவர்களால் பாராட்டப் பட்டவர்
மு ஆத் இப்னு ஜபல் தான் .
ஒருவேளை இதை மட்டும் வினாவில் குறிப்பிட்டிருந்தால் சரியான விடை வந்திருக்கலாம்
விடை அனுப்பிய சகோ
ஹசன் அலி, ஷர்மதா
இருவருக்கும் நன்றி, பாராட்டுகள்
இந்த நிறைவு செய்யும் நேரத்தில் சரியான விடை அனுப்பிய சகோ
ஷர்மதாவுக்கு மீண்டும் வாழ்த்துகள் பாராட்டுகள் . ஆர்வத்துக்கும் முயற்சிக்கு நன்றி
இதுவரை
1.அபூபக்கர் சித்திக், 2.உமர் 3.உதுமான்
4அலி 5.தல்ஹா 6. ஜுபைர்
7.அப்துல் ரஹ்மான் 8. சக்து
9.ஸ யிது 10 அபு உதை தா
11. அன்னை கதீஜா .12. அன்னை ஆயிஷா கவ்லா13. இப்ன் உம் மக்தும்
14.ஸுஹைப் ரூமி 15.ஜூலை பீப் 16. மு ஆத் இப்னு ஜபல்
என 16 சஹாபாகுள் பற்றி சுருக்கமாகவும் மிகச் சுருக்கமாகவும் ஒரு அறிமுசம் போல எழுதியருக்கிறேன்
இந்தத் தொடரை இத்துடன் நிறைவு செய்கிறேன்
முற்றுப்புள்ளி இல்லை ,அரைப் புள்ளி எனலாம்
இறைவன் நாடினால் மாதம் ஓன்று இரண்டு நபித் தோழர்கள் பற்றி எழுதுவேன்
மிகக் குறைந்த கால இடைவெளியில் நபித் தோழர்கள் பற்றி எழுதும் எண்ணத்தை மனதில் விதைத்து ,ஒரு சரியான வழி காட்டி பத்து நாட்கள் தொடர்ந்து எழுத வைத்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி
எழுதுவதற்குத் தூண்டு கோலாய் இருந்து , அவ்வப்போது கருத்துகள் ,பாராட்டுகள் , வினாவுக்கு விடைகள் அனுப்பி தொடர்ந்து எழுத ஊக்குவித்த சகோ
மும்தாஜ் . மெஹராஜ்,, பாப்டி
ரபீக், சிராஜுதீன் , அயுப்கான்
ஷர்மதா , தல்லத் .கிரசன்ட் ஷேக்
ஷிரீன் பாருக், ஹசன் அலி ராஜா சுப்பிரமணியன், ரவிராஜ் ,
அனைவருக்கும் நன்றி
தொடருக்கு பக்க பலமாக இருந்த இஸ்லாத்தின் வேர்களும் விழுதுகளும்
என்ற நூலை எப்போதோ கொடுத்த சகோ
ஷஹவுக்கு நன்றி
(யார் பெயராவது விட்டுப்போயிருந்தால் sorry)
ஒரு திட்டமிடல் இல்லாமல் துவங்கிய பணியை திக்குத் திசை அறியாது திண்டாட விடாமல் நல்ல முறையில் நிறைவு செய்து கொடுத்த இறைவனுக்கு மீண்டும் மீண்டும் நன்றி
இறைவன் நாடினால்
நாளை சிந்திப்போம்
09 துல்ஹஜ் (12)1443
09 07 2022 சனிக்கிழமை
சர்புதீன் பீ
May be an image of 3 people and text that says "SAHABA"
Like
Comment
Share

No comments:

Post a Comment