Sunday, 3 July 2022

நயத்தக்க நபித் தோழர்கள் – பகுதி 5 பத்ரு சஹாபிகல்

 நயத்தக்க நபித் தோழர்கள் –

பகுதி 5
இதுவரை நபித்தோழர்களில் மிகவும் சிறப்பான பத்துப் பேர் பற்றிய செய்திகளைபார்த்தோம் .
..
அவர்கள் பெயர்களை நினைவு படுத்திகொள்வோம்
1. அபூபக்கர் சித்தீக் 2.உமர் 3.உதுமான்
4.அலி 5.தல்ஹா 6.ஜூபைர்
7. அப்துல் ரஹ்மான் 8.சக்து
9.சயீது 10 அபு உபைதா
அடுத்த அணியில் வருபவர்கள் பத்ருப்போர் சஹாபிகள் 313 பேர்
இவர்கள் அத்தனை பேரையும் நினைவில் நிறுத்துவது சிரமம்
பத்ருப்போர் நிகழ்ந்த ஆண்டு நிறைவில் இந்த அனைவரின் பெயரையும் ஓதினால் நன்மைகள் பல என்று சொல்லப்படுகிறது
பத்ருப்போரில் உயிர் நீத்த சஹாபிகள் 14 பேர்
1. முபஷ்ஷிர் (இப்னு அப்துல் முன்கதிர் ரலி)
2. ரபீஃஉ (இப்னு முஅல்லா ரலி )
3. ஸஃது (இப்னு கய்சமா ரலி)
4. யஜீது (இப்னு ஹாரிஸ் ரலி)
5. உபைதா (இப்னு ஹாரிது ரலி)
6. ஆகில் (இப்னு புகைரு ரலி)
7. உமைர் (இப்னு ஹுமாம் ரலி)
8. முஅவ்விது (இப்னு ஹாரிஸ் ரலி)
9. திஷ்ஷிமாலைன் (இப்னு அம்து அம்ரு ரலி)
10. மிஹ்ஜா (இப்னு சாலிஹ் ரலி
11. உமைர் (இப்னு அபீவக்காஸ் ரலி)
12. ஹாரிஸா (இப்னு சுராக்கா ரலி)
13. சஃப்வான் (இப்னு வஹப் ரலி)
14. அவ்ஃப் இப்னு ஹாரித் ரலி).
முடிந்தால் படித்துப்பாருங்கள்
இறைவழியில் போர் புரிந்து உயிர் நீத்தவர்களை ஷுஹதாக்கள் என்று சொல்வது மரபு
இந்த ஷுஹதாகளுக்கு உள்ள சிறப்புகள
“இவர்கள் உயிருடனே இருக்கிறார்கள் நீங்கள் அதனை அறிவதில்லை என்கிறது திருமறை (2:154) (3:169)
மேலும் இவர்கள் சிறப்புகள் பற்றி நபி பெருமான் சொன்னது :
எந்த நபிமாரும் பெறத . அவை:
1.எல்லா நபிமார்களின் உயிர்களையும் இஸ்ராயீல் அலைதான் கைப்பற்றுவார்கள். ஆனால் ஷுஹதாக்களின் உயிர்களை இறைவனே கைப்பற்றுவான்.
2.. ஷுஹதாக்கள் குளிப்பாட்டப்பட மாட்டார்கள். வெட்டுண்ட காயங்களுடன் அடக்கப்படுவார்கள்.
3.. ஷுஹதாக்கள் கஃபனிடப்பட மாட்டார்கள். அவர்கள் போரில் அணிந்திருந்த உடைகளுடனே அடக்கம் செய்யப்படுவார்கள்.
4... எல்லா நபிமார்களுக்கும் மறுமைநாளில் சிபாரிசு செய்யும் உரிமை வழங்கப்படும். ஆனால் ஷுஹதாக்கள் ஒவ்வொரு நாளும் சிபாரிசு செய்து கொண்டு இருக்கிறார்கள் என நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். –(நூல்: தப்ஸீர் குர்துபி 1518ஃ3)
பத்ருப்போர் இஸ்லாமிய வரலாற்றில் முதல் போர்
பத்ரு என்ற இடத்தில் நடந்ததால் இந்தப் பெயர்
அதைப்பற்றி சில செய்திகள் மிகச் சுருக்கமாக
இது ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு ரமலான் பிறை 17,வெள்ளி
அன்று நடைபெற்றது.
இஸ்லாமிய வீரர்கள் 313 பேர் எதிரிகளின் குறைஷிகள்) எண்ணிக்கை 1000 துக்கு மேல்
.முஸ்லிம்களின் படைப்பிரிவில் 3 குதிரைகளும், 9 உருக்குச் சட்டைகளும், 8 வாளாயுதங்களும், 70 ஒட்டகங்களும் இருந்தன.
எதிரிகள் படையில் 100 குதிரைகளும், 700 ஒட்டகங்களும் ஏராளமான யுத்த தளவாடங்களும் இருந்தன
நபி பெருமானின் இறைஞ்சுதலை ஏற்றுக்கொண்டு இறைவன் அவர்களுக்கு வெற்றியை கொடுக்கிறான்
“நீங்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் பொது பத்ரில் இறைவன் உங்களுக்கு உதவியிருக்கிறான்.எனவே நீங்கள் நன்றி செலுத்துவத்ற்காக இறைவனை அஞ்சுங்கள் “குரான் சுராஹ் அல் இம்ரான் (3:127)
இனி ஒரு சில நபித் தோழர்கள் பற்றி :
சஹாபியா என்பது சஹாபாக்களின் பெண்களைக் குறிக்கும் சொல்
நாற்பதுக்கு மேற்பட்ட சஹாபியாக்கள் இருந்தார்கள்
எல்லோருக்கும் தெரிந்த பெயர்
அன்னை கதீஜா
முதன் முதலில் இஸ்லாத்தில் இணைந்த பெருமை உடையவர் .
அதனால் பெண்குலத்துக்கே பேரமை சேர்த்தவர்
நபி பெருமானின் முதல் மனைவி
ஓசையின்றி , ஆர்பாட்டம் இன்றி சில சமூக சீர்திருத்தங்கள், சமுதாயப் புரட்சிகளை உள்ளடடிக்கியது நபி பெருமானின் இந்தத் திருமணம்
நபி பெருமானுக்கு இது முதல் திருமணம் .
அன்னை கதீஜா விதவை
நபி அவர்களை விட அன்னை கதீஜா 14 ஆண்டுகள் மூத்தவர்
செல்வச் சீமாட்டியான அன்னை கதீஜாவை மகர கொடுத்து மணம் முடித்தார் நபி
அடுத்து
அன்னை ஆயிஷா
அபூபகர் சித்திக்கின் மகள் .
நபியின் துணைவியாக நீண்ட நாள் வாழ்ந்தவர்
பல்லாயிரக்கணக்கான நபி மொழிகளை (ஹதீஸ்) உலகுக்கு அறிவித்தவர்
இன்னும் சிலர் பற்றி வரும் பகுதிகளில் பார்ப்போம்
நேற்றைய வினா
“பிறகு அவர்கள் அழுக்குகளை நீக்க வேண்டும் “
இது குரானில் எஙகு வரும், எதைப்பற்றிச் சொல்லும் வசனம் ?
விடை
அல் ஹஜ் சூராவில் வரும் வசனம் இது (23:29)
சரியான் விடை அனுப்பிய ஒரே சகோ
ஹசன் அலிக்கு
வாழ்த்துகள் பாராட்டுகள்
விளக்கம்
இறைவன் நபி இப்ராஹிமுக்கு ஹஜ் பற்றி ஆணை பிறப்பிக்கிறான்
“மகளுக்கு ஹஜ் பற்றி அறிவியுங்கள்
அவர்கள் உம்மிடம் நடந்தும் ,மெலிந்த ஒட்டகங்கள் மீதும் (தொலைவில் உள்ள ஒவ்வொரு பாதையிலிருந்தும் வருவார்கள் “
(22:27)
“(குர்பானி கொடுத்த) பிறகு அவர்கள் அழுக்குகளை நீக்க வேண்டும் -----மேலும் தொன்மையான ஆலயத்தை சுற்றி வர வேண்டும் “
(22::29)
இன்றைய வினா
ஒரு பெண்ணுக்காக , அவர் பிரச்சினைக்கு விடை சொல்லும்படி உடனே இறங்கிய இறை வசனம் எது ?
விடை விளக்கம் நாளை இறைவன் நாடினால்
இறைவன் நாடினால் நாளை நபித்தோழர்களை சிந்திப்போம்
04 துல்ஹஜ் (12)1443
04 07 2022 திங்கள்
சர்புதீன் பீ
May be an image of text
Like
Comment
Share

No comments:

Post a Comment