நயத்தக்க கு நபித் தோழர்கள் 14
ஹம்ஜாஇப்னு அப்துல் முதலிப் ரலியாழ்லாஹு அன்ஹு
சுருக்கமாக
ஹம்ஜா ரலி / ஹம்ஜா
நபி ஸல் அவர்களின் தந்தை வழிப் பாட்டனார் அப்துல் முத்தலிப் பெற்றெடுத்த 10 ஆண் மக்களில் இஸ்லாத்தில் இணைந்து சகாபா என்ற உயர்வைப் பெற்ற வெகு சிலரில் ஹம்ஜா அவர்களும் ஒருவர்
நபி ஸல் அவர்க்ளுக்கு சிறிய தந்தை என்றாலும் வயதில் நபி பெருமானை ஒத்தவர்
மேலும் ஒரே செவிலித்தாயிடம் வளர்ந்ததால் நபி அவர்களின் பால்குடி சகோதரர் என்றும் உறவு
நபி ஸல் அவர்களுக்கு இப்படி நெருங்கிய உறவாக இருந்தாலும் கொஞ்சம் காலம் கழித்துதான் இஸ்லாத்தில் இணைந்தார்
வீரம், வீரப்போர் , வீரமரணம் என்பதுதான் இவரது வரலாற்றுச் சுருக்கம்
அதற்கேற்றாற்போல் இரண்டு பட்டங்கள் ஓன்று
அல்லாவின் சிங்கம்
அடுத்து
ஷஹீதுகளின் தலைவன்
வீரமரணம் அடையும் ஷஹிதுகள் பற்றி குர்ஆனில் இறைவன் சொல்வது :
“அவர்கள் கேள்விக் கணக்கின்றி சுவனம் புகுவார்கள்
அவர்கள் உடலை மண் அரிக்காது “
இப்படிச் சிறப்புடைய ஷஹிதுகளின் தலைவனுக்கு எவ்வளவு உயர்ந்த நிலையை இறைவன் கொடுப்பான் !
அப்படி என்னதான் செய்தார் அவர் ?
வீரம், வீரப்போர் , வீரமரணம் என்பதுதான் இவரது வரலாற்றுச் சுருக்கம்என்று முதலிலேயே குறிப்பிட்டேன்
ஆம் அவர் இஸ்லாத்தில் இணைந்ததே ஒரு வீர நிகழ்வுதான்
அபு ஜஹ்ல் என்பவர் நபி ஸல் அவர்களை மிக இழிவான சொற்களால் காபாவில் வசை பாடிக்கொண்டிருந்த செய்தி ஹம்ஜா காதுக்கு எட்டியது
வேட்டைக்குப் புறப்பட்டுக்கொண்டிருந்த அவர்கள்அப்படியே நேரே காபாவுக்குப் போனார்கள்
அபுஜஹ்ல் மண்டையில் ஓங்கி ஒரு அடி
குருதி கொட்டுகிறது
அடுத்த அடி அடித்திருந்தால் அபு ஜஹ்ல் கதை முடிந்திருக்கும் . ஆனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தடுத்து விட்டார்கள்
அதன்பின்தான் உள்ளத்தில் ஒளிந்திருந்ததை வெளிப்படுத்தி இஸ்லாத்தில் இணைந்தாரகுள்
அதன் விளைவு ?
ஒருபக்கம் யாரிடமும் சமரசம் செய்து கொள்ளாத வீர மறவர் குலத்தைச் சேர்ந்த இவர் இஸ்லாத்தில் இணைந்ததை அறிந்த இறை மறுப்பாளர்கள் மொத்தமும் அச்சம் ,பீதியில் ஆடிப்போய் விட்டார்கள்
இன்னொரு பக்கம் புதிதாக இஸ்லாத்தில் இணைவோரின் அச்சம் கொஞ்சம் நீங்கியது
இப்படி ஒரு வீர நிகழ்வோடு இஸ்லாத்தில் இணைத்த ஹம்ஜாவின் வீரம் பல போர்களில் தொடர்ந்தது
இரு கைகளிலும் வாளேந்தி களமிறங்குவது இவர் சிறப்பு
அரை நாள் நடக்கும் போரில் ஒரு வீரர் 4, 5 பேரை வீழ்த்துவதே பெரிய சாதனைதான்
ஆனால் இவரோ ஒரு போரில் 30 பேரை வீழ்த்தி சாதனைகளை முறியடித்தவர்
இந்த பெருமை மிகு சாதனைதான் இறைவன் அருளால் அவர் பின்னாளில் வீர மரணம் அடைந்து ஷஹீது ஆகவும் வழி வகுத்தது
பத்ரு போரில் இவர் 30 எதிரிகளை வீழ்த்திய சாதனையால் மிக பெரிய அளவில் பாதிக்கபட்டவர்களில் ஒருவரான ஜூபைர் என்பவர் தன்னிடம் அடிமையாக இருந்த வஹ்ஷி என்பவரிடம்
“ நீ ஹம்ஜாவை உஹது போர்க்களத்தில் உயிர் துறக்கச் செய்து விட்டால் உன்னை நான் அடிமைத் தளையில் இருந்து விடுதலைசெய்து விடுதுகிறேன்”
என்று சொல்கிறார்
வாள் வீச்சில் கைதேர்ந்த அந்தக் காட்டரபிக்கு இது ஒரு கிடைத்தற்கரிய வாய்ப்பு
கூடுதலாக ஹம்ஜாவின் வீர சாதனையால் பாதிக்கப்பட்ட ஹிந்தா என்ற பெண் —இவரது தந்தை ,தந்தையின் உடன் பிறந்தோர் என பலரும் ஹம்ஜாவால் வீழ்த்தப் பட்டவர்கள் – வஹ்ஷியிடம்
“ஜூபைர் சொன்னபடி நடந்து நீ விடுதலை பெற்று விட்டால் பின் வாழ்நாள் முழுதும் நீ வசதியாக வாழத் தேவையான மிகப் பெரிய போருளுதவி செய்கிறேன் “
என்றார்
இது வஹ்சிக்கு துணித்து செயல் பட மிகப் பெரிய தூண்டுதலாகி விட்டது
சரியான தருணத்தில் வஹ்ஷி குறி பார்த்து எறிந்த ஈட்டி ஹம்ஜாவின் உயிரைப் பறித்து அவரை ஷஹீது நிலைக்கு உயர்த்தியது என ஒரு வரியில் சொல்லி விடலாம்
ஆனால் அதற்குப்பின் நடந்தது கொலை வெறியின் , குரூரத்தின் உச்ச கட்டம்
சிங்கம் உயிருடன் இருந்தவரை அருகில் வரவே அஞ்சிய எதிரிகள் உயிரற்ற அந்த உடலை காட்டு விலங்குகளின் கொடூரத்தோடு அங்கும் இங்கும் இழுத்து
வெட்டி சிதைத்து கூறு போட்டனர்
சிதறிய உறுப்புகளையும் விடாமல் எடுத்துக் கடித்து துப்பி தன் வெறியைத் தீர்த்துக் கொண்டார் அந்த ஹிந்த் என்ற பெண்
கண்டவர்கள் எல்லாம் கண்ணீர் வடித்தார்கள்
மிகவும் கலங்கிபோன நபியவர்கள் ,
தன்னை மறந்து , தன் பதவியை மறந்து
ஒரு உயிர் இழப்புக்கு ஒரு உயிரைத்தான் கொல்ல வேண்டும் என்ற இறை வசனத்தை மறந்து
“ஹம்ஜாவின் உயிருக்குப் பகரமாக நான் 70 பேரைக் கொல்வேன் “ என சூளுரைத்து தன் அளவு கடந்த ஆற்றாமையை வெளிபடுத்தினார்கள்
கொலையுண்டு சிதறுண்டு கிடந்தது நபியின் சிறிய தந்தை ,சகோதரர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்
மதினா நகரமே ஆடிப்போய்விட்டது
நபியவர்கள் ஹம்ஜாவுக்காக 70 முறை ஜனாசாத் தொழுகை அதுவும் வழக்கத்தை விட் அதிகமான த்க்பீர்களுடன் தொழுதார்கள்
ஷஹீதின் தலைவன் என்ற மிகச் சிறப்பான நிலை அடைந்த அல்லவின் சிங்கம் ஷஹீததாகும் போது வெறும் 53 வயதுதான்
பின் கதை
எந்த விதப் பகையும் இல்லாமல் பணத்துக்காக, அடிமைத்தளை விடுதலைக்காக ஹம்ஜாவைக் கொலை செய்த வஹ்ஷி பின்னாளில் மனம் திருந்தி இஸ்லாத்தில் இணைந்து சஹாபி ஆகி விடுகிறார்
ஹம்ஜாவை கொலை செய்ததற்குப் பகரமாக தான்தான் நபி என்று சொல்லித்திரிந்த பொய்யன் முசைலாமாவைக் கொன்று அந்த வெற்றியை நபி அவர்களிடம் சமர்ப்பிக்கிறார்
“போராளிகள் புதைக்கப் படுவதில்லை , விதைக்கப் படுகிறார்கள் “ என்ற கூற்றை மெய்யாக்கி விட்டார்கள் ஹம்ஜாஇப்னு அப்துல் முதலிப் ரலியாழ்லாஹு அன்ஹு அவர்கள்
இறைவன் நாடினால் நாளை நாளை சிந்திப்போம்
0609 20 23 புதன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment