இனிய இஸ்லாம்
எளிய தமிழில்
இனிய இஸ்லாம்
பிறருக்காக செய்யும் பத்லி ஹஜ் பற்றிய என் ஐயத்துக்கு இது வரை தெளிவு கிடைக்கவில்லை
எனவே அதுவே இன்றைய வினாவாகத் தொடர்கிறது என்று சென்ற பதிவை நிறைவு செய்தேன்
தொடர்ந்து ஹஜ் பற்றி சில செய்திகள்
ஹஜ் பற்றி பெரிதாக எழுத எனக்கு ஏதும் இல்லை
நான் அறிந்த சிலரிடையே நிலவும் சில தவறான புரிதல்களை
பற்றி எனக்குத் தெரிந்த அளவில் விளக்க முயற்சி செய்கிறேன்
சிறிய ஹஜ் எனப்படும் உம்ரா செய்தால் போதும் ,ஹஜ் அப்படி ஒன்றும் அவசியமில்லை என்ற ஒரு தவறான புரிதல் சிலரிடையே எப்படியோ வந்து விட்டது
உடல் நலமும் பொருள் வசதியும் இருக்கும் ஆண் பெண் அனைவரின் மீதும் ஹஜ் கட்டாயக் கடமையாக்கப்பட்டுள்ளது
மற்ற நான்கு கடமைகளுக்கு இல்லாத ஒரு சிறப்பு ஹஜ்ஜுக்கு இருக்கிறது
வாழ்நாளில் ஒரு முறை ஹஜ் செய்து விட்டால் அந்தக் கடமை நிறைவடைந்து விடுகிறது
உம்ரா செய்வது நல்லதுதான்
ஆனால் ஹஜ் செய்தால் மட்டுமே கட்டாயக் கடமை நிறைவேறும்
இல்லாவிட்டால் இறைவன் ஆணைக்கு மாறு செய்தவர்கள் , கடமை தவறியவர்கள் ஆவோம்
. ஹஜ்ஜை பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் நடந்தும் வெகு தொலைவிலிருந்து வரும் மெலிந்த ஒட்டகங்களின் மீதும் உம்மிடம் வருவார்கள் (எனக் கூறினோம்).( குரான் 22:27)
இது நபி இப்ராகிம் அலை அவர்களுக்கு இறைவன் இட்ட கட்டளை
அடுத்து ஒரு தவறான புரிதல்
மதீனா நகருக்குப் போய் அங்கு 40 வேளை தொழுதால்தான் ஹஜ் , உம்ரா நிறைவேறும் என்பது
புனிதப் பயணத்தின் கட்டாயக் கடமைகள் அனைத்தும் மக்காவைச் சுற்றியுள்ள இடங்களில் நிறைவேறி விடுகின்றன
மதீனாவுக்கு போவது ஒரு கூடுதல் நன்மைக்காக .
அங்கு வேறு கட்டாய அமல்கள் ஏதும் செய்ய வேண்டியதில்லை
பிறருக்காக செய்யும் பத்லி ஹஜ் பற்றிய என் ஐயத்துக்கு இது வரை தெளிவு கிடைக்கவில்லை
எனவே அதுவே இன்றைய வினாவாகத் தொடர்கிறது
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
20 ச fபர் (2) 1445
0 709 2023 வியாழன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment