இனிய இஸ்லாம்
எளிய தமிழில்
இனிய இஸ்லாம்
16 , அரபுத் தமிழ்
08 09 2023 வெள்ளி
“சலாம் அலைக்கும் “
அனைவரும் அறிந்த ஓர்அரபுச் சொல் பொருளும் தெரியும்
பிறகு இன் ஷா அல்லா( இறைவன் நாடினால் இதுவும் பெருமளவில்) பயன் பாட்டில் இருக்கிறது
“இறைவன் பெயரால் “ என்பதைக் குறிக்கும்
பிஸ்மில்லா என்பது முழுதாகவும் பிஸ்மி என்று பகுதியாகவும் புழங்கி வருகிறது
காலப்போக்கில் அரபு நாடுகளுக்கு வேலை தேடிச் செல்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகியது
அதோடு குரான், அரபு மொழி அறிவும் வளர்ந்து வரும்போது இன்னும் நிறைய அரபுச் சொற்கள் தமிழ் மொழியில் கலந்தான, உருமாறின
சலாம் அலைக்கும் என்பது சற்று நீண்டு முழு உருவாக “அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மது அல்லாஹி வ பரகாதஹூ” என்று மாறியது
, இதன் பொருள் “சாந்தியும் அல்லாஹ்வின் அருளும், ஆசீர்வாதமும் உங்கள் மீது உண்டாவதாக” என்பதாகும்.
இறைவன் கூறுகிறான் :
"உங்களுக்கு வாழ்த்துக் கூறப் பட்டால் அதை விட அழகிய முறையிலோ, அல்லது அதையோ திருப்பிக் கூறுங்கள்! அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்"
மாஷா அல்லாஹ் என்ற சொற்றொடரின் நேரடிப் பொருள் இறைவன் விரும்பியது, ஏதோ நல்லது நடந்ததாகச் சொல்லப் பயன்படுகிறது
மாஷா அல்லாஹ் (Masha Allah) அரபு மொழியிலிருந்து பெறப்பட்ட சொல் ஆகும். ஒரு நிகழ்வு அல்லது நபர் குறித்த வியப்ப்பு அல்லது அழகு உணர்வை வெளிப்படுத்த பயன்படுகிறது. பொதுவாக முஸ்லீம்கள் ஆச்சரியமானவைகளை பார்த்துவிட்டால் மாஷா அல்லாஹ் என்று சொல்லி, இப்படிப்பட்டவைகளை படைத்த அல்லாஹ்வை புகழுவார்கள்.
வக்த் என்ற சொல் நேரத்தைக் குறிக்கிறது (தொழுகையின் வக்த் )
அரசு அலுவலக நடைமுறயில் அரபு என்று சொல்லமுடியாத அளவுக்கு நிறைய சொற்கள் பயன் பாட்டில் உள்ளன
சிலவற்றை பார்ப்போம்
வக்கீல் ( வழக்கறிஞர் தமிழ் சொல்லை விட அரபுச் சொல் மக்கள் மனதில் நிற்கிறது
வசூல் , இலாக்கா , ரஜா (விடுப்பு)
ஆஜர், முகாம் , மொபசல்
லாயக் , ரத்து ,ஷராப் ஜப்தி
தவாலி, ஜாமீன் ,மகசூல்
சர்பத், பிரியாணி, சமோசா பூந்தி ,மிட்டாய் போன்ற உணவின் பெயர்களும்
காக்கா (சகோதரர்) அப்பா (Abbaa) (தாத்தா ) என்ற உறவின் பெய்ர்களும்
அரபு மூலத்திலிருந்து வந்தவைதான்
நீண்ட காலமாக இருந்த தமிழக அரபு நாட்டின் வணிக உறவு காரணமாக்
பல்லாயிரக்கணக்கான அரபுச் சொற்கள் இனம் காண முடியாத அளவுக்கு தமிழில் கலந்து விட்டதாகச் சொல்கிறார்கள்
இன்னொரு சிறப்பான செய்தி இணையத்தில் கண்டது
சங்க இலக்கியங்களில் வரும் பந்தர் என்பது துறை முகத்தைக் குறிக்கும் அரபுச் சொல்
“இன்னிசை புணரி இரங்கும் பெளவத்து
நங்கல வெறுக்கை துஞ்சும் பந்தர்”
என பதிற்றுப் பத்து கூறுகிறது.
அந்நாளில் துறைமுகங்களாக இருந்த ஊர்கள் சில இன்றும் பந்தர் என வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது
.
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை (போர்ட்டோ நோவோ) மஹ்மூது பந்தர் எனவும்,
சென்னைக்கு அருகிலுள்ள கோவலம், ஷஹீதுபந்தர் எனவும் அழைக்கப்படுகிறது.
அரபு நாட்டுத் தொடர்பால் நடை உடை பாவனையில் பல மாற்றங்கள் தமிழ் நாட்டில் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள்
இதோடு இந்தப் பகுதியை நிறைவு செய்கிறேன்
அடுத்த பகுதிக்கு முன்னோடியாக இன்றைய வினா :
‘குரானின் அழகு எனப்படும் சூராஹ் எது ?”
இறைவன் நாடினால் நாளை தமிழிலும் அடுத்த வாரம் குரானிலும் சிந்திப்போம்
(பத்லி ஹஜ் பற்றி என் ஐயம் ,வினா – still open )
11சfபர்1445
08092023 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment