19 , திருமறை 3
21 09 2023 வியாழன்
சென்ற பகுதியின்
நிறைவு வினா
குரான் முழுதையும் எழுத்து வடிவில் ஆக்க முதல் முயற்சி செய்தது யார் ?
விடை
அபூபக்கர் ஸித்தீக் (ரலி)அவர்கள் கலீபாவாக இருந்த காலத்தில் உமர் (ரலி) அவர்களின் திட்டம் மற்றும் ஆலோசனைப்படி ஜைத்பின் ஃதாபித்(ரலி)அவர்களால் எழத்து வடிவிலான குர்ஆன் ஷரீபின் ஒரு பிரதி தொகுக்கப்பட்டது
சரியான விடை எழுதிய சகோ
தல்லத்துக்கு
வாழ்த்துகள் பாராட்டுகள்
குர்ஆனை மனனம் செய்திருந்த நபித் தோழர்கள் பல போர்களிலும் மூப்பினாலும மறைந்து போகவே இந்த ஒரு முயற்சி
இறைவனே குர்ஆனைப் பாதுகாக்கின்றான் என்கிறது குர்ஆன்
முன்பு ஒரு பதிவில் மக்கா மதினா சூராக்கள் பற்றிப் பார்த்தோம்
இன்றைய வினா
மக்கா மதினா வசனங்களிடையே கருத்தில் பொருளில் காணப்படும் பொதுவான வேறுபாடுகள் என்ன?
இறைவன் நாடினால் விடை விளக்கத்துடன் நாளை சிந்திப்போம்
5 ரபியுல் அவ்வல்(3) 1445
21072023 வியாழன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment