Tuesday, 12 September 2023

ஏமாறாதே !ஏமாற்றாதே !!

 



ஏமாறாதே !ஏமாற்றாதே !!

13092023 புதன்
(In search of a partner to defraud
என்ற தலைப்பில் ஹிந்து நாளிதழில் செப்டம்பர் 10 ஞாயிறு அன்று
திரு R சிவராமன் வெளியிட்ட கட்டுரையின் சுருக்கிய தமிழாக்கம் சில மாறுதல்களுடன்
திரு சிவராமனுக்கு நன்றி )
“ஆறே மாதத்கில் உங்கள் பணம் இரட்டிப்பாகும் “
“மாதம் 8% வட்டி “
“”இரிடியும் விற்பனை – இரண்டு கோடி இப்ப்போது முதலீடு செய்தால் சில மாதங்களில் இருநூறு கோடி கிடைக்கும் “
இவை எல்லாம் திரும்பத் திரும்ப செய்திகலாக வரும் மோசடித் திட்டங்கள்
திரைப்படமும் இது பற்றி விரிவாக வந்து விட்டது
இருந்தாலும் ஒவ்வொரு முறையும் இந்த மோசடித் திட்டங்களில் குறுகிய காலத்தில் பல கோடிகள் சேர்ந்து விடுகிறது
அவ்வளவு பணம் நம் மக்களில் பலரிடம் இருக்கிறது .அதைவிட பணத்கை விரைவில் பன் மடங்காகப் பெருக்கும் பேராசை இருப்பது ஏமாற்றுவோர் வேலையே எளிதாக்கி விடுகிறது
ஆனால் நாம் இப்போது பார்க்கப் போவது மோசடியின் மற்றொரு பரிமாணம் –புனிதமான திருமணத்தி ன் பெயரால் நடக்கும் ஏமாற்று வேலைகள்
பெண்ணுக்கு 16,17 வயதாகி விட்டால் திருமணப் பேசசுக்கள் துவங்கி விடும்
பெரும்பாலும் உறவினர்கள், தெரிந்தவர்கள் குடுன்பங்களில்தான் திருமணம் பேசி நடத்தப்படும்
இப்படி எளிதாக இருந்த திருமண முறை காலத்தின் மாற்றம், வாழ்க்கை முறை மாற்றத்தால் மிகப் பெரிய மாற்றத்துக்குள்ளாகி விட்டது
இணைய வழி திருமணத் தொடர்பு மையங்கள் சாதி,மதம், மொழி இனம் தொழில் அடிப்படையில் பல்கிப் பெருகி விட்டன
ஒரு வகையில் இந்த மாற்றங்களும் பல பின் விளைவுகளை ஏற்படுத்தின
எப்படி, என்ன என்று விளக்குவதை விட சில உண்மை நிகழ்வுகள் பற்றிச் சொன்னால் எளிதில் விளங்கும்
அண்டை மாநிலத்திலிருந்து வந்து சென்னையில் வசித்துவந்த ஒரு இளைஞர்
திருமணத்துக்கு பெண் தேவை என்று ஒரு நன்கு அறியப்பட்ட ஒரு இணைய தள சேவையில் தன்னைப்பற்றிய தகவல்களை பதிவு செய்தார்
விருப்பம் தெரிவித்த ஒரு பெண்ணிடம் தன் பெற்றோர் இது பற்றி மேலும் தொடர்பு கொள்ளலாமா என்றுஇளைஞர் கேட்க அந்தப்பெண் அதற்கான நேரம் இன்னும் வரவில்லை என்று சொன்னார்
இருந்தாலும் தன்னைப்பற்றிய தகவல்கள், புகைப்படங்களை அனுப்பி வைத்தார் அந்தப்பெண்
பூத்துக்குலுங்கும் இளமை,, அழகு, அறிவு தன் முயற்சி எல்லாம் கூடிய ஒரு உயர்குலப் பெண்ணாக இருந்த அவரை இளைஞருக்கு மிகவும் பிடித்துப்போயிற்று
மாதம் 11/2 லட்சம் ஊதியம், சொத்து மதிப்பு 5 கோடி என குடும்பத் தரம், நிதிநிலைமை எல்லாவற்றிலும் பையனை விட மிக உயர்ந்த நிலையில் இருந்தார்
தொடர்பு கொண்ட முதல் நாளே தன கணக்கு அட்டை (debit card0 இயங்காமல் இருக்கிறது என்று சொல்லி உணவு கொண்டுவந்தவருக்கு கொடுக்க 900 ரூபாய் உடனே அனுப்பும்படி கேட்டுக்கொண்டார் அந்தபெண்
இரண்டு நாள் கழித்து மீண்டும் ஒரு பணக் கோரிக்கை
அவசர வைத்திய செலவுக்காக 30, 000 ரூபாய் கேட்டு .
தன் வங்கிக்கணக்கு தற்காலிகமாக முடக்கப் பட்டிருக்கிறது. இரண்டு நாளில் அது சரியானதும் பணத்தை திருப்பி அனுப்பி விடுவேன் என்று விளக்கம்
இதுபோல் தொடர்ந்து 20 நாட்களுக்கு பல்வேறு செய்திகள்
Love you என்பது எல்லா செய்திகளிலும் நிறைவு சொற்கள்
புகைப்படத்தில் கண்ட அழகிலும், குரல் இனிமையிலும் உங்களை மிகவும் விரும்புகிறேன் என்ற சொற்களிலும் மயங்கி விட்டதாகச் சொல்லும் அந்த இளைஞர் மேலும் சொல்கிறார்
ஒரு பணப் பிரச்சனையை தீர்த்து வைத்த உடனே அடுத்த ஓன்று வரும்
இப்படிதான் ஒருமுறை நட்புக்காக வேறு ஒருவருக்கு ஒரு நிதியாளரிடம் 4 லட்சம் ரூபாய் கடன் வாங்கிக் கொடுத்ததாகவும் அந்த நட்பு தலை மறைவாகி விட்டதாகவும் நிதியாளர் தன் வீட்டு வாசலில் நின்று உடனே பணத்தைக் கட்டச் சொல்லி பிரச்சினை செய்வதாகவும் வீட்டு வாடகை நான்கு மாதங்கள் கட்டாமல் இருப்பதாகவும் சொல்லிப் பணம் கேட்டார்
அதையும் நம்பி அந்த இளைஞர் உடனே 4 லட்சம் அனுப்பி வைத்தார்
அதோடு 65000ரூபாய்க்கு வாங்கிய கைப்பேசியையும் அனுப்பி வைத்தார்
இந்த முறை அந்தப்பெண் சொன்னது விரைவில் தன் தந்தையிடம் பணம் வாங்கி 5 லட்சம் அனுப்பி விடுகிறேன் என்பது
ஒவ்வொரு முறையும் பெண் சொல்வது திருமணப் பரிசாக அப்பா 2 கோடி கொடுப்பார் . அதை வைத்து உங்களிடம் வாங்கியதெல்லாம் திருப்பிக் கொடுத்து விடுவேன் .உங்கள் நிதிபிரச்சனை அனைத்தையும் நானே பார்த்துக்கொள்வேன் என்பது
அந்தப் பெண்ணும் ஆணும் தொடர்பில் இருந்தது வெறும் 22 நாட்கள் மட்டுமே
ஆனால் ஆண் இழந்தது 5 லட்சம் + 65000ரூபாய் கைபேசி
இதோடு நிறுத்திக் கொள்ள முடிவு செய்து பணம் அனுப்பாமல் விட்டபோது பெண் அடுத்து எடுத்த ஆயுதம் மிரட்டல் –black mail
பையனின் பெற்றோரைத் தொடர்பு கொண்டு நிறையக் கடன் வாங்கிகொண்டு ஏமாற்ற நினைக்கிறார் என்றும் ,தாய்மை அடையச் செய்து விட்டார் என்றும் புகார் செய்தார்
இந்த நிலையில்தான் இளைஞன் அந்தப் பெண் மேல் காவல் துறையின் சைபர் குற்றப் பிரிவில் புகார் கொடுத்தார்
அதற்குள் இந்தப்பெண் வரதட்சனை கேட்டு தன்னைக் கொடுமைப் படுத்தியதாக இளைஞன் மேல் பெங்களூரு காவல் நிலயத்தில் புகார் கொடுத்தார்
அதன் அடிப்படையில் அவர் பெங்களூரு வரும்படி காவல் துறை ஆணைஇட்டது
அங்குதான் தன் கனவுக்ககன்னியை நேரில் சந்தித்தார்,
அதிர்ச்சி அடைந்தார்
புகைபடத்துக்கு துளியும் சம்மந்தம் இல்லாத ஒரு மிக சாதரணமான தோற்றம் வயது 33
நல்லவேளை, நடந்தது என்னவென்று அவர் சொன்னதகேட்டு, அவர் சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்திருப்பதையும் பார்த்து அவர் ஊர் திரும்ப அனுமதித்து விட்டார்கள் காவல் துறையினர்
சைபர் குற்றப் பிரிவு தீவிர நடவ்டிகையில் இறங்கியதில் அந்தப் பெண் பிடி பட்டார்
பெங்களூருவில் விடுதியில் தங்கியிருந்த அவர் ஆந்திராவைச் சேர்ந்தவர்
மணமகள் தேவை விளம்பரங்களில் தெலுங்கு மொழி தெரிந்தவர்களைத் தேர்வு செய்து பணம் பறிப்பதை ஒரு தொழிலாகவே செய்து வந்தார் அதில் கோடிக்குமேல் சம்பாதித்து விட்டார்
அவரிடம் ஏமாந்தவர்கள் 150 பேர் ஆனால் 23 பேர்தான் புகார் கொடுத்துள்ளார்கள்
அடுத்து ஒரு பெண் ஏமாந்த நிகழ்வு
துணைவரைப் பிரிந்து வாழ்ந்த ஒரு 40 வயதுப்பெண் தகுந்த துணை தேடி இணையத்தில் தகவல்களைப் பதிவு செய்தார்
நெதர்லாந்தில் வசிக்கும் ஒரு மருத்துவர் விருப்பம் தெரிவித்தார் .
அதோடு கட்செவியில் தொடர்பு கொண்டு பல லட்சம் மதிப்புள்ள ஒரு பரிசு அந்தபெண்ணுக்கு அனுப்பியிருப்பதாகவும் அதைப் பெறுவதற்கு பதிவுக்கட்டணம் போன்ற பல கட்டணங்களை வங்கிக் கணக்குகளில் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்
அடுத்த நொடியே மும்பையில் இருந்து ஒரு பெண் பேசினார் . .பரிசு வந்து விட்டது உரிய கட்டணங்களை செலுத்துங்கள் என்று சொன்னார்
சிறிது நேரத்தில் மீண்டும் அந்தப்பெண் சிப்பத்தை ஊடு கதிர்மூலம் சோதித்துப் பார்த்ததில் உள்ளே ரூபாய் தாள்கள் இருப்பது அறியப்பட்டது .எனவே மேற்கொண்டு தண்டத் தொகையும் செலுத்த வேண்டும் என்றார்
இப்படி தொடர்ந்து பணம் கேட்டு பேசியதால் பணம் அனுப்பவதில்லை என்று தீர்மானித்தார் அந்தப்பெண்
இதை எதிர்பார்த்த அவர்கள் உடனே மிரட்டல் முறைக்குத் தாவினார்கள்
தொலை [பேசி, அழைப்பு , உரையாடல் ,உணர்ச்சி மிரட்டல் என பலவகையிலும் தொடர்ந்து வதை செய்தனர்
பணம் கட்டாவிட்டால் வழக்குத் தொடரப்படும் என்றும் மிடட்டினார்கள்
இதற்கிடையில் நெதெர்லாந்து மருத்துவர் தான் விரைவில் இந்தியா வந்து எல்லாப் பிரச்சினைகளையும் சரி செய்வதா தொலைபேசியில் தெரிவித்தார்
இதை நம்பிய அந்தப்பெண் கடன்வாங்கி கேட்ட தொகை முழுதும் அனுப்பி வைத்தார்
இதன்பின் சிலநாட்களில் இந்தியாவிலிருந்து பேசிய ஒரு பெண் மருத்துவர் இந்தகியா வந்து விட்டார் .ஆனால் அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதற்கான சான்று இல்லாததால் 1.35 லட்சம் பணம் கட்டவேண்டும் இல்லையேல் 14 நாட்கள் காவலில் இருக்க வேண்டும் என்கிறார்
இது மோசடி என்பதை இப்போதாவது உணர்ந்த அந்தப் பெண் பணம் அனுப்பாமல் இருந்து விட்டார்
ஆனால் அதற்குள் அவர் இழந்த தொகை 4 1/2 லட்சம்
காவல் துறை விசாரணையில் அது போல் ஒரு மருத்துவரே இல்லை (fake identity) என்ற உணமை தெரிந்தது
பணம் அனுப்பிய வங்கிக் கணக்குகளைக் கொண்டு விசாரித்ததில் இது ஒரு திட்டமிட்ட மோசடி என்பது தெரிய வந்தது இதன் அடிப்படையில் இரண்டு நைஜீரியர்கள் கைது செய்யப்பட்டு ஐந்து ஆண்டு சிறை தண்டனை பெற்றார்கள்
இந்த இரண்டு நிகழ்வுகளிலும் புதுமையாக ஒன்றும் இல்லை
மக்கள் – படித்தவர்கள் ,படிக்கதவர்கள் எல்லோரும் திரும்பத் திரும்ப எமாறுவதுதான் என்றும் மாறத புதுமை
சைபர் குற்றப் பிரிவின் கூடுதல் பொது இயக்குனர் திரு சஞ்சய் குமார் சொல்கிறார்
“ இது போன்ற குற்றங்கள் நூற்றுக் கணக்கில் நடகின்றன
முதலில் ஒரு திருமண இணைய தளத்தில் பொய்யான தகவல்களைப் பதிவு செய்கிறார்கள்
துணை தேடுவோரின் ந்ச்ம்பிக்கைக்கு உரியவர்களாகி அவர்களை தொலைபேசி மின்னஞ்சல், உரையாடல் என பல வகையிலும் தொடர்பு கொண்டு பேசுவார்கள்
தொலை பேசி எண்கள் வெளிநாட்டு எண்களாக இருக்கும்
திருமணம் செய்வதாக ஒப்புக் கொண்டு பின் பண வேட்டையைத் துவங்குவார்கள்
மேலே சொன்னது போல அவசரச் செலவு, மருத்துவ உதவி , விபத்து என பலவாறாகப் பேசி பணம் பிடுங்குவார்கள்
அடுத்து பரிசுப் பொருள் மோசடி
அவர்கள் அனுப்பும் புகைப்படங்கள் அனைத்தும் பொய்யானவை
கடந்த ( 2022)ஆண்டு திருமண மோசடி என பதிவு செய்யப்பட்ட புகார்கள் 230
இந்த ஆண்டு (2023( ஜூலை வரை 156
(இவை =தமிழ் நாட்டு எண்ணிக்கைகள் )
புகார் கொடுக்க பெரும்பாலோனோர் தயங்குகிறார்கள்
இது மோசடி செய்பவர்களுக்கு உறுதுணையாகி விடுகிறது
ஏமாற்றப் பட்டோம் என்ற எண்ணம் தோன்றினாள் உடனே
என்ற இணைய தள முகவரியில் புகார் செய்யுங்கள்
Matrimony .com Chief product officer சாய்சித்ரா சுவாமிநாதன் சொல்கிர்ரர்
யாரிடமும் பணப் பரிவர்த்தனைகள் வேண்டாம்
வங்கிக் கணக்கு எண் , கடவுச் சொல்லை வெளியிட வேண்டாம்
தனிமையில் தனி இடத்தில் யாரையும் சந்திக்க வேண்டாம்
குடும்பத்தோடு பொது இடங்களில் சந்திப்பது பாதுகாப்பானது
ஒவ்வொரு profile லிலும் புகார் அளிக்க ஒரு இணைப்பு (லிங்க்)இருக்கிறது
தவல்கள் உண்மையாகத் தெரியவில்லை
பணம் கேட்கி றார்கள் போன்ற புகார்களைப் பதிவு செய்யலாம்
புதிய முறைகள் வரவர புதிய மோசடிகளும் கூடவே வரும்
விழிப்புணர்வோடு எச்சரிக்கையாக இருந்தால் மோசடிகளை தவிர்க்கலாம்
In search of a partner to defraud
என்ற தலைப்பில் ஹிந்து நாளிதழில் செப்டம்பர் 10 ஞாயிறு அன்று
திரு R சிவராமன் வெளியிட்ட கட்டுரையின் சுருக்கிய தமிழாக்கம் சில மாறுதல்களுடன்
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
1309 2023 புதன்
சர்புதீன் பீ

No comments:

Post a Comment