Tuesday, 19 September 2023

தமிழ் (மொழி )அறிவோம் அயினி 17092023 ஞாயிறு




 தமிழ் (மொழி )அறிவோம்

அயினி
17092023 ஞாயிறு
மூன்றெழுத்தில் ஓரு சொல்
முதல் எழுத்து முதல் உயிரெழுத்து
மூன்றாம் எழுத்து மெல்லின இகரம்
இரண்டாம் எழுத்தும் இகரம் ஆனால் வேறு இனம்
நல்ல உணவுப்பொருள் , சுவையான பழம் , ஒரு வகையில் குதிரைக்கும் உணவு
சங்க இலக்கியச் சொல்
அது என்ன ?
விடை
அயினி
சரியான விடை அனுப்பிய சகோ
சோமசேகருக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்
முயற்சித்த சகோ
ஷர்மதா , அஷ்ரப் ஹமீதா , ஜோதி , ஆ ரா விஸ்வநாதன் அனைவருக்கும் நன்றி
வந்த விடைகள் அத்தி , அவுரி, ஆசினி
விளக்கம்
முதலில் எளிதான பொருள்- சுவையான பழம்
அயினிப் பலா , அயனிப்பலா , பேச்சு வழக்கில் அகினிப் பலா என்று பல பேர் கொண்ட இது ஒரு சிறிய , இனிப்பு, புளிப்புச் சுவைஉடைய சிறிய பழம் குமரி மாவட்டத்தில் கிடைக்கும்
அடுத்து
அயினி(பெ)
• சோறு, உணவு, நீராகாரம், சிறந்த உணவு
நன்னற்கு மயினி சான்மென (மலைபடு. 467).
அயில் என்பதன் பொருள் விருப்பத்துடன் வேண்டுமளவு உண்ணுதல். அதனை அடியாகக் கொண்ட பெயற்சொல்லே அயினி.
அயினி குதிரை உணவு
உமணர் தந்த உப்பு நொடை நெல்லின்
அயினி மா இன்று அருந்த – நற் 254/7
உப்புவணிகர்கள் உப்பினை விற்று அதற்கு விலையாகப் பெற்ற நெல்லைக் குற்றிச் செய்த
உணவை உன் குதிரை இன்று உண்ண
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
௧௭0௯௨0௨௩
17 092023 ஞாயிறு
சர்புதீன் பீ

No comments:

Post a Comment