Sunday, 24 September 2023

தமிழ் (மொழி) அறிவோம்

 தமிழ் (மொழி) அறிவோம் 



அளகு


240923 ஞாயிறு 


மூன்றெழுத்துச் சொல்


இடையெழுத்து இடையினம்


இடை மாறினால் சொல் அளவாகும்


கடையெழுத்து வல்லின உகரம்


பறவையைக் குறிக்கும் அச்சொல் எது?


விடை

அளகு

பொருள்


சேவல்

எ. கா. அளகைப்பொறித்த கொடியிளையோன் (திருவிளை. அருச்ச

னை. 34).

(சேவல் கொடியோன்_முருகன்)


கோழி

மயில் இவற்றின் பெண்

வினைஞர் தந்த வெண்ணெல் வல்சி

மனை வாழ் அளகின் வாட்டொடும் பெறுகுவிர் – பெரும் 255,256


உழவர் தந்த வெண்மையான நெற்சோற்றை

மனையில் வாழும் பெட்டைக்கோழி(யைக்கொன்று) வாட்டிய பொரியலோடு பெறுவீர்


அளகு இடை மாறினால் அலகு=எண்மதிப்பை உடைய இயற்பியல் அளவு(எ--டு) கிராம் லிட்டர் மீட்டர்


விடை காண முயற்சித்த சகோ

சிராஜிதீனுக்கு நன்றி 


 இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்


24092023 ஞாயிறு 

சர்புதீன் பீ

No comments:

Post a Comment