Wednesday, 13 September 2023

இனிய இஸ்லாம் எளிய தமிழில் இனிய இஸ்லாம் 17 , திருமறை

 



இனிய இஸ்லாம்

எளிய தமிழில்
இனிய இஸ்லாம்
17 , திருமறை
14 09 2023 வியாழன்
:
‘குரானின் அழகு எனப்படும் சூராஹ் எது ?”என்ற வினாவோடு080923பதிவை நிறைவு செய்தேன்
(பத்லி ஹஜ் பற்றி என் ஐயம் ,வினா – still open )என்றும் குறிப்பிட்டிருந்தேன்
ஹஜ்ஜைப் பற்றி எனக்கு ஒரு சிறிய ஐயம் , தெளிவின்மை
“பிறருக்காக் ஹஜ் ( பதலி ஹஜ் ) என்பதில் யாருக்காக ஹஜ் செய்யப்படுகிறதோ அவர் ஹஜ் செய்வதாக நிய்யத் வைத்திருக்கக வேண்டும்”
என்று எங்கோ படித்த , கேட்டநினைவு இது என் 250823பதிவில் கேட்டது
முதலில் அது பற்றிப்பார்போம்
இந்த வினாவுக்கு, ஐயத்துக்கு
சகோ
சிராஜுதீன்
தல்லத்
இருவரும் விளக்கமான விடை அனுப்பியிருக்கிறார்கள்
இருவருக்கும் நன்றி, வாழ்த்துகள் பாராட்டுகள்
சகோ சிராஜுதீன் அனுப்பியது :
பிஸ்மில்லாஹ் ஹிர்-ரஹ்மான் நிர்-ரஹீம்!
ஹஜ்-இ-பாதலை (பத்லி) என்பது ஹஜ் செய்ய ஒருவர் நிய்யத்து வைத்து, பின்னர் அவர் ஹஜ் செய்ய முடியாதவராக ஆகிவிட்டால் அவர் சார்பாக யாரையாவது அனுப்புவது அல்லது அவர் சார்பாக ஹஜ் செய்யப்படுவதாக உயில் செய்வது 'ஹஜ்-இ- பாதல் (பத்லி)' ஆகும்.
இதற்கான நிபந்தனைகளாக ஹத்ரத் மௌலானா முஃப்தி ஷாபி (ரஹ்) அவர்கள் கூறியுள்ள சுருக்கம்:
நிபந்தனைகளில்“இரண்டு வார்த்தைகள் அதன் மீண்டும் மீண்டும் வரும். ஒருவர் அமீர், இரண்டாவது மாமூர். அவற்றின் பொருளைப் புரிந்துகொள்வது அவசியம். அமீர் என்றால் ஹஜ்ஜுக்கு ஒருவரை அனுப்புபவர் என்று பொருள். மாமூர் என்றால் ஒருவரின் சார்பாக ஹஜ் செய்பவர்.
நிபந்தனைகள் பின்வருமாறு:
ஹஜ்-இ-பாதலுக்கு அனுப்பும் நபருடன் தொடர்புடைய நான்கு நிபந்தனைகள்.
(1) அவர் ஒரு முஸ்லிம். ஹஜ் அவர் மீது கடமை என்பதை அறிந்து நிய்யத்து வைத்து ஆனால் அவரால் அதை நிறைவேற்ற முடியவில்லை.
(2) அவருடைய சாக்கு ( காரணம் ) நிரந்தரமானது.
(3) ஹஜ்-இ-பாதலுக்கு ஒருவரை அனுப்புவதற்கு முன்பு அவரால் ஹஜ் கடமையை நிறைவேற்ற முடியவில்லை.
(4) ஹஜ்-இ-பாதலுக்கு ஒருவரை நியமிப்பது அல்லது அதற்கான உயில் செய்வது.
நான்கு நிபந்தனைகள் மாமூருடன் தொடர்புடையவை:
(5) அவர் ஒரு முஸ்லிம்.
(6) அவர் நல்ல மன நிலையில் இருக்கவேண்டும் .
(7) அவர் வயது முதிர்ந்தவராக இல்லாவிட்டால், குறைந்தபட்சம் இளமைப் பருவத்திலாவது இருக்க வேண்டும்.
(😎 அவர் ஹஜ்ஜுக்கு எந்த ஊதியமும் பெற மாட்டார்.
(9) ஹஜ்-இ-பாதலைச் செய்வதில் பெரும்பாலான செலவுகளை அமீர் செய்ய வேண்டும், அவர் தன்னிடமிருந்து ஏதாவது சேர்த்துக் கொண்டால், எந்தத் தீங்கும் இல்லை.
(10) பயணத்தில் பெரும்பகுதி
வாகனத்தில் செல்ல வேண்டும் ; அவர் கால் நடையாக பயணம் செய்தால் அமீர் ஹஜ் செல்லாது.
(11) ஹஜ் பயணம் அமீர் நாட்டிலிருந்து தொடங்கப்பட வேண்டும்.
(12) அவர் ஹஜ் செல்லாததாக ஆக்கக்கூடாது.
(13) இஹ்ராம் அணியும் போது தவறாமல் அமீர் சார்பாக ஹஜ்ஜின்நிய்யத் செய்யப்பட வேண்டும்.
(15) அவர் எந்த நிலையிலும் யிலும் அமீரை எதிர்க்கக் கூடாது.
(Jawahi al-Fiqh: 4/213-214, Hajj-e-Badal, Zakaria Deoband வெளியிடப்பட்டது).
சகோ தல்லத் விடை :
[21:44, 9/13/2023] Thallath: பதிலி ஹஜ் என்பது இறந்துவிட்டவருக்காகவும் ஹஜ்ஜுக்கு செல்ல அறவே இயலாத தங்கட ம் உள்ளவர்களுக்காகவும் செய்யப்படுவதாகும்.
பதிலி ஹஜ் செய்கிறவர் ஹஜ்ஜூக்காக மட்டும் இஹ்ராம் கட்டி பின்வருமாறு நிய்யத் செய்ய வேண்டும் யா அல்லாஹ் இன்னாரின் சார்பில் ஹஜ் செய்வதற்காக நான் நாடுகிறேன் அவர் சார்பில் நான் அல்லாஹ்வுக்காக இஹ்ராம் கட்டி அவர் சார்பில் ஹஜ் செய்ய தல்பியாவும் கூறுகிறேன்.
(இன்னார் என்ற இடத்தில் அவருடைய பெயரை கூற வேண்டும் .பெயர் தெரியாவிட்டால் அவரை மனதில் உருவகப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பதிலி ஹஜ் செய்பவர் இஹ்ராம் கட்டும்போது மீ காமிலிருந்து கட்டுவதில்லை. மக்காவிலிருந்து எட்டாம் நாள் இஹ்ராம் கட்டுகிறார் .அங்கிருந்தே மினா அரபாவுக்கு செல்கிறார் .ஆகவே பேணுதல் மிக்க உலமாக்கள் பதிலி ஹஜ் செய்வதில் தமத்துஃ செய்வதை தடை செய்துள்ளனர்
.யாருக்காக பதிலிஹஜ் செய்யப்படுகிறதோ அவர் மீது ஹஜ் கடமையாய் இருந்து அவர் அதனை செய்யாமல் இறந்து விட்டிருக்க வேண்டும் அல்லது செய்ய முடியாத அளவுக்கு நோய்வாய்ப்பட்டு இருக்க வேண்டும்
.அவர் மீது ஹஜ் கடமை இல்லாத ஒருவருக்காக பதிலி ஹஜ் என்பது கிடையாது…
[21:49, 9/13/2023] Thallath: தமத்துஃ என்றால் சுகம் பெறுதல் என்பது அர்த்தமாகும். அதாவது உம்ரா செய்து முடித்து இஹ்ராமை கலைந்து சில தினங்கள் ஓய்வெடுத்துக் கொண்டபின் மீண்டும் இஹ்ராம் அணிந்து ஹஜ்ஜுக்கு செல்வதால் இதற்கு பெயர் தமத்துஃ என்று கூறப்படுகிறது. பதிலி ஹஜ் ஜில் இது தேவையில்லை.
[08:57, 9/14/2023] Thallath: ஒரு ஹதீஸில் அருளப்பட்டிருப்பதாவது. ஹஜ்ஜத்துல் விதாவின்போது சஹாபியத்தான பெண்மணி ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சமூகத்தில் வந்து, யாரசூலுல்லாஹ் ,என் தந்தை மீது ஹஜ் கடமையாக இருக்கிறது. ஆனால் வயோதிகத்தின் காரணமாக அவர்கள் வாகனத்தின் மீது அமர்ந்து பிரயாணம் செய்ய முடியவில்லை. இந்நிலையில் அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா என்று கேட்டார் ,ஆம் செய்யலாம் என்று நபி (ஸல்)அவர்கள் அனுமதி அளித்தார்கள். மற்றொரு சமயம், சகாபி ஒருவர் யாரசூலுல்லாஹ், என்னுடைய சகோதரி ஹஜ் செய்வதற்காக நேர்ச்சை செய்திருந்தார் அதனை நிறைவேற்றும் முன்பே இறந்துவிட்டார் இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார் அவள் மீது கடன் இருந்தால் நீ அதனை நிறைவேற்றுவாயா இல்லையா ?என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வினவினார்கள். ஆம், நிறைவேற்றுவேன் என பதில் கூறினார். அவ்வாறே இது அல்லாஹ்வுடைய கடனாகும் ,அதனை நிறைவேற்றுவீராக என்று அருளினார்கள்.
முதல் ஹதீஸின் மூலம் முடியாதவர்களுக்காகவும் இரண்டாவது ஹதீஸின் மூலம் இறந்தவர்களுக்காகவும் மற்றவர் பதிலி ஹஜ் செய்யலாம் என்பது விளக்கப்படுகிறது .இதில் இரண்டாவது ஹதீஸில் இறந்தவருடைய நிய்யத் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
இரண்டு விரிவான விடைகள் மூலம் ஓரளவு தெளிவு பிறந்திருக்கிறது
இனி குரானின் அழகு எனும் சூராஹ்
சூராஹ் 55 அர்ரஹ்மான்
சரியான விடை எழுதி வாழ்த்து , பாராட்டுப் பெறுவோர்
சகோ
சிராஜுதீன் முதல் சரியான விடை
தல்லத்
இந்த உலகுக்கு ஒரு அருட் கொடையாகவும் , மக்களுக்கு வழிகாட்டியாகவும் இறைவன் அருளிய திருமறையின்
ஒவ்வொரு எழுத்தும் ,சொல்லும் அழகுதான்
இந்த அரஹ்மான் சூராஹ் அமைப்பின் அடிப்படையில் (Poetic structure ) சிறப்படைகிறது
78 வசனங்கள் கொண்ட சுராஹ் அர்ரஹ்மான் முழுதும் பண்டைய அராபிய பாடல்கள் போல சஜ் என்ற அமைப்பில். சொல் நயத்தடன் கூடிய சிறந்த ஒலி அமைப்பில் படைக்கப்பட்டிருக்கிறது.
இந்த அமைப்பில் உள்ளவை செவிக்கு மிகவும்
இனிமையாக
இருக்கும், மனதில் எளிதில் பதிந்து விடும்
இன்னொரு சிறப்பான அமைப்பு refrain எனப்படும் பல்லவி ;
فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏
Fabi-ayyi ala-i rabbikumatukaththiban
— Transliteration
Which is it, of the favours of your Lord, that ye deny?
— Pickthall
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
இந்த வசனம் மொத்தம் உள்ள 78 வசனங்களில் 31 முறை வருகிறது
சூராவின் அறிமுகப்பகுதி – 13 வசனங்கள்
இரு வரியில் அமைந்தவை -26
மூன்று வரியில் அமைந்தவை -4
இவை ஒவ்வொன்றின் இறுதியிலும் பல்லவி போல “ பபி அய்யி ......” என்ற வசனம் வருகிறது
“தபாறக்க ----“ என்று இறைவன் புகழ் பாடும் வசனத்துடன் இந்த சுராஹ் நிறைவு பெறுகிறது
இவ்வளவு சிறப்பான கவிதை அமைப்புள்ள இந்த அர்ரஹ்மான் சுராஹ்
“குரானின் அழகு “ என்றும் “குரானின் அலங்காரம் “ என்றும் அழைக்கபடுகிறது
மேலும் சில சிறப்புகள்
இறைவனின் திரு நாமத்தை தலைப்பாகக் கொண்ட ஒரே சூராஹ்
மனிதர்களையும் ஜின்னகளையும் ஒருமிக்க அழைப்பது
தொடர்ந்து வரும் பதிவுகளில் குரான் பற்றிய சில செய்திகளைப் பார்ப்போம்
நிறைவாக ஒரு எளிய வினா
குர்ஆனில் மக்கிய்யா சூராக்கள் மதனிய்யாசூராக்கள் என்பது என்ன?
இறைவன் நாடினால் விடை விளக்கத்துடன் நாளை சந்திப்போம்
27 ச fபர் (2) 1445
14 09 2023 வியாழன்
சர்புதீன் பீ

No comments:

Post a Comment