Sunday, 15 September 2024

காலச்சக்கரம் 04092024புதன்





 காலச்சக்கரம்

04092024புதன்
1977 திரூர் கேரளா
பள்ளி செல்லும் வயது வந்து விட்டது மகனுக்கு
அங்குள்ள நல்ல convent school ஒன்றில் போய் கேட்டு வந்தோம்
போகும்போதெல்லாம் சிற்றுண்டி தேநீர் கொடுத்து உபசரிப்பார்கள்
பள்ளி திறக்கும் நாளைக் குறிப்பிட்டு குழந்தையை அனுப்பி வையுங்கள் என்று சொல்லி விட்டார்கள்
அந்த நாளில் நான் வங்கிக்குப் போய்விட்டேன்
அத்தாவும் ஊரிலிருந்து வந்த மைத்துனர் சக்ரவர்த்தியும பள்ளிக்குப்போய் மகனை விட்டு விட்டு வந்தார்கள்
பேரனைப் பார்த்து ஐயா (அத்தா) கண்ணீர் ஐயாவைபார்த்து பேரன் கண்ணீர்
ஏதோ கடல் கடந்த பயணம் போவது போல் பிரியா விடை பெற்றுக்கொண்டார்களாம்
இதை சொல்லி சொல்லிச் சிரித்தார் மைத்துனர்
மகன் நன்றாகப் படித்தார் .
ஒரு கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது அவருக்கு வேட்டி கட்டி கையில் ஒரு விசிறியும் கொடுத்திருந்தார்கள்
உண்மையிலே அவருக்கு வேர்க்க கையிலிருந்த விசிறியை வைத்து வீசிக்கொண்டார்
இதைப்பார்த்து அனைவரும் சிரித்து கரவொலி எழுப்பிப் பாராட்டினார்கள்
மலரும் நினைவுகளில் நீந்தினால் நீந்திக்கொண்டே அதில் மூழ்கி விடுவேன்
எனவே கரையேறி நிகழ் காலத்துக்கு வந்து விட்டேன்
2024
பேரன் கல்லூரிக்குப் போகிறார் விடுதியில் தங்கிப்படிப்பு
பிடித்த கல்லூரி, தெரிவு செய்த பாடப்பிரிவு கிடைத்து விட்டது
இறைவன் அருளால்
எல்லோருக்கும் மகிழ்ச்சி,உற்சாகம் மன நிறைவு
இதை எல்லாம் தாண்டி மனதில் ஒரு இறுக்கம்
எதிலும் ஈடுபாடு இல்லாமல் ஒரு வெறுமை
எல்லா வேலைகளையும் செய்து விடுகிறேன் ஆனால் கடனுக்குச் செய்வது போல் ஒரு உணர்வு
இது எப்படி எப்போது சரியாகும் என்பது இறைவன் நாட்டம்
நாலு ஆண்டு நாலு நிமிஷமாக ஒடி விடும்
Subject to theory of relativity
மாதம் ஒரு முறை வீட்டுக்கு வந்து போகலாம்
படித்துப்பட்டம் , பாராட்டுடன் பேரன் வாழ்வு சிறந்து விளங்க எல்லாம் வல்ல இறைவன் அருள் செய்வானாக
அந்த நினைப்பில் மனதில் உற்சாகம் பொங்கி என் மனநிலை சரியாகி விடும் என நம்பிக்கை
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
04092024புதன்
சர்புதீன் பீ

No comments:

Post a Comment