Sunday, 15 September 2024

ஆட்சியும் அதிகாரமும் 11092024 புதன்




 ஆட்சியும் அதிகாரமும் 

11092024 புதன் 


Power vests with those who exercise it


அதிகாரத்தைப் பயன் படுத்துபவர்களுக்கே அதிகாரம் சொந்தமானது 


இதை விளக்க எனக்குத் தெரிந்த ஒரு சிறிய எடுத்துக்காட்டு;


நான் வங்கியில் பணியாற்றிய காலத்தில் 

விதிகளுக்கு உட்பட்டு வணிகர்களுக்கு 30 லட்சம் வரை கடன் கொடுக்கும் அதிகாரம் பெரும்பாலான கிளை மேலாளர்களுக்கு உண்டு 


ஆனால் வெகு சிலரே இதைப் பயன்படுத்தி கடன் கொடுப்பார்கள் 


இன்னொரு எடுத்துக் காட்டு:

தினக்கூலியாக பணிபுரியும் கடைநிலை ஊழியர்களுக்கு இவ்வளவு ஊதியம் கொடுக்கலாம் என்று கிளை மேலாளர்களுக்கு அனுமதி இருக்கிறது 


ஆனால் அந்த அளவை விட குறைத்தே கொடுப்பார்கள் 


எதற்கு இந்தக் கதையெல்லாம் இப்போது என்கிறீர்களா?


எல்லாம் நகராட்சி ஆணையராகப் பணியாற்றிய எங்கள் அத்தா ஹாஜி கா பீர்முகம்மது அவர்களின் பெருமையை எடுத்துச் சொல்லத்தான்



Commissioner ஆணையர் என்ற சொல்லே அதிகாரத்தின் அடையாளமாகும்

எடுத்துக்காட்டு

Commissioners of Police

Income Tax commissioner

Election Commissioner

எனப்பல

அந்த வகையில் நகராட்சி ஆணையர் என்பது ஒரு வலிமையும் அதிகாரமும் மிக்க powerful post


 அதை முழுமையாக இல்லாவிட்டாலும் முக்கால் வாசியாவது பயன்படுத்தினால்  நிர்வாகம் சீராகும் 


தேர்தல் ஆணையர் என்ற ஒரு பதவி இருக்கிறது  அதற்கு இவ்வளவு அதிகாரம்.__தலைமை நீதியரசருக்கு இணையாக --இருக்கிறது என்பது திரு

 சேஷன் அந்தப் பதவிக்கு வந்த பிறகுதான் நமக்கெல்லாம் தெரிந்தது


__


கடலூரில் நாங்கள் வசிக்கும் பகுதியில் பன்றிகள் தொல்லை அதிகம் 


நானும்  முதல்வர் ‌மாவட்ட ஆட்சியர் சட்டசபை உறுப்பினர் குடியிருப்போர் நல சங்கம் உள்ளூர் கட்செவிக்குழு என எழுதி எழுதி அலுத்துப் போய் எழுதுவதை விட்டு விட்டேன்


அத்தா பணியாற்றிய ஊர்களில் இது போல் பிரச்சினை இருந்தால் ஊரெங்கும் அறிவிப்பு ஒட்டப்படும் __

ஒரு நாளைக் குறிப்பிட்டு

அதன் பின் தெருவில் திரியும் பன்றிகள் சுட்டுத் தள்ளப்படும் _

என்று


வெறும் அறிவிப்பாக இல்லாமல் செயல்படுத்தப்படும்


இது ஆணையரின் அதிகாரத்துக்கு உட்பட்ட செயல் 

எனவே யாரும் சட்டத்தின் வழியே எதிர்ப்புத் தெரிவிக்க முடியாது 


__


வெளி நாட்டிலிருந்து திரும்பிய செல்வந்தர் ஒருவர் அசைவ உணவு விடுதி துவங்க எண்ணி கட்டுமானப் பணிகளை நிறைவு செய்து விட்டு அத்தாவை மேற்பார்வையிட அழைத்துச் சென்றார் 


சமையல் கூடத்தில் புகை போக்கி எதுவும் இல்லை 

கேட்டதற்கு இங்கு விறகடுப்பெல்லாம் கிடையாது

மின்சாரம் 

எரிவாயு அடுப்புகள்தான் இருக்கும் 

எனவே புகை போக்கி தேவை இல்லை என்று மிக அலட்சியமாகப் பேசினார் 


உணவு விடுதி போன்ற அதிகம் சமையல் செய்யும் இடங்களில் புகையும் வெப்பமும் இல்லாமல் இருக்காது 

எனவே புகை போக்கி அமைந்த விட்டு பிறகு அனுமதி கேளுங்கள் --

இது அத்தா 


உடனே அவர் எனக்கு அவரைத் தெரியும் இவரைத் தெரியும் மேலிடத்தில் எனக்கு நிறைய செல்வாக்கு இருக்கிறது 

என்று சாம பேத தான தண்ட முறைகளை பயன்படுத்த முயற்சித்தார் 


அத்தா ஒரே நிலையில் நின்று 

விதிகளின் படி கட்டுமானம் இருந்தால் மட்டுமே அனுமதி கிடைக்கும் 

என்று சொல்லி விட்டார்கள் 


நாங்கள் அந்த ஊரில் இருந்தவரை அந்த உணவு விடுதி திறக்கப் பட்ட. நினைவில்லை 


___


ஆண்டு தோறும் அந்த ஊரில் பெரிய அளவில் பொருட்காட்சி நடக்கும் 

நடத்துபவர்கள் பெரிய அரசியல் தலைவர்களாகத்தான் இருப்பார்கள் 


ஓரு முறை விதிகளுக்குப் புறம்பாக பொருட்காட்சியில் 

இசை நடனம் record dance நடத்தப் பட்டது 


இது அத்தாவின் கவனத்திற்கு வர

உடனடியாக பொருட்காட்சிக்கான அனுமதி நிறுத்தப் பட்டு பொருட்காட்சி மூடப்பட்டது 

__

நிறைவாக இன்னொரு நிகழ்வு 


விடுதலை நாள் ஆண்டு விழாவுக்காக மாணவிகளுக்கு பல நாட்களாக சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டது 

  

வேறொரு பெரிய பள்ளியில் நடக்கும் விழா நிகழ்வுக்கு மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டனர் 


மேடையேறுமுன் நகராட்சிப் பணியாளர் ஒருவர் அங்கு வந்தார் 


மாணவிகளை படிக்கும் பள்ளியிலிருந்து வெளியே அழைத்துச்செல்ல நகராட்சியில் முறையான அனுமதி பெறவில்லை என்பதால் உடனடியாக படிக்கும் பள்ளிக்குத் திரும்ப ஆணை

(அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த எங்கள் உடன்பிறப்பு மிகவும் எரிச்சல் பட்டாராம்)


இதெல்லாம் சின்ன தவறுகள் 

இவ்வளவு கடுமை தேவையில்லை என்ற எண்ணம் வரலாம் 


சின்னச் சின்ன தவறுகள் தான் பூதாகராமாக வளர்ந்து மிகப் பெரிய தவறுகளாகின்றன


முன்பே அத்தாவின் சிறப்புகள் பற்றி எழுதியிருக்கிறேன் 


எனவே இதோடு நிறைவு செய்கிறேன் 


பொருட்காட்சி 

பள்ளி நிகழ்வு 

பற்றித் தெரிவித்த

சகோ நூர்ஜகானுக்கு நன்றி 



இறைவன் நாடினால் நாளை திருமறையில் சிந்திப்போம் 


11092024 புதன் 

சர்புதீன் பீ

No comments:

Post a Comment