தமிழ் (மொழி)அறிவோம்
மிசை
22 092024 ஞாயிறு
இரண்டே எழுத்தில் ஒரு சொல்
---
இதற்கு மேல் எழுத்து பற்றிக் குறிப்பு கொடுத்தால் முழுச் சொல்லையும் சொன்னது போலாகிவிடும்
பொருள் என்று பார்த்தால் உண்பது பற்றிய சொல்
மேல் என்றும் பொருள்படும்
தமிழ் படித்த அனைவருக்கும் இந்தச் சொல் தெரிந்திருக்கும்
என்ன அந்தச் சொல் ?
விடை
மிசை
மலர் மிசை-----குறள் 3
மிசை பொருள்
1 மேல்
சிந்து நதியின் மிசை நிலவினிலே (பாரதியார்)
பொருள்
மிசை(வி)
2. குடி
கரும்பின் தீஞ்சாறு விரும்பினிர் மிசைமின் (பெரும்பாணாற்றுப்படை)
2. உண், தின்
அவிழ்ப்பதம் மறந்து பாசடகு மிசைந்து (புறநானூறு)
விடை அனுப்ப முயற்சித்த சகோ ஹசன் அலிக்கு நன்றி
இறைவன் நாடியால் நாளைஆங்கிலத்தில் சிந்திப்போம்
௨௨௦௯௨௦௨௪
22 092024 ஞாயிறு
சர்புதீன் பீ
CBROA
தோழா,
நீங்கள் தமிழ் மொழியில் வல்லுநர் என்பதை ஒத்துக் கொள்கிறோம். தாங்கள் தமிழ் மொழியின் உயர்வுகளை மற்றவர்கள் தெரிந்து கொள்ள உதவுங்கள்.
தயவுசெய்து புதிர் போடவேண்டாம். rajendran
இனிய நண்பரே
தோழரின் பதிவின் நோக்கம் சக நண்பர்களின் போற்றுதலைப் பெறவேண்டும் என்பதல்ல. ஒரு சிந்தனை பொழுதுபோக்கு மட்டுமே. அது ஒரு போட்டித்தேர்வல்ல. விருப்பமானவர்கள் மட்டும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம். இல்லையெனில் தவிர்க்கலாம். கட்டாயமில்லை.velvan
[07:42, 22/09/2024] SHERFUDDIN P: சகோ ராஜேந்திரன் அவர்களுக்கு
இந்தப் பதிவு எனக்கானது என்ற எண்ணத்தில் மறுமொழி சொல்கிறேன்
அதை உறுதிசெய்து கொள்ள தங்களுக்கு whatsapp call செய்தேன்
தொடர்பு கிடைக்கவில்லை
அறிந்ததை தெரிந்ததை பகிர்ந்து கொள்வது என்பது
இஸ்லாம் வலியுறுத்தும் மனிதப் பண்பு
Sharing is caring என்பது பொருட் செல்வம் போல் அறிவுக்கும் பொருந்தும்
இதன் அடிப்படையில்தான் என் பதிவுகள்
மற்றபடி என் திறமையை வெளிப்படுத்துவதோ உங்கள் அறிவை சோதிப்பதோ என் நோக்கம் அல்ல
என்அறிவின் அளவு எனக்குத் தெரியும்
பலமுறை இதுபற்றி நான் எழுதியிருக்கிறேன்
வல்லுநர் என்பது
வஞ்சப் புகழ்ச்சி யின் உச்ச கட்டம்
பிறகு உங்களைப் போன்ற அறிஞர்களை எப்படி அழைப்பது!!
உங்கள் பதிவு குழுவில் வந்ததால் நானும் குழுவிலேயே பதிவு செய்கிறேன்
If I have hurt you
Sorry
நட்புடன்
சர்புதீன் பீ
[07:44, 22/09/2024] SHERFUDDIN P: மிக்க நன்றி சகோ
என் சார்பில் மறுமொழி சொன்னதற்கு to velavan
[08:24, 22/09/2024] CB Somaseker: நண்பர்களே,
குழுவில் உள்ள நாம் அனைவருமே வயதிலும் அனுபவத்திலும் முதிர்ந்தவர்கள்
ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு துறையில் அனுபவக் களஞ்சியங்கள் அபரிமிதமாக இருக்கிறது.
அவற்றின் வடிகாலாக மற்றவர்களோடு பகிரும் நல்ல வாய்ப்பாக இந்தக் குழு இருக்கிறது.
யாரையும் புண்படுத்தாத வகையில் பகிரப்படும் பதிவுகள் அனைத்துமே வரவேற்புக்குரியவையே
பதிவுகள் அனைத்தும் கல்யாணப் பந்தியில் பறிமாறப்படும் விருந்தினைப் போன்றது. சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இனிப்பைத் தவிர்ப்பதைப்போல் ஜலதோஷம் உள்ளவர்கள் தயிர் சாதம் தவிர்ப்பதைப் போல் அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் ஐஸ் கிரீம் தவிர்ப்பதைப்போல் ஆர்வமில்லாத பதிவுகளை படிப்பதையும் பதில் சொல்வதையும் தவிர்ப்பதில் தவறில்லை. எல்லோருக்கும் எல்லாம் பிடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இங்கில்லை
பந்தியில் பாயசம் பிடித்தவர்களும் இருப்பார்கள்.
பருப்பு சாதம் விரும்புபவர்களும் இருப்பார்கள். பறிமாறத்தானே வேண்டும். விரும்பியதை உண்ணுங்கள் வேண்டாதவற்றை விலக்குங்கள். வேண்டாம் என்று சொல்லாதீர்கள்.
அது பறிமாறுபவரை பங்கப்படுத்தும். சமயோசிசத்திற்கும் சகிப்புத்தன்மைக்கும் உதாரணமாகத் திகழ்வது நம் குழு. அந்த சிறப்பு தொடரட்டும் தெரிந்தோ தெரியாமலோ நெருடலான சில நிகழ்வுகள் இடம் பெறுகின்றன. தனிப்பட்ட தாக்குதல் என யாரும் தவறாக எண்ணாமல் வழக்கம் போல் நம் பணியையும் பகிர்வையும் தொடர்வோம். அடுத்தவர் மனதை புண்படுத்தாத பதிவுகள் அனைத்தும் பொருத்தமான பதிவுகள்தான் என்பதைப் புரியாதவர்கள் அல்லவே நாம்.
அன்புடன் நண்பன்
தோழரே, தவறான புரிதலோடு கேட்டுவிட்டேன் என்றெண்ணுகிறேன். தாங்கள் மனம் புண் பட வைத்து விட்டேன். தமிழனாய், தமிழின் தகவமைப்புகளை அறிந்து கொள்ளும் ஆவலில் அனுப்பிய தகவலுக்கு மன்னிப்பு கோருகிறேன்.தங்கள் பணி தொடர, சிறக்க வேண்டுகிறேன். என் ஆவலால் ஏற்பட்ட சிரமத்திற்கு மீண்டும் மன்னிக்க வேண்டுகிறேன்.
என்றும் அன்புடன்,
இராஜன்.
எங்கள் குழுவில் அனைத்து தோழர்களும் ஆர்வத்துடன் பங்கேற்கிறார்கள்..இது போட்டியல்ல*மொழியறிவு பகிர்தலே நோக்கம்..புதிதாய் இணைந்தோர்க்கு புதிராய் இருக்கலாம்.. எவரையும் பங்கம் படுத்தவில்லை.பல காலமாய் தொடர்ந்து கொண்டு உள்ளோம்.இது தொடரும்..அன்னம் (?)போல் நீரோ/பாலோ பாகுபடுத்தி எடுத்துக் கொள்ளுங்கள்.. எங்கள் நிலையில் மாற்றமில்லை தோழர் ganesa subramaniam
No comments:
Post a Comment