Thursday, 26 September 2024

திருமறை குரான் 46:15 27092024 வெள்ளி




 திருமறை குரான்

46:15
27092024 வெள்ளி
-------. (கருவில் )) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும்.-------
இது எந்த குரான் வசனத்தின் பகுதி ?
விடை
திருக்குரான் சூராஹ் 46 (ஸூரத்துல் அஹ்காஃப்)---மணல் குன்றுகள் வசனம் 15
சரியான விடை அனுப்பி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
சிராஜுதீன் முதல் சரியான விடை
ஷிரீன் fபாருக்
ஷர்மதா
சிறப்பு நன்றி முயற்சித்த சகோ ரவி ராஜுக்கு
“மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி அறிவிறுத்தினோம்
; அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்;
(கருவில் ) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும்.
அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும்: “இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக
நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன்; அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்” என்று கூறுவான்” (46:15)
தாய்மையின் சிறப்பை எடுத்துச் சொல்லும் இந்த வசனம்
ஒரு சட்டத் தெளிவுக்கும் அடிப்படையாகா இருக்கிறது
சுருக்கமாகச் சொல்ல முயற்சிக்கிறேன் :
திருமணம் ஆகி ஆறு மாதம் நிறைவுற்ற ஒரு பெண் அழகான முழுமையான வளர்ச்சி அடைந்த குழந்தையைப் பெற்றேடுக்கிறார்
இதையே காரணமாக வைத்து பெண்ணின் துணைவன் மணமுறிவு கேட்கிறார்
அப்போது ஆட்சிப்பொறுப்பில் இருந்த உத்மான் ரலி அவர்கள் மண முறிவுக்கு அனுமதி கொடுக்கிறார்கள்
இதை அறிந்து அங்கு வந்த ரலி அலி அவர்கள் தீர்ப்பு சரியில்லை என்று சொல்கிறார்கள்
---- (கருவில் ) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும் ----(46:15)
------தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமான இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும்;.------(2:233)
-------இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன்-----(31:14)
iஇந்த மூன்று இறை வசனங்களை மேற்கோள் காட்டி
மொத்தம் முப்பது மாதங்களில் பாலூட்டும் இரண்டு ஆண்டு காலம் போக ஆறு மாதத்தில் குழந்தை முழு வளர்ச்சி அடையலாம்
எனவே இதை மட்டும் காரணமாக வைத்து மணமுறிவு அனும்திப்பது தவறு
என்று எடுதுச் சொகிறார்கள்
இதனை ஒப்புக்கொண்ட உத்மான் அவர்கள் தீர்ப்பை திருத்தி விடுகிறார்கள்
இறைவன் நாடினால் நாளை தமிழில் சிந்திப்போம்
23ரபியுல் அவ்வல்(3) 1446
27092024 வெள்ளி
சர்புதீன் பீ

No comments:

Post a Comment